Home தேசிய national tamil Tamil News Updates: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு

Tamil News Updates: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு

1
0

SOURCE :- INDIAN EXPRESS

  • Jan 31, 2024 23:43 IST

    இ.டி, ஐ.டி, சி.பி.ஐ விசாரணை அமைப்புகளாக இல்லை – ராகுல் காந்தி விமர்சனம்

    காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இ.டி, ஐ.டி, சி.பி.ஐ விசாரணை அமைப்புகளாக இல்லை; எதிர்க்கட்சியை ஒழிக்க பா.ஜ.க-வின் கருவியாகிவிட்டன. அதிகார வெறியில் ஜனநாயகத்தை அழிக்கும் பரப்புரையை பா.ஜ.க நடத்துகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார்.

  • Jan 31, 2024 23:43 IST

    இ.டி, ஐ.டி, சி.பி.ஐ விசாரணை அமைப்புகளாக இல்லை – ராகுல் காந்தி விமர்சனம்

    காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இ.டி, ஐ.டி, சி.பி.ஐ விசாரணை அமைப்புகளாக இல்லை; எதிர்க்கட்சியை ஒழிக்க பா.ஜ.க-வின் கருவியாகிவிட்டன. அதிகார வெறியில் ஜனநாயகத்தை அழிக்கும் பரப்புரையை பா.ஜ.க நடத்துகிறது” என்று விமர்சனம் செய்துள்ளார்.

    Jan 31, 2024 21:31 IST

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பை சோரன் தேர்வு 

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் அமைச்சர் பன்னா குப்தா அறிவித்துள்ளார். சட்டமன்ற கட்சித் தலைவராக சம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    Jan 31, 2024 21:29 IST

    ஜார்க்காண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஹேமந்த் சோரன் கைது

    ஜார்க்காண்ட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், நில மோசடி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 6 மணி நேர விசாரணைக்குப் பிறகு, ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    Jan 31, 2024 20:45 IST

    காங்கிரஸிற்கு 1 சீட் கூட கிடையாது- மம்தா பானர்ஜி திட்டவட்டம்

    “மேற்கு வங்கத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருந்தேன்; ஆனால் அவர்கள் கூடுதலாக சீட் வேணும் என்கிறார்கள்.
    நான் இப்போது சொல்கிறேன், அவர்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன்” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    Jan 31, 2024 20:45 IST

    காங்கிரஸிற்கு 1 சீட் கூட கிடையாது- மம்தா பானர்ஜி திட்டவட்டம்

    “மேற்கு வங்கத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருந்தேன்; ஆனால் அவர்கள் கூடுதலாக சீட் வேணும் என்கிறார்கள்.
    நான் இப்போது சொல்கிறேன், அவர்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மாட்டேன்” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    Jan 31, 2024 20:41 IST

    ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ராஜினாமா 

    ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் ஹேமந்த் சோரன். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஹேமந்த் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

    Jan 31, 2024 20:05 IST

    3 நாள் மிக்ஜாம் புயலை கூட சமாளிக்க முடியவில்லை; திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

    அதிமுக ஆட்சி காலத்தில் வர்தா, நிவர் என பல புயல்களை சந்தித்தோம், 6 லட்சம் மரங்கள் புயலால் சாய்ந்தன; அப்போது புயல் வேகத்தில் அதை சரி செய்தோம்.
    ‘மிக்ஜாம்’ புயலின்போது 3 நாட்களுக்கு மக்களுக்கு உணவு கூட கொடுக்க இவர்களால் முடியவில்லை.
    வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக  அரசு எடுக்காததால்,  தென் மாவட்டங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.

    Jan 31, 2024 19:51 IST

    ராகுல் காந்தி கார் கண்ணாடி உடைப்பு

    மேற்கு வங்க எல்லையில் ராகுல் காந்தி யாத்திரை சென்ற போது அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    Jan 31, 2024 19:49 IST

    இந்தியாவின் விளையாட்டு தலைநகர் தமிழ்நாடு; உதயநிதி

    இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு இருப்பதற்கு அனைத்த தகுதிகளும் உள்ளன என கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வாயிலாக நிரூபித்துள்ளோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்

    Jan 31, 2024 18:45 IST

    மதுரை மீனாட்சியம்மன் கோவில்; விதிமீறல் கட்டடங்களை அனுமதிக்க முடியாது: நீதிமன்றம்

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி விதிமீறி உயரமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் எத்தனை? இதில் மதுரை மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பதிலளிக்குமாறு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

    Jan 31, 2024 17:43 IST

    நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் : கைதான 6 பேர் பரபரப்பு புகார்

    நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் கைதான 6 பேரும், உடலில் மின்சாரம் பாய்ச்சி அரசியல் தலைவர்களை சிக்க வைக்க எங்களை கொடுமைப்படுத்தினர் என டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இந்த புகாரில், போலீசார் தங்களை கொடுமைப்படுத்தினர், வெற்றுத் தாளில் கையெழுத்திட நிர்பந்தித்தனர். சமூக வலைதள கணக்குகள், இமெயில், செல்போன்களின் பாஸ்வேர்டு ஆகியவற்றை அளிக்குமாறு நிர்பந்தித்தனர். பாலிகிராஃப் சோதனை செய்யும் போது அரசியல் கட்சிகளின் பெயரை தெரிவிக்குமாறும் மிரட்டப்பட்டோம் என்று புகார் அளித்துள்ளனர்.

    6 பேரின் புகார் மனு தொடர்பாக பதில் அளிக்க டெல்லி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணை பிப்.17ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    Jan 31, 2024 17:37 IST

    கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா? போக்குவரத்து ஆணையர் பதில் அளிக்க உத்தரவு

    தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா என்பது குறித்து, தமிழக போக்குவரத்து துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே தனியார் பேருந்துகளை இயக்க வேண்டுமென ஜன. 24ல் போக்குவரத்து துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் வழக்கு பதிவு செய்துள்ளது.

    பயணிகள் மட்டுமின்றி, தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால்  வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

    Jan 31, 2024 17:08 IST

    குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு செலவுத்தொகை உயர்த்தி வழங்க உத்தரவு

    மதிய உணவுத் திட்டத்தின் கீழ், 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

    Jan 31, 2024 16:39 IST

    அமலாக்கத்துறை அதிகாரிகள் வன்கொடுமை வழக்கு : ஜார்க்கண்ட் முதல்வர் புகார்

    டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அத்துமீறி நுழைந்து பொருட்களை எடுத்துச்சென்றதாக குற்றம் சாட்டியுள்ள ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

    Jan 31, 2024 16:10 IST

    சண்டிகர் தேர்தல் பா.ஜ.க வெற்றி: பஞ்சாப்-ஹரியானா கோர்ட் மறுப்பு

    சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. இச்சம்பவம் குறித்து சண்டிகர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டை திருத்தி இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்ததால் பாஜக வெற்றி பெற்றது. வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. 

    Jan 31, 2024 16:00 IST

    படுக்கை அறையில் ஸ்பை கேமிரா 

    சென்னை ராயபுரத்தில் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த குடும்பத்தினரின் படுக்கை அறையில் ஸ்பை கேமிரா வைத்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    Jan 31, 2024 15:59 IST

    2வது இடம் பிடித்த தமிழ்நாடு அணி 

    சென்னை, திருச்சி உள்பட 4 நகரங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. 97 பதக்கங்களை வென்று முதன்முறையாக 2வது இடம் பிடித்து தமிழ்நாடு அணி சாதனை படைத்துள்ளது. 

    38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்துள்ளது. 

    Jan 31, 2024 15:58 IST

    செந்தில் பாலாஜியின் காவல் 18 வது முறையாக நீட்டிப்பு 

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    ஜூன் 14ல் கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தபட்டார். 

    Jan 31, 2024 15:34 IST

    இந்தியா கூட்டணியில் ஏன் இல்லை? – மம்தா பானர்ஜி – பதில் 

    “மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத காங்கிரசுக்கு 2 எம்.பி. சீட் தருவதாக கூறியதை காங்கிரஸ் ஏற்கவில்லை. காங்கிரஸோ அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்டனர். இப்போது நான் ஒரு சீட் கூட அவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை. பா.ஜ.க-வுடனான எங்கள் போராட்டம் தொடரும்,  தனித்து போராடுவோம். பா.ஜ.க-வை தோற்கடிக்க எங்களால் முடியும்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

    Jan 31, 2024 15:08 IST

    கொடநாடு வழக்கு – நாளை மீண்டும் விசாரணை

    கொடநாடு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ள சயானிடம் சிபிசிஐடி போலிசார் நாளை மீண்டும் விசாரணை செய்ய உள்ளது. நீதிமன்ற ஜாமினில் உள்ள சயானை நாளை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. 

    கடந்த 2 முறை சம்மன் வழங்கியும் ஆஜராகாத சயான் நாளை காலை விசாரணைக்கு ஆஜராக உள்ளார்

    Jan 31, 2024 14:01 IST

    ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டாம்; தி.மு.க நிர்வாகிகள் கோரிக்கை

    ராமநாதபுரம் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டாம் என, திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிடம் ராமநாதபுரம் திமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தி.மு.க வேட்பாளரை முன்னிறுத்த ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாக கோரிக்கை வைத்துள்ளனர்

    Jan 31, 2024 13:51 IST

    இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விளக்கம்

    இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன், அதை ஏற்கவில்லை கூட்டணிக்காக நான் கடுமையாக முயற்சித்தேன், ஆனால் அவர்கள் ஒரு விஷயம் கூட செய்யவில்லை. இன்று வரை எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்யவில்லை. அதனால்தான் இந்தியா கூட்டணியை விட்டுவிட்டு, முதலில் எங்கு இருந்தேனோ அங்கேயே திரும்பி வந்துவிட்டேன். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு தன்னால் தான் நடந்தது என்று ராகுல் காந்தியால் எப்படி கூற முடியும்? சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடந்தது என்பதை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? என நிதிஷ்குமார் கூறியுள்ளார்

    Jan 31, 2024 13:34 IST

    பாரத் ஜோடோ நீதி யாத்திரை: மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைப்பு

    வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    Jan 31, 2024 13:28 IST

    தி.மு.க எம்.எல்.ஏ.-வின் மகன் – மருமகள் ஜாமின் மனு; காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க உத்தரவு

    வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    Jan 31, 2024 13:16 IST

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாஸ்டர் நீதிமன்றத்தில் முறையீடு

    பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான மான நஷ்ட ஈடு வழக்கில் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாஸ்டர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. சாட்சியப்பதிவிற்காக வந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    Jan 31, 2024 13:01 IST

    தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஸ்பெயின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்

    தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஸ்பெயின் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவன நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர். தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது. பெருந்துறையில், 400 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலை நிறுவ, ரோக்கா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, பெருந்துறையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்ய ரோக்கா நிறுவனம் உறுதி அளித்துள்ளது

    Jan 31, 2024 12:56 IST

    10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை – குடியரசுத் தலைவர்

    கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 3 கோடியிலிருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டில் மாதாந்திர சராசரி ஜி.எஸ்.டி வரி வருவாய் 1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது. நான்கு லட்சம் கிமீ.க்கும் அதிகமான புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 100க்கும் அதிகமான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏழைகள் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு பணியாற்றி வருகிறது என குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்

    Jan 31, 2024 12:24 IST

    எந்த ஒரு பயனாளியும் விட்டுவிடாமல் அரசின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதை எனது அரசின் இலக்கு – குடியரசுத் தலைவர்

    எந்த ஒரு பயனாளியும் விட்டுவிடாமல் அரசின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பதை எனது அரசின் இலக்கு. ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது. உதான் திட்டத்தின் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு குறைந்த விலையில் விமான டிக்கெட் கிடைக்கிறது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.4 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த விலைவாசி உயர்வு, தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது. ரூ.2.5 லட்சத்தில் இருந்த தனிநபர் வருமான வரி விலக்கு, தற்போது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்

    Jan 31, 2024 12:02 IST

    ஐஜிக்கள் பணியிட மாற்றம்

     ஐஜிக்கள் பணியிட மாற்றம் . தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன், தென்மண்டல ஐஜியாக பணியிட மாற்றம்; தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயரை, வடக்கு மண்டல ஐஜியாக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. 

    Jan 31, 2024 11:50 IST

    விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பிப்.14-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பு

    விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்; வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் பெறுப்பு நீதிபதி ஆறுமுகம் பிப்.14-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்

    Jan 31, 2024 11:48 IST

    இந்திய நாட்டு மக்களுக்கு தேவைப்பட்ட அனைத்தையும் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு செய்துள்ளது

    சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது; பல ஆண்டுகளாக இந்திய நாட்டு மக்களுக்கு தேவைப்பட்ட அனைத்தையும் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு செய்துள்ளது; மேக் இன் இந்தியா திட்டம் மூலம் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது; உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு மையமாக இந்தியா மாறி வருகிறது”

    Jan 31, 2024 11:47 IST

    சந்திராயன் 3 திட்டத்தின் வெற்றி பெருமைக்குறியது

    சந்திராயன் 3 திட்டத்தின் வெற்றி பெருமைக்குறியது; நிதிப் பற்றாக்குறை குறைந்து, இந்தியாவின் ஜிடிபி 7.5% வளர்ச்சி கண்டுள்ளது; ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்று குவித்துள்ளனர்; கடந்த ஆண்டில் பல சாதனைகளை இந்தியா புரிந்துள்ளது என்பது பெருமையாக இருக்கிறது- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

    Jan 31, 2024 11:21 IST

    அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கப்பட்டது பெருமிதத்திற்குறியது

    அயோத்தியில் ராமர் கோயில் அமைக்கப்பட்டது பெருமிதத்திற்குறியது; வறுமையில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்; பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

    Jan 31, 2024 11:16 IST

    உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடைந்து இருக்கிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

    நமது அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது; உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது; அனைத்து கட்சியினரும் ஒத்த கருத்துடன் பயணிப்பார்கள் என நம்புகிறேன்” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

    Jan 31, 2024 11:13 IST

    ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துடன் பயணிக்கிறோம்

    “இடைக்கால் பட்ஜெட் கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது; ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துடன் பயணிக்கிறோம்” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

    Jan 31, 2024 11:08 IST

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறையாக செங்கோலை ஏந்திச் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு வரவேற்பு. 

    Jan 31, 2024 11:07 IST

    இன்று குடியரசு தலைவரின் உரையும், நாளை நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட்டும் நடைபெற உள்ளது : இது மகளிர் சக்திக்கான அடையாளம்

    இது மிகவும் மகத்துவமான கூட்டத்தொடர், கடந்த ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது குடியரசு தின அணிவகுப்பில் மகளிர் சக்தி பறைசாற்றப்பட்டதை நாம் அனைவரும் கண்டோம் – பிரதமர் மோடி இன்று குடியரசு தலைவரின் உரையும், நாளை நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட்டும் நடைபெற உள்ளது இது மகளிர் சக்திக்கான அடையாளம் – பிரதமர் மோடி

    Jan 31, 2024 10:53 IST

    6வது நாளாக தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

    6வது நாளாக தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, ஆலோசனை. கடலூர், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் பங்கேற்பு.  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெறும் ஆலோசனை/  தொகுதியின் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி பங்கேற்பு. 

    Jan 31, 2024 10:52 IST

    சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது

    சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன

    Jan 31, 2024 10:51 IST

    எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு அரசு தயாராக உள்ளது: மோடி

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு அரசு தயாராக உள்ளது. அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- மோடி 

    Jan 31, 2024 10:34 IST

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணக்கு ரூ.80 குறைந்து, ரூ. 46,800-க்கும் ஒரு கீராம் ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Jan 31, 2024 10:27 IST

    சிறுவன் உடலில் சிக்கி உடைந்த தடுப்பூசி 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் அகற்றம்

    சென்னை அடுத்த பாடியில் 10 வயது சிறுவன் உடலில் சிக்கி உடைந்த தடுப்பூசி 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் காலில் இருந்த உடைந்த ஊசி அகற்றம் காலில் இரும்பு கிழித்ததால் தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு போடப்பட்ட தடுப்பூசி சிரஞ்சில் இருந்த ஊசி உடைந்த மாணவனின் காலில் சிக்கி கொண்டதால் அச்சம் சிறுவன் பெற்றோர் அளித்த புகார் குறித்து கொரட்டூர் போலீசார் விசாரணை

    Jan 31, 2024 10:27 IST

    சிறுவன் உடலில் சிக்கி உடைந்த தடுப்பூசி 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் அகற்றம்

    சென்னை அடுத்த பாடியில் 10 வயது சிறுவன் உடலில் சிக்கி உடைந்த தடுப்பூசி 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவன் காலில் இருந்த உடைந்த ஊசி அகற்றம் காலில் இரும்பு கிழித்ததால் தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு போடப்பட்ட தடுப்பூசி சிரஞ்சில் இருந்த ஊசி உடைந்த மாணவனின் காலில் சிக்கி கொண்டதால் அச்சம் சிறுவன் பெற்றோர் அளித்த புகார் குறித்து கொரட்டூர் போலீசார் விசாரணை

    Jan 31, 2024 10:25 IST

    பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை

    அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவை சார்ந்த நிர்வாகிகள் பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை

    Jan 31, 2024 10:09 IST

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டுக்கான பாஜக பொறுப்பாளர்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல்

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டுக்கான பாஜக பொறுப்பாளர்களான நியமிக்கப்பட்ட அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல். பாஜக நிர்வாகிகளை முதல் கட்டமாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்

    Jan 31, 2024 10:07 IST

    சத்தீஸ்கர் பிஜாப்பூர் – சுக்மா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதல்: பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழப்பு

    சத்தீஸ்கர் பிஜாப்பூர் – சுக்மா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம். இந்த தாக்குதலில் குறைந்தது 6 நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    Jan 31, 2024 09:46 IST

    பழனி முருகன் கோயில்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: சீமான் கோரிக்கை

    பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் உறுதிமொழி தந்துவிட்டு செல்லலாம் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை

    Jan 31, 2024 09:45 IST

    அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல்

    பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல்.  தனிப்படை போலீசார் அமர்பிரசாத்தை தேடி வரும் நிலையில், முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

    Jan 31, 2024 09:28 IST

    பாமக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை கூடுகிறது

    பாமக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை கூடுகிறது. பொதுக்குழுவில் ஆலோசித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என அக்கட்சி தரப்பில் விளக்கம்.  தற்போது வரை எந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேசுவார்த்தை தொடங்கவில்லை என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    SOURCE : TAMIL INDIAN EXPRESS