Home தேசிய national tamil இந்தியாவில் கூகுள் வாலட் ஆப் அறிமுகம்: இதற்கு எல்லாம் பயன்படுத்தலாம்

இந்தியாவில் கூகுள் வாலட் ஆப் அறிமுகம்: இதற்கு எல்லாம் பயன்படுத்தலாம்

1
0

SOURCE :- INDIAN EXPRESS

இந்தியாவில் கூகுள் வாலட் செயலி அறிமுகம் செய்யப்படுவதாக கூகுள் நிறுவனம் இன்று (புதன்கிழமை) அறிவித்தது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலட் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் வாலட்டில் டிக்கெட்கள், மூவி டிக்கெட்கள், ரிவார்டு கார்ட்ஸ், டிஜிட்டல் கார் கீஸ் போன்றவற்றை ஸ்டோர் செய்து வைக்க முடியும். அதாவது இதில் உங்கள் டிஜிட்டல் தகவல்களை ஸ்டோர் செய்து வைக்கலாம். 

Advertisment

புதுதில்லியில் நடந்த ஒரு நிகழ்வின் போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த கூகுள் ஆண்ட்ராய்டின் ஜி.எம் & இந்தியா இன்ஜினியரிங் லீட் நிறுவனத்தின் அதிகாரி ராம் பாபட்லா கூறுகையில், “காகிதத்திலிருந்து டிஜிட்டல் முறையில் பயணம் தடையின்றி செலுத்துவதை உறுதி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்றார். 

இருப்பினும், இந்தியாவில் கூகுள் வாலட் நான்-பேமெண்ட் முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் கூகுள் வாலட் பணம் செலுத்தாமல் பயன்படுத்தப்படும். அதாவது கூகுளின் டிஜிட்டல் வாலட் மற்றும் பேமெண்ட் தளமான கூகுள் பே, இந்தியாவில் வாலட் செயலியுடன் இணைந்து செயல்படும். கூகுள் பே சேவை தொடரும் என்று பாபட்லா கூறினார். 

கூகுள் பே என்பது எங்களின் முதன்மையான கட்டணங்களைப் பயன்படுத்துவதோடு, இந்தியாவில் அனைத்து கட்டணத் தேவைகளையும் தீர்க்கிறது. வாலட் குறிப்பாக பணம் செலுத்தாத பயன்பாட்டு நிகழ்வுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள்  வாலட் செயலியை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆப்பிள் ஐபோனுக்கு செயலி அறிமுகம் செய்யயப்படவில்லை. பாபட்லா மேலும் கூறுகையில், போர்டிங் பாஸ்களை அணுகுவது மற்றும் அவர்களின் ஸ்மார்ட் போன்களில் அவற்றைக் கொண்டிருப்பது போன்ற ஒவ்வொரு நாளும் பயனர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பதே வாலட் செயலியின் நோக்கம் என்று கூறினார். 

ஒரு பயனர் டிக்கெட்டை வாங்கும்போது, ​​ஜிமெயில் வழியாக உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறும்போது, ​​போர்டிங் பாஸ்கள் மற்றும் திரைப்பட டிக்கெட்டுகள் இரண்டும் கூகுள் வாலட்டில் தானாகவே காட்டப்படும் என்று கூகுள் கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS