Home தேசிய national tamil Tamil News Live Updates:கெஜ்ரிவாலின் மனு அபராதத்துடன் தள்ளுபடி

Tamil News Live Updates:கெஜ்ரிவாலின் மனு அபராதத்துடன் தள்ளுபடி

1
0

SOURCE :- INDIAN EXPRESS

  • May 08, 2024 14:37 IST

    கஞ்சா வழக்குகள் : நீதிமன்றம் கேள்வி

    தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? . தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? – நீதிபதிகள் மதுரை ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு ஒத்தக்கடை வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. 

  • May 08, 2024 14:36 IST

    கெஜ்ரிவாலின் மனு அபராதத்துடன் தள்ளுபடி

    சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவை உடன் காணொளியில் கலந்துரையாட அனுமதிக்க கோரிய பொதுநல மனு ரூபாய் 1 லட்சம் அபராதத்துடன் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு, 

    May 08, 2024 14:22 IST

    மோடி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பூட்டுப் போட முடியும் ஆனால் செய்ய மாட்டார்கள்

    பிரதமர் மோடி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் பூட்டுப் போட முடியும் ஆனால் செய்ய மாட்டார்கள்.. -ம.பி. தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் காட்டம். 

    May 08, 2024 14:16 IST

    4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.  இன்று தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 

    May 08, 2024 14:15 IST

    சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம். 

    May 08, 2024 13:40 IST

    ஜெயக்குமாரின் வழக்கில் முக்கிய தகவலை உறுதி செய்த காவல்துறை

    சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் வாயிலிருந்து எடுக்கப்பட்ட பாத்திரம் கழுவும் இரும்பு பிரஷ் எங்கிருந்து வந்தது என்ற தகவல் விசாரணையில் வெளியாகி இருக்கிறது .கழுத்தை சுற்றியிருந்த இரும்புக் கம்பியும் எப்படி அங்கு வந்தது என்பது குறித்த தகவலும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது இரும்பு பிரஷ் மற்றும் இரும்புக் கம்பி, பிளேடு போன்றவை ஜெயக்குமாரின் வீட்டிலிருந்தே கொண்டு வரப்பட்டவை என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. 

    May 08, 2024 13:37 IST

    8 மாவட்டங்களில் கனமழை

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 8) கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

    May 08, 2024 13:19 IST

    காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி – தடியடி

    நெல்லை மாவட்டம் தேவர் குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றவர்களால் பரபரப்பு.  சாதி ரீதியாக செயல்படுவதாகவும், பொய் வழக்கு போடுவதாகவும் குற்றம்சாட்டி முற்றுகை போராட்டம். 

    May 08, 2024 12:52 IST

    இளைஞர் பலி – மருத்துவமனையை மூட உத்தரவு

    சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரம்

    எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரம் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவு

    May 08, 2024 12:47 IST

    ஜெயக்குமாரின் தோட்டத்தில் மீண்டும் சோதனை

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம். ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அவரது தோட்டத்தில், தனிப்படை டி.எஸ்.பி தலைமையில் மீண்டும் சோதனை 

    May 08, 2024 12:45 IST

    வேங்கைவயல் விவகாரம்: குரல் மாதிரி பரிசோதனை

    புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரத்தில் குரல் மாதிரி பரிசோதனை

    சென்னை மயிலாப்பூர் தடய அறிவியல் துறை அலுவலகத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 நபர்களுக்கு குரல் மாதிரி பரிசோதனை

    ஏற்கனவே நடைபெற்ற வாட்ஸ் அப் உரையாடல்கள், செல்போன் தகவல்கள் பெற்றுள்ள நிலையில் குரல் பரிசோதனை

    உரையாடல்களை வசனமாக எழுதி கொடுத்து பேசச் சொல்லி பதிவு செய்யப்பட்டு தனித்தனியாக குரல் மாதிரி பரிசோதனை

    May 08, 2024 12:31 IST

    ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம் – வழக்கறிஞருக்கு அனுமதி

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம் பெறும் போது, அவரது வழக்கறிஞரும் உடனிருக்க அனுமதி. வழக்கறிஞர் 15 நிமிடம் உடனிருக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

    May 08, 2024 12:16 IST

    ரூ 4 கோடி பறிமுதல்: பாஜக பொருளாளரிடம் விசாரணை

    தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம். பாஜக மாநில பொருளாளர் சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு

    May 08, 2024 12:07 IST

    ஜூலையில் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் தொடக்கம்

    அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்

    May 08, 2024 11:55 IST

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை

    மத்தியப் பிரதேசம் பெதுல் மாவட்டத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தீக்கிரை. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சென்ற பேருந்து கோலா கிராமம் அருகே தீ விபத்தில் சிக்கியது. தீப்பிடித்த பேருந்தில் இருந்து கண்ணாடியை உடைத்து வாக்கச் சாவடி ஊழியர்கள் காயமின்றி தப்பினர். 

    May 08, 2024 11:40 IST

    உயிரிழந்தது ஜெயக்குமார் தானா? டி.என்.ஏ சோதனை

    ஜெயக்குமாரின் எலும்புகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைப்பு

    உயிரிழந்தது ஜெயக்குமார் தானா? என்ற சந்தேகம் குடும்பத்தினருக்கு எழுந்த நிலையில் டிஎன்ஏ பரிசோதனை

    May 08, 2024 11:12 IST

    விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி பழுது

    விழுப்புரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில், மீண்டும் சிசிடிவி பழுது

    ஸ்ட்ராங் ரூமில் உள்ள 7 சிசிடிவி கேமராக்கள் சுமார் ஒரு மணி நேரம் இயங்கவில்லை

    திடீர் மழை காரணமாக சிசிடிவி கேமராக்கள் பழுதானதாக, மாவட்ட நிர்வாகம் தகவல்

    May 08, 2024 10:59 IST

    அரசு வேலைக்காக 53.74 லட்சம் பேர் பதிவு

    தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை 53.74 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்

    – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை

    May 08, 2024 10:47 IST

    9 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு

    மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு

    -சென்னை வானிலை ஆய்வு மையம்

    May 08, 2024 10:46 IST

    போலீசார் ஆய்வு

    ஜெயக்குமார் இல்லம் அமைந்திருக்கும் கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கி.மீ. தூரத்திற்கு சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஜெயக்குமார் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆவதற்கு முன் வந்த தொலைபேசி அழைப்புகள், புகார் அளிக்கப்பட்ட தேதி மற்றும் ஜெயக்குமார் காணாமல் போன தேதிக்கு இடையே கரைசுத்துப்புதூர் வந்து சென்ற வாகனங்கள், உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மொபைல் எண்கள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    May 08, 2024 10:45 IST

    கோழி பண்ணையில் தீ விபத்து

    திருப்பத்தூர் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் துரைமுருகன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கோழிகள் மற்றும் தீவன பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.

    May 08, 2024 10:23 IST

    எலுமிச்சை விலை உயர்வு

    கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150க்கு விற்கப்படுகிறது.

    ஒரு கிலோ எலுமிச்சை சாதாரண நாட்களில் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது மொத்த விற்பனை கடைகளில் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    May 08, 2024 10:23 IST

    சிசிடிவி கேமராக்கள் பழுது

    விழுப்புரம்  மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் காலை 7.30 மணி முதல் 8.15 மணி வரை 45 நிமிடங்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பழுதாகி இருந்தது.

    பழுது சரி செய்யப்பட்டு கேமராக்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே தொகுதியில் 30  நிமிடங்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பழுதானது என்பது குறிப்பிடத்தக்கது

    May 08, 2024 10:22 IST

    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே. 8) சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.53,040 விற்பனையாகிறது.

    கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,630 விற்பனை

    May 08, 2024 09:49 IST

    தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி

    தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 100mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்.

    இதன்மூலம் மாணவர்கள் கடினமான பாடங்களை எளிமையாக ஆன்லைன் வாயிலாக கற்பதற்கும், மாணவர்கள் கற்ற பாடங்களை ஆன்லைன் மதிப்பீடுகள் மூலமாக பயிற்சிகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்படும்

    தமிழ்நாடு அரசு தகவல்

    May 08, 2024 09:46 IST

    ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை

    ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில், சம்பத் நகர், பன்னீர்செல்வம் பூங்கா, மாணிக்கம் பாளையம், கைகாட்டி வலசு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    May 08, 2024 09:18 IST

    ஐபிஎல் இன்றைய போட்டி

    ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஹைதராபாத், லக்னோ அணிகள் மோதுகின்றன.

    ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    May 08, 2024 08:39 IST

    தமிழ்நாட்டில் இரு நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்

    இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்

    ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கான வாய்ப்பு

    இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

    May 08, 2024 08:10 IST

    வேங்கைவயல் விவகாரம்- மேலும் மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், மேலும் மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடையவியல் ஆய்வகத்தில் இன்று நடைபெற உள்ளது.

    இந்த வழக்கில் ஏற்கனவே ஐந்து சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு DNA பரிசோதனையும், ஒரு காவலர் உள்ளிட்ட இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.

    May 08, 2024 08:06 IST

    தண்டனையை ரத்து செய்ய கோரி நிர்மலா தேவி மனு

    முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி தனக்கான தண்டனையை ரத்து செய்ய கோரியும், இடைக்கால ஜாமீன் வழங்க கோரியும் உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம்

    May 08, 2024 07:56 IST

    சின்னதுரையை நேரில் அழைத்து பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்

    நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்து பாராட்டிய இயக்குநர் பா.ரஞ்சித்

    Credit: PuthiyathalaimuraiTV

    May 08, 2024 07:45 IST

    12 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், கடலூர், ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு

    -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    May 08, 2024 07:45 IST

    சென்னை சிறுவனை கடித்த சைபீரியன் ஹஸ்கி

    சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சைபீரியன் ஹஸ்கி வகை வளர்ப்பு நாய் கடித்ததில் அஸ்வந்த் என்ற சிறுவனுக்கு கையில் காயம்.

    நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து பரங்கிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    May 08, 2024 07:44 IST

    சவுக்கு சங்கர் இன்று ஆஜர்

    தேனியில் கைது செய்யப்பட்ட போது, சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர் ஆகிறார்.

    May 08, 2024 07:44 IST

    போலி விளம்பரம் மூலம் ரஷ்யாவிற்கு ஆள் கடத்தல்- 4 பேர் கைது

    தமிழ்நாடு, கேரளாவில் இருந்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்தி வந்த கன்னியாகுமரியை சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையை சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவை சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேரை கைது சி.பி.ஐ. கைது செய்தது.

    கைது செய்யப்பட்ட 4 பேரும் சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை கடத்தி வந்தனர். கடத்தப்பட்ட இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டனர்.

    தமிழ்நாட்டை சேர்ந்த நிஜில் ஜோபி, ரஷ்யாவில் இருந்தபடி கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக தகவல்

    கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சென்னை உட்பட 7 நகரங்களில் சோதனை நடத்தியது

    May 08, 2024 07:44 IST

    இன்று கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 8) கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம்

    May 08, 2024 07:44 IST

    தங்கபாலு பேட்டி

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நான் இருக்கும்போது ஜெயக்குமாருக்கு மாவட்ட பொறுப்பு வழங்கினேன். ஜெயக்குமாரிடம் பணம் வாங்கி தேர்தல் செய்ய வேண்டிய சூழல் எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இல்லை.

    காவல்துறையை பொறுத்தவரை ஜெயக்குமார் மரண வழக்கை சிறப்பான முறையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்.நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேட்டி

    May 08, 2024 07:43 IST

    கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20-ம் தேதி வரை நீட்டிப்பு

    மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

    அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணையை மே 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்

    May 08, 2024 07:43 IST

    CSK – RR ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12ம் தேதி நடைபெறும் CSK – RR இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 9ம் தேதி காலை 10.40 மணிக்கு தொடங்கும் என CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    SOURCE : TAMIL INDIAN EXPRESS