Home தேசிய national tamil இ.வி.எம் பாதுகாப்பு மையத்தில் 2-வது முறையாக கேமரா கோளாறு: கலெக்டரிடம் விழுப்புரம் எம்.பி புகார்

இ.வி.எம் பாதுகாப்பு மையத்தில் 2-வது முறையாக கேமரா கோளாறு: கலெக்டரிடம் விழுப்புரம் எம்.பி புகார்

1
0

SOURCE :- INDIAN EXPRESS

பாபு ராஜேந்திரன் – விழுப்புரம் மாவட்டம் 

Advertisment

Villupuram | VCK MP Ravi Kumar விழுப்புரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (இ.வி.எம்), பாதுகாப்பு மையத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இரண்டாவது முறையாக மீண்டும் பழுதானது. இதனையடுத்து, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். 

அந்த மனுவில் கூறியிருப்பது பின்வருமாறு:- 

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (இ.வி.எம்) பாதுகாப்பு மையத்தில் இன்று காலை 7.28 முதல் 8.10 வரை இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி கேமராக்கள் ஓட வில்லை என்ற செய்தியை அங்கு  பாதுகாப்புக்கு என்னால் நியமிக்கப்பட்டுள்ள மு.தமிழரசன் அவர்கள் தொலைபேசியில்  சொன்னார். 

இந்த செய்தியறிந்ததும் தேர்தல் நடத்தும் அதிகாரி அவர்கள் அந்த மையத்துக்குச் சென்று நடவடிக்கை எடுத்ததால் சி.சி.டி.வி கேமராக்கள் சரி செய்யப்பட்டு தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்தார். நான் உடனே தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பேசியதோடு மையத்துக்கு நேரில் சென்றும் பார்வையிட்டேன். தற்போது எந்தத் தடையும் இல்லாமல் சி.சி.டி.வி-க்கள் இயங்கிவருகின்றன. 
  
கடந்த 03.05.2024 அன்றும் சுமார் அரை மணி நேரம் சிசிடிவி இயங்கவில்லை. அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்தித்துக் கடிதம் கொடுத்தேன். இன்றும் அதுபோல ஒரு கடிதத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கொடுத்தார். 

இவ்வாறு அந்த மனுவில்  தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS