Home தேசிய national tamil சொந்த குடும்பத்தையே சோதனை எலிகளாக பயன்படுத்தி போலியோவுக்கு தீர்வு கண்ட விஞ்ஞானி

சொந்த குடும்பத்தையே சோதனை எலிகளாக பயன்படுத்தி போலியோவுக்கு தீர்வு கண்ட விஞ்ஞானி

12
0

SOURCE :- BBC NEWS

ஜோனாஸ் சால்க்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கிரெக் ஹோக்விட்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று, மருத்துவர் ஜோனாஸ் சால்க் தனது தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று அறிவித்தார்.

அது எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற வழிவகுத்தது, ஆனால் அவர் அதிலிருந்து லாபம் ஈட்ட மறுத்துவிட்டார். 1982 இல், சால்க் தனது இந்த புரட்சிகரமான கண்டுபிடிப்பு குறித்து பிபிசியிடம் பேசினார்.

“மனிதகுலம் அதன் ஒட்டுமொத்த வரலாற்றிலேயே மிகவும் ஒளிமயமான செய்திகளில் ஒன்றைப் பெற்றுள்ளது,” என்று ஒரு அமெரிக்க செய்தியாளர் 1955 ஏப்ரலில் வெளியான அந்த அறிவிப்பை விவரித்தார். ஜோனாஸ் சால்க் போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார் என்பது தான் அச்செய்தி.

போலியோ என்பது அதுவரை தடுப்புமுறையோ அல்லது குணப்படுத்தும் மருத்துவமோ இல்லாத ஒரு நோயாக இருந்ததுடன், அனைவருக்கும் ஒரு அச்சுறுத்தலாகவும் விளங்கியது.

அன்றைய தினம் மாலையில் தொலைக்காட்சியில் பேட்டியளித்தபோது, இந்தத் தடுப்பூசிக்கான காப்புரிமை யாரிடம் உள்ளது என்று சால்க்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பொதுமக்களிடம் தான் என்று நான் கூறுவேன். அப்படி ஒரு காப்புரிமை எதுவும் இல்லை. உங்களால் சூரியனுக்குக் காப்புரிமை பெற முடியுமா?” என்று பதிலளித்தார்.

போலியோமைலிடிஸ் அல்லது போலியோ என்பது ஒரு பொது சுகாதார அவசரநிலையாக இருந்தது.

1952 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 57,628 ஆகப் பதிவானது. இந்த நோய் தண்டுவடம் மற்றும் சுவாச மண்டல முடக்கத்தை ஏற்படுத்துகிறது.

அக்காலத்தில் நோயாளிகள் சுவாசிப்பதற்காக “இரும்பு நுரையீரல்” என்று அழைக்கப்படும் பெரிய உலோக வென்டிலேட்டர்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சாதனங்களும், குழந்தைகள் தங்களின் கால்களில் அணிந்திருந்த எலும்பியல் ஸ்பிளிண்டுகளும் போலியோவின் நீடித்த அடையாளங்களாக மாறின.

நோய்ப் பரவல்கள் அடிக்கடி நிகழும் பருவமான கோடைக்காலத்தின் வருகையைக் கண்டு மக்கள் மிகவும் அஞ்சினர்.

நோய்ப் பரவல்கள் அடிக்கடி நிகழும் பருவமான கோடைக்காலத்தின் வருகையைக் கண்டு மக்கள் மிகவும் அஞ்சினர்.

பட மூலாதாரம், Getty Images

அஞ்சத்தக்க போலியோ

சால்க் மற்றும் அவரது குழுவினர் தங்களது தடுப்பூசியை உருவாக்கிய பிட்ஸ்பர்க் மருத்துவமனையில் வார்டு நர்ஸாகப் பணியாற்றிய ஜோடி சோக்ரான் என்பவரின் கூற்றுப்படி, அனைத்துப் பெற்றோர்களும் இந்த நோயின் அறிகுறிகளைப் பற்றி அறிந்திருந்ததோடு, அதைக் கண்டு அஞ்சவும் செய்தனர்.

அவர் பிபிசியின் ‘விட்னஸ் ஹிஸ்டரி’ நிகழ்ச்சியில் பேசும்போது, “சிறு குழந்தைகள் ஒரு நாள் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள், திடீரென்று தங்களுக்கு ஓர் இரும்பு நுரையீரல் தேவைப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அவர்கள் அலறுவார்கள். அவர்களின் கால்கள் முடங்காமல் இருந்தால், அவர்கள் வென்டிலேட்டரின் பக்கவாட்டுப் பகுதிகளில் உதைப்பார்கள்” என்று அத்தகைய பாதிப்புகள் குறித்து விவரித்தார்.

1%-க்கும் குறைவான பாதிப்புகளே முடக்குவாதத்திற்கு வழிவகுத்த போதிலும், போலியோ பரவலின் தீவிரத்தன்மை காரணமாக ஏராளமான குழந்தைகள் இரும்பு நுரையீரலுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

அவர்கள் கழுத்திற்குக் கீழ் உள்ள உடல் பகுதி முழுவதும் பல நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் கூட அதற்குள்ளேயே அடைக்கப்பட்டிருக்கலாம்.

சோக்ரான் கவனித்து வந்த நோயாளிகள் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் இருந்தது, மேலும் அவருக்கும் அவரது சக செவிலியர்களுக்கும் தங்களுக்குக் கிடைத்த ஒரே பாதுகாப்பு கைகளைத் தீவிரமாகத் தூய்மைப்படுத்துவது மட்டுமே என்று கூறப்பட்டது.

“நாங்கள் ஒரு நோயாளியைத் தொடும்போதெல்லாம், அல்லது அடிக்கடி எங்கள் கைகளைக் கழுவினோம், இரவில் நான் வீட்டிற்கு வரும்போது என் கைகள் முற்றிலும் புண்ணாகி, வெடித்துப் போயிருந்தது எனக்கு நினைவிருக்கிறது” என்று அவர் விவரித்தார்.

போலியோவால் பெரும்பாலும் குழந்தைகளே பாதிக்கப்பட்டபோதிலும், மற்றவர்களும் பாதுகாப்பாக இல்லை.

அமெரிக்காவின் வருங்கால அதிபரான பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், அப்போது வளர்ந்து வரும் ஒரு அரசியல் நட்சத்திரமாக இருந்தவர். அவர், 1921 இல் தனது 39 ஆவது வயதில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டார்.

இந்த நோய் அவரது வாழ்நாளின் எஞ்சிய பகுதி முழுவதும் இடுப்புக்குக் கீழே முடங்கிப்போகச் செய்தது.

போலியோவால் பெரும்பாலும் குழந்தைகளே பாதிக்கப்பட்டபோதிலும், மற்றவர்களும் பாதுகாப்பாக இல்லை.

பட மூலாதாரம், Getty Images

அவர் பதவியேற்றவுடன், போலியோவுக்கு எதிரான போராட்டத்தை அவரது தனிப்பட்ட போராட்டமாக மாற்றினார்.

மேலும் 1938 இல் ‘மார்ச் ஆஃப் டைம்ஸ்’ ன்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். போலியோவை எதிர்த்துப் போராடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நிறுவனம், பாரம்பரிய நிதி திரட்டும் மாதிரியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது.

சிலரிடமிருந்து பெரிய தொகையை நன்கொடையாகப் பெறுவதற்குப் பதிலாக, அவர் பலரிடமிருந்து மிகச் சிறிய பங்களிப்புகளைக் கோரினார், இதன் மூலம் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களைத் திரட்ட முடிந்தது.

 மருத்துவர் சால்க்

பட மூலாதாரம், Getty Images

ஒரு தீர்வுக்கான பந்தயம்

1940களின் இறுதியில், போலியோ வைரஸ் குடல் வழியாக ரத்த ஓட்டத்தில் நுழைகிறது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்திருந்தனர்.

அதே நேரத்தில், இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசிக்கான பந்தயத்தில் போட்டியிட உருவெடுத்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் முற்றிலும் மாறுபட்ட பாதையைப் பின்பற்றினர்.

“போலியோ: ஆன் அமெரிக்கன் ஸ்டோரி”என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட் எம். ஓஷின்ஸ்கியின் கூற்றுப்படி, சின்சினாட்டிக் மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவப் பேராசிரியரான மருத்துவர் ஆல்பர்ட் சபின், ஏற்கனவே போலியோ வைரஸ் பற்றிய ஆய்விற்காக இருபது ஆண்டுகளை அர்ப்பணித்திருந்தார், மேலும் அவர் மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று நம்பினார்.

“அவர் தன்னை ஒரு ‘விஞ்ஞானிகளுக்கான விஞ்ஞானி’யாகக் கருதினார்… ஆய்வகத்திலேயே பணிபுரிந்து, அதைவிட்டு ஒருபோதும் வெளியேறாமல், அடுத்தடுத்த படிநிலைகளைப் பயன்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாகக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ஒருவராக அவர் இருந்தார்” என்று ஓஷின்ஸ்கி 2014 ஆம் ஆண்டு பிபிசி ஆவணப்படம் ஒன்றில் விவரித்தார்.

மறுபுறம் சால்க், பிட்ஸ்பர்க் மருத்துவப் பள்ளியில் அதிவேகமாகச் செயல்படும் ஓர் ஆராய்ச்சியாளராக இருந்தார். அவர் ஏற்கனவே இரண்டாம் உலகப் போரின் போது ராணுவ வீரர்களுக்காக வெற்றிகரமான காய்ச்சல் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியிருந்தார்.

இதற்கு ஒரு முக்கியக் காரணியாக, முன்னேற்றத்தைக் காண ஆவலுடன் இருந்த ‘மார்ச் ஆஃப் டைம்ஸ்’ அமைப்பின் ஆதரவு அவருக்கு இருந்தது.

பிலடெல்பியா தடுப்பூசி கல்வி மையத்தின் மருத்துவர் பால் ஆஃபிட் பிபிசியிடம் விளக்குகையில், சால்க் ஒரு மருந்து நிறுவனத்தின் வேகம் மற்றும் கவனத்துடன் பணியாற்றினார் என்றும், இந்த பாணி, விஞ்ஞானிகளின் செயல்பாடு குறித்த பாரம்பரியக் கருத்துக்களுக்கு சவால் விடுப்பதாக அமைந்தது என்றும் குறிப்பிட்டார்.

“மிகச்சிறந்த தடுப்பூசி எதுவாக இருக்கும் என்பதில் சால்க் மற்றும் சபினுக்கு இடையே அடிப்படை வேறுபாடுகள் இருந்தன. அது முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸாக இருக்க வேண்டும் என்று சால்க் நம்பினார். ஆனால் சபின், அது வீரியம் குறைக்கப்பட்ட வைரஸாக இருக்க வேண்டும் என்று கருதினார்”என அவர் கூறினார்.

பிட்ஸ்பர்க்கில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு மருத்துவமனையின் மையத்தில், போலியோ நோயாளிகளால் சூழப்பட்ட நிலையில் தனது ஆய்வகத்தை அமைத்துக்கொள்ள அது அவருக்கு வழிவகுத்தது.

பட மூலாதாரம், Getty Images

குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி பரிசோதனை

‘மார்ச் ஆஃப் டைம்ஸ்’ அமைப்பிடமிருந்து கிடைத்த நிதியுதவி சாலக்கிற்கு ஒரு தெளிவான சாதகத்தை வழங்கியது.

பிட்ஸ்பர்க்கில் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு மருத்துவமனையின் மையத்தில், போலியோ நோயாளிகளால் சூழப்பட்ட நிலையில் தனது ஆய்வகத்தை அமைத்துக்கொள்ள அது அவருக்கு வழிவகுத்தது.

சால்க்கும் அவரது குழுவினரும் தடுப்பூசியை உருவாக்க, செயலிழக்கச் செய்யப்பட்ட போலியோ வைரஸைப் பயன்படுத்தினர்.

அது ஒரு சோதனை அறிவியல் ஆகும். ஆய்வகத்தில் வைரஸைத் தனிமைப்படுத்துவதற்காக, செவிலியர்கள் தாங்கள் பணிபுரிந்த மூன்றாவது மாடியிலிருந்து நோயாளிகளின் மலத்தை அடித்தளத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், போலியோ வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான ஆன்டிபாடிகளை இந்தத் தடுப்பூசி தூண்டும் என்பதை சால்க்கும் அவரது குழுவினரும் இன்னும் நிரூபிக்க வேண்டியிருந்தது.

போலியோ தடுப்பூசியின் உருவாக்கம் என்பது ஒரு பொறுமையான மற்றும் தொடர்ச்சியாக செய்யப்பட்ட முயற்சியின் விளைவாகும் என்று அவர் 1982 இல் பிபிசியிடம் தெரிவித்தார்.

“போலியோவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க முடியும் என்பதற்கான அறிகுறிகள் இருந்தன” என்று அவர் விளக்கினார்.

“அதன் பிறகு, சாத்தியமான பல மாற்று வழிகளில் ஒன்றை [நாங்கள்] தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. பணியின் போது, எதிர்பாராத பல விஷயங்கள் வெளிப்பட்டன, மேலும் நாங்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. எனவே, அந்த வகையில், அந்தப் பாதையில் சில திருப்பங்கள் இருந்தன”என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடங்கல்கள் ஏதேனும் இருந்தனவா? என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “என்னைப் பொறுத்தவரை, தடங்கல்கள் என்பவை எப்போதும் வாய்ப்புகள் தான்” என்று பதிலளித்த சாலக்,

“எதிர்பாராதவற்றை நான் எப்போதும் ஓர் அடையாளமாகவே எடுத்துக்கொண்டு, விரைவாக மாற்றுப் பாதைகளைத் தேடினேன்”என்றும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

“என்னுடைய பார்வையில், பெரிய திருப்புமுனை மிகவும் விரைவாகவே” ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

மற்றவர்களால் பல ஆண்டுளாக மேற்கொள்ளப்பட்ட முந்தைய ஆராய்ச்சிகள் அதற்கான களத்தை தயார் செய்திருந்தன.

சால்க், 1948 இல் தனது பணியைத் தொடங்கியபோது, அதற்குச் சற்று முன்புதான் திசு வளர்ப்புகளில் வைரஸ் முதன்முறையாக வெற்றிகரமாக வளர்க்கப்பட்டிருந்தது. தேவையான கருவிகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தன மற்றும் போலியோ வைரஸின் மூன்று முக்கிய வகைகளும் கண்டறியப்பட்டிருந்தன.

“1951 மற்றும் 1952 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், நாங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தயாராக இருந்தோம். 1953 க்குள், அதற்கான அறிகுறிகள் தெளிவாக இருந்தன; 1954 இல், கள ஆய்வு நடத்தப்பட்டது, மேலும் 1955 இல், தடுப்பூசி பொதுப் பயன்பாட்டிற்குக் கிடைத்தது.”

அவர் இந்தத் தடுப்பூசியைத் தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சோதித்துப் பார்த்தார் என்ற தகவல்கள் உண்மையானவை.

“நிச்சயமாக,” என்று கூறிய அவர், “போதுமான நம்பிக்கையும் பாதுகாப்பும் இருந்தால் அது ஒரு வழக்கமான நடைமுறைதான்”என்றும் குறிப்பிட்டார்.

1952 ஆம் ஆண்டிற்குள், இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதில் அவர் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்றால், அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமன்றி, ஆய்வகத்தில் அவருடன் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் அதனைச் செலுத்தினார்.

அவரது மகன் பீட்டர், 2020 இல் பிபிசியிடம் பேசும்போது, “என் தந்தை தனது அலுவலகத்திலிருந்து சிரிஞ்சுகளையும் ஊசிகளையும் வீட்டிற்கு கொண்டு வந்தார்.

அவற்றை கிருமி நீக்கம் செய்வதற்காக எங்கள் சமையலறையில் இருந்த பாத்திரங்களில் ஒன்றில் போட்டு அவர் கொதிக்க வைத்தார். சோதனைக்கட்டத்தில் இருந்த, அவர் தயாரித்து வந்த போலியோ தடுப்பூசியை அவற்றில் நிரப்பினார், பின்னர் எங்களை வரிசையாக நிற்க வைத்து ஊசி போட்டார்” என்று நினைவு கூர்ந்தார்.

1952 ஆம் ஆண்டிற்குள், இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதில் அவர் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்றால், அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமன்றி, ஆய்வகத்தில் அவருடன் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களுக்கும் அதனைச் செலுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images

தடுப்பூசி வேலை செய்ததா என்பதை உறுதியாக அறிந்துகொள்ள, இன்னும் பெரிய அளவிலான ஒரு சோதனை தேவைப்பட்டது.

1954-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய மருத்துவப் பரிசோதனை தொடங்கியது.

இதில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்காக அமெரிக்கா முழுவதும் 50,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது.

பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த அந்தச் செய்தியை உறுதிப்படுத்த, முடிவுகளை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வருடம் தேவைப்பட்டது.

இந்த அறிவிப்பு 1955ம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்டது.

தற்செயலாக, அதிபர் ரூஸ்வெல்ட் இறந்து சரியாக பத்து ஆண்டுகள் நிறைவடைந்த நாளாக அது அமைந்தது. நாடு முழுவதும் தேவாலய மணிகள் ஒலித்தன, தொழிற்சாலை சைரன்கள் முழங்கின, மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் தெருக்களில் அழுதனர்.

சால்க் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் அமெரிக்காவில் பதிவான போலியோ பாதிப்புகளின் எண்ணிக்கை 60,000 இலிருந்து 2,000 ஆகக் குறைந்தது.

பத்தாண்டுகளுக்குள் , அமெரிக்காவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

சால்க் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் அமெரிக்காவில் பதிவான போலியோ பாதிப்புகளின் எண்ணிக்கை 60,000 இலிருந்து 2,000 ஆகக் குறைந்தது. பத்தாண்டுகளுக்குள் , அமெரிக்காவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

ஒரு தேக்கரண்டி சர்க்கரை

தடுப்பூசியின் வெற்றி காரணமாக, சால்க் ஒரே இரவில் உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றார்.

அந்தப் பரவசமான உணர்வை அவர் தனது சொந்தத் திறமைகளுக்கான அளவுகோலாகப் பார்ப்பதை விட, “அச்சத்திலிருந்து கிடைத்த நிம்மதியின் உணர்வு” என்றே புரிந்து கொண்டார்.

“[அந்த எதிர்வினை] அறிவியல் பங்களிப்புகளுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகத் தோன்றியது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“இப்போது, பின்னோக்கிப் பார்க்கும்போது ஒருவர் அதை எதிர்பார்த்திருக்கலாம் என்றாலும், அது எதிர்பாராத மற்றும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்தது.”

தனது பணிக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, “அந்த அளவுக்கதிகமான பாராட்டுக்களை” மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர் முடிவு செய்தார்.

பின்னர், உலகெங்கிலும் உள்ள மிகச்சிறந்த அறிவியல் சிந்தனையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, கலிபோர்னியாவில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ள ஒரு சுயாதீனமான, லாப நோக்கற்ற ஆய்வகமான சாலக் நிறுவனத்தை அவர் நிறுவினார்.

“அதுதான், என் கருத்துப்படி, அடுத்த மகத்தான பணி” என்று கூறிய அவர், “அது படைப்பாற்றலுக்கான ஒரு ஆலயமாக இருந்தது… மனித ஆன்மா மேம்படும் ஒரு இடமாக அது இருந்தது”என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் ஆல்பர்ட் சபினின் போட்டித் தடுப்பூசியின் நிலை என்ன? அது ஊசி மூலம் செலுத்தப்படாமல் வாய்வழியாக வழங்கப்பட்டது, இது பெருமளவிலான தடுப்பூசி முகாம்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்தது.

இது ஹாலிவுட்டின் மிகவும் கவர்ச்சிகரமான பாடல்களில் ஒன்றுக்கு உத்வேகமாகவும் அமைந்தது.

1960களின் முற்பகுதியில், ஜெஃப்ரி ஷெர்மனின் தந்தை ராபர்ட் மற்றும் அவரது மாமா ரிச்சர்ட் ஆகியோர் வால்ட் டிஸ்னியின் ‘மேரி பாபின்ஸ்’ திரைப்படத்திற்கான இசையமைப்பில் ஈடுபட்டிருந்தனர், அப்போது புதிய யோசனைகளைக் கண்டறிவதில் அவர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

தடுப்பூசியின் விலையைக் குறைவாக வைத்திருப்பதற்காக, சபினோ அல்லது சாலக்கோ தங்களின் கண்டுபிடிப்புகளுக்கு லாபம் ஈட்டும் நோக்கில் காப்புரிமை பெறவில்லை.

பட மூலாதாரம், Getty Images

ஒரு நாள் மதியம், ஜெஃப்ரி தனது தந்தையிடம் அன்று பள்ளியில் தனக்கு வாய்வழி போலியோ தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறினார். “அது வலித்ததா?” என்று ராபர்ட் ஷெர்மன் கேட்டார்.

“அவர்கள் அதை ஒரு சர்க்கரைக்கட்டி மீது வைத்து கொடுத்தார்கள், அதை நாம் அப்படியே சாப்பிட வேண்டியதுதான் என்று நான் பதிலளித்தேன்” என்று ஜெஃப்ரி ஷெர்மன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“அவர் என்னையே உற்றுப் பார்த்தார், பின்னர் தொலைபேசிக்குச் சென்று என் மாமா டிக்கை அழைத்தார். அவர்கள் மீண்டும் அலுவலகத்திற்குச் சென்று ‘ஏ ஸ்பூன்ஃபுல் ஆஃப் சுகர்’ (ஹெல்ப்ஸ் தி மெடிசின் கோ டவுன்) என்ற பாடலை உருவாக்கினர்.”

தடுப்பூசியின் விலையைக் குறைவாக வைத்திருப்பதற்காக, சபினோ அல்லது சாலக்கோ தங்களின் கண்டுபிடிப்புகளுக்கு லாபம் ஈட்டும் நோக்கில் காப்புரிமை பெறவில்லை.

“நான் இந்தத் தடுப்பூசிக்குக் காப்புரிமை பெற வேண்டும் என்று பலர் வற்புறுத்தினர், ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை” என்று கூறிய சபின், “இது உலகக் குழந்தைகள் அனைவருக்கும் நான் அளிக்கும் பரிசு”என்றார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU