Home தேசிய national tamil PBKS vs MI IPL 2024 Live Score: சூர்யகுமார் அதிரடி; வலுவான நிலையில் மும்பை

PBKS vs MI IPL 2024 Live Score: சூர்யகுமார் அதிரடி; வலுவான நிலையில் மும்பை

1
0

SOURCE :- INDIAN EXPRESS

IPL 2024 Match 33 Punjab Kings vs Mumbai Indians Score Updates: ஐ.பி.எல் போட்டிகளின் 33 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: PBKS vs MI Live Score, IPL 2024

2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 33 ஆவது போட்டியில் சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சண்டிகர் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விபரம்

பஞ்சாப் கிங்ஸ்: ரிலீ ரோசோவ், பிரப்சிம்ரன் சிங், சாம் கரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, ஸ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரித் பும்ரா

இந்த ஐ.பி.எல்லில் தலா போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தலா 4 புள்ளிகளுடன் முறையே 8 மற்றும் 9 ஆம் இடங்களில் உள்ளன. எனவே இந்தப் போட்டியில் வெல்ல இரு அணிகளும் தீவிரம் காட்டும்.

இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 16 முறையும் பஞ்சாப் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS