Home தேசிய national tamil காய்கறி, பழங்களின் தோல்களை தூக்கிப் போடாமல் பயன்படுத்த சில வழிகள்

காய்கறி, பழங்களின் தோல்களை தூக்கிப் போடாமல் பயன்படுத்த சில வழிகள்

6
0

SOURCE :- BBC NEWS

பழங்கள், காய்கறிகள்

பட மூலாதாரம், Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட இதர பழங்கள் மற்றும் காய்கறிகளின் உண்ணக்கூடிய மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த தோலை பல வழிகளில் பயனுள்ளவாறு உபயோகப்படுத்த முடியும்.

நம்மில் பெரும்பாலானவர்கள் வாழைப்பழத்தின் தோலை தூக்கி எறியவே செய்கிறோம். வாழைப்பழத்தின் தோல் சராசரி எடையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது.

வாழைப்பழத் தோலில் பல பயனுள்ள ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு பழத்தின் எடையில் அதன் தோல் 20 சதவிகித பங்கு வகிக்கிறது. 2018-ஆம் ஆண்டில் மட்டும் 15.1 மில்லியன் டன் ஆரஞ்சு தோல் உருவாக்கப்பட்டது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. கிவி பழத்தில் தோல் 9 – 13% பங்கு வகிக்கிறது. மாதுளம் பழத்தில் விதைகளுக்கு நிகராக தோல் உள்ளது.

உலகளவில் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணடிக்கப்படுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் 1.3 பில்லியன் டன் என்கிற அளவில் உள்ளது. உலகளாவிய பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வில் வீணாகும் உணவு மற்றும் கழிவுகளின் பங்கு 8% பங்கு வகிக்கிறது.

உணவு கழிவுகளை குப்பை கிடங்குகளுக்கு அனுப்பாமல் உரமாக்குவது வளிமண்டலத்தில் மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைக்கிறது. ஆனால் நாம் கழிவு என நினைக்கும் பெரும்பாலானவை உண்மையில் உண்ணக்கூடியவையே.

ஆரஞ்சு தோல்

பழங்கள், காய்கறிகள்

பட மூலாதாரம், Getty Images

இசபெல் கெரெட்சன்

விடுமுறைக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான ஆரஞ்சு மீதமிருந்தது. எனவே ஆரஞ்சு பழப் பாகு செய்யலாம் என நினைத்தேன். அதனை என் வீட்டில் காலை உணவில் பயன்படுத்தினோம். அதற்கான செய்முறை மிகவும் எளிமையாகவே இருந்தது. அதில் மூன்று பொருட்கள் மட்டுமே இருந்தன. 1.3 கிலோ செவில் ஆரஞ்சு, இரண்டு எலுமிச்சைகளின் சாறு மற்றும் 2.3 கிலோ சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

அதனை செய்வது விரைவாகவே எளிதாகவோ இல்லை. இரண்டு ஜாடிகள் செய்வதற்கு எனக்கு மூன்று மணி நேரம் ஆனது. ஆரஞ்சுப் பழங்களை இரண்டு மணி நேரம் மிதமான சூட்டில் கொதிக்க வைத்து, அதன் சதைப்பகுதியை ஒரு சல்லடை மூலம் சாற்றில் வடிகட்டினேன். அவ்வாறு வடிகட்டும்போது பெக்டின் (இயற்கையாகக் கிடைக்கும் ஒரு மாவுச்சத்து) வெளிப்படும். பின்னர், சர்க்கரையையும் நறுக்கிய தோல்களையும் சேர்த்து, அந்த ஆரஞ்சுக் கலவையை 20 நிமிடங்கள் கொதிக்க வைத்து தயாரிக்கலாம்.

இது போக ஆரஞ்சு தோலில் இருந்து இனிப்பான பானமும் செய்யலாம். தோலை உறித்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த செயல்முறையை மூன்று முறை செய்ய வேண்டும். சர்க்கரை மற்றும் தண்ணீரில் சேர்ப்பதற்கு முன்பு கசப்பான சுவையை நீக்குவதற்காக ஒவ்வொரு முறையும் தோலை குளிர்ந்த நீரில் உலர்த்த வேண்டும். ஒரு மாலை நேர சிற்றுண்டிக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். இதிலிருந்து கிடைக்கின்ற சுவையான சிரப்பை பானங்கள் உடன் பயன்படுத்தலாம்.

ஒரு கிண்ணம் நிறைந்த ஆரஞ்சு பழத்திலிருந்து பாகு, இனிப்பு பானம், ஒரு கோப்பை ஆரஞ்சு சாறு மற்றும் சிரப் ஆகியவற்றை செய்ய முடிந்தது.

அன்னாசிப் பழத் தோல்

பழங்கள், காய்கறிகள்

பட மூலாதாரம், Getty Images

லூசி ஷெரிஃப்

அன்னாசிப் பழத்தில் எப்போதும் கழிவு அதிகமாக இருப்பதாகவே தோன்றும். அதில் பழத்தை விட தோல், மேல்பகுதி ஆகியவையே அதிகம் இருப்பதாக தோன்றும்.

அன்னாசிப் பழத்திலிருந்து வரும் கழிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் தெபாச்சே (Tepache) என்கிற பானம் புரோபயாடிக்குகளின் ஆதாரமாக உள்ளது. இதனை மிகவும் எளிமையாக செய்ய முடியும். ஆனால் நீங்கள் ஆல்கஹாலை தவிர்ப்பவர் என்றால் கவனம் வேண்டும். ஏனெனில், இந்த நொதித்தல் முறையில் சிறிய அளவிலான ஆல்கஹால் இருக்கும். (பெரும்பாலும் 1 சதவிகிதத்துக்கும் குறைவாக தான் இருக்கும் என்றாலும் நொதித்தல் முறையைப் பொருத்து அதன் அளவு வேறுபடும், பானத்தை நீண்ட நேரம் நொதிக்க வைத்தால் ஆல்கஹால் அளவும் அதிகரிக்கும்)

நான் ஒரு கேலன் (3.8 லிட்டர்) கொள்ளளவு கொண்ட ஜாடி, ஒரு பெரிய ரப்பர் பேண்ட், மற்றும் ஜாடியின் திறப்பை மூடுவதற்குப் போதுமான அளவு பெரிய மஸ்லின் அல்லது சிறு துணியைப் பயன்படுத்தினேன்.

முதலில் ஒரு பழத்தைக் கழுவி, தோலை உறித்தேன் (இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்களின் தோலில் பூச்சிக்கொல்லி ரசாயனங்களின் எச்சம் இருக்கும் ஆபத்து குறைவாக இருக்கும்)

பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் பழுப்புச் சர்க்கரையைக் கலந்து, சர்க்கரை கரையும் வரை மெதுவாகச் சூடாக்கினேன். அடுத்து, அதைச் சிறிது ஆறவிட்டு, அன்னாசிப்பழத்தின் தோலை ஜாடியில் சேர்த்தேன். அது சூடாக இருக்கும்போதே சர்க்கரை மற்றும் தண்ணீர்க் கலவையை ஊற்றினேன்.

பிறகு அதனை ஒரு துணி அல்லது பேப்பர் கொண்டு மூட வேண்டும். அடிப்படையில் பூச்சிகள் செல்ல முடியாத அளவுக்கும் காற்று உள்ளே சென்று வரக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும்.

அதன் பிறகு, அதனை ஃபெர்மன்ட் ஆக விட்டுவிட்டேன். அதனை 21-25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைத்துவிட்டு அவ்வப்போது சோதித்து பார்த்தேன். 24-36 மணிநேரத்தில் வெள்ளை நிற நுரை வந்தால் அது ஃபெர்மன்ட் ஆகிறது என்று அர்த்தம். எவ்வளவு நீண்ட நேரம் விடுகிறமோ அந்த அளவுக்கு சுவை வலுவாக இருக்கும். அது தயாரானதும், அந்தத் திரவத்தை வடிகட்டி, புத்துணர்ச்சியூட்டும் பானமாக அருந்துவதற்காகக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன்.

வெங்காய தோல்

பழங்கள், காய்கறிகள்

பட மூலாதாரம், Getty Images

ஃப்ரான்சிஸ் ஆகஸ்டின்

வெங்காயத் தோலை பயன்படுத்துவது பற்றி நாம் யோசிப்பதே இல்லை. பலரும் வெங்காயத் தோலை உலர்த்தி அரைத்து பொடியாகப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

பல தோல்கள் அல்லது சதைகளைப் போலவும் வெங்காயாத்திலும் ஃப்ளாவனாய்ட் என்கிற ரசாயணமும் உள்ளது. அதில் ஆண்டிஆக்சிடன்ட் மற்றும்அழற்சிக்கு எதிரான (anti inflammatory) பண்புகள் அதிகம் உள்ளன. இந்த ஃப்ளாவனாய்டுகளை, காய்கறிகளை சூடாக்கி பிரித்தெடுக்க முடியும். இதனை சாயமாகவும் பயன்படுத்த முடியும். வெங்காயத்தின் வெளிப்புறத் தோலில் டானின்கள் (Tannins) உள்ளன. இவை வைன் போன்ற பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இவை வைன் கறைகளை நீக்க முடியாத ஒன்றாக மாற்றுகின்றன. அதே விதத்தில் வெங்காயத்தில் இருக்குன் டானின்களை காட்டன் மற்றும் லினன் போன்ற ஆடைகளுக்கு சாயமாகவும் பயன்படுத்தலாம்.

முதலில் நான் காலுறை ஒன்றை அதில் படிந்திருக்கும் எண்ணெய் அல்லது கரையை நீக்குவதற்காக மிதமான சூட்டில் துவைத்தேன். இந்த கறைகள் சாயம் படிவதை பாதிக்கக்கூடும்.

துணியை உலர வைத்த பிறகு எண்ணெய் தோல்களை இரண்டு கப் தண்ணீர் கொண்ட பெரிய உலோக பாத்திரத்தில் வைத்தேன். மிதமான தீயில் தோல்களைக் கொதிக்க வைத்து, தண்ணீர் அடர் பழுப்பு நிறமாக மாறும் வரை, சுமார் 15 நிமிடங்களுக்கு அந்தக் கரைசலைக் கொதித்துக் கொண்டே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

துணி காய்ந்த பிறகு தீயை அணைத்து ஸ்பூன் மூலம் எண்ணெய் தோல்களை நீக்கவும். அந்த சூடான சாய திரவத்தில் துணியை முழுவதுமாக மறையும்படி ஊறவைக்க வேண்டும். 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை இதைச் செய்ய வேண்டும்.

துணியைப் பிழியாமல், குளிர்ச்சியான இடத்தில் உலர விடவும். துணியின் பழுப்பு நிறம் போதுமான அளவு அடர்த்தியாக இல்லையென்றால், விரும்பிய நிறம் வரும் வரை மீண்டும் ஊறவைக்கவும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU