Home தேசிய national tamil Budget 2024 Live Streaming | மத்திய இடைக்கால பட்ஜெட் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று...

Budget 2024 Live Streaming | மத்திய இடைக்கால பட்ஜெட் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தாக்கல்

1
0

SOURCE :- INDIAN EXPRESS

Budget 2024 Speech Live Streaming: nirmala-sitharaman | union-budget | பிரதமர் நரேந்திர மோடியின், 2வது கால அரசின் 2வது இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1,2024) மக்களவையில் தாக்கல் செய்கிறார்.
இதுவரை தொடர்ச்சியாக 5 முழுமையான பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். இதன்மூலம், முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார்.

Advertisment

அதேபோல் முன்னாள் நிதியமைச்சர், பிரதமருமான மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் ப. சிதம்பரம் உள்ளிட்டோரின் சாதனையையும் அவர் முறியடிப்பார்.
மொராஜி தேசாய், 1959-1964க்கு இடைப்பட்ட காலத்தில் 5 வருடாந்திர பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.

நேரம்- நேரடி ஒளிபரப்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை சன்சாத் டிவி மற்றும் டிடி நியூஸ் ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பத்திரிகை தகவல் பணியகம் (PIB) அதன் அதிகாரப்பூர்வ YouTube சேனல் மற்றும் இணையதளத்தில் பட்ஜெட்டை ஆன்லைனில் ஒளிபரப்பும். நிர்மலா சீதாராமன் மக்களவையில் பிப்.1,2024 காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இடைக்கால பட்ஜெட் 2024: என்ன எதிர்பார்க்கலாம்?

நிதியமைச்சர் சீதாராமன், வரவிருக்கும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாது என்று முன்னரே சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பிஎம் கிஷான் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒதுக்கீடுகள் அதிகரிப்பு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் விரிவான காப்பீடு உள்ளிட்டவை இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.

2024 மக்களவை தேர்தல்

2024 மக்களவை தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்த இடைக்கால பட்ஜெட் வெகுஜன எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read in English 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Feb 01, 2024 09:04 IST

    அதிகரிக்கும் நிதிப்பற்றக்குறை

    2023ம் டிசம்பர் முடிவில்,இந்த ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை ரூ. 9.82 லட்சம் கோடி ஆகும் . இது ஒட்டுமொத்த பட்ஜெட்டின் 55%ஆகும். 2022- 2023ம் ஆண்டின் நிதிப் பற்றாக்குறை, ஒட்டுமொத்த பட்ஜெடின் 59.8 % ஆக இருந்தது. 2023- 2024ம் ஆண்டின் நிதிப்பற்றாக்குறை ரூ. 17.86 லட்டம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 2023 டிசம்பரில் இந்தியாவின் மொத்த வருவாய் ரூ.20.71 லட்சம் கோடியாக உள்ளது.  

  • Feb 01, 2024 08:13 IST

    எதிர்பார்ப்புகள் என்ன ?

    விவசாயம், வரி குறைப்பு, பெண்கள், தொழில்துறையினரை கவரும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

    Feb 01, 2024 07:35 IST

    90 நிமிடங்கள் குடியரசு தலைவர் பேசிய வீடியோ

    பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகத்தில் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசினார். 90 நிமிடங்கள் பேசியதில் குடியரசு தலைவர் ராம் கோவில், சந்திரயான் போன்ற பல நிகழ்வுகளை குறிப்பிட்டு, மோடியின் ஆட்சி சாதனைகளாக தெரிவித்திருந்தார்.

    Feb 01, 2024 07:19 IST

    மத்திய இடைக்கால பட்ஜெட்: இன்று தாக்கல் செய்யப்படுகிறது

    மத்திய இடைக்கால பட்ஜெட் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது தேர்தல் நெருங்கும் நிலையில், கவர்ச்சிகர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு

SOURCE : TAMIL INDIAN EXPRESS