SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Majid Saeedi/Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இரான் உடன் அமெரிக்கா மேற்கொண்டிருந்த இரண்டு வாரகால போரிநிறுத்தம் இன்று முடிவடைய இருந்த நிலையில் அதனை காலவரையின்றி நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்தார்
இந்த அறிவிப்புக்கு சில மணி நேரம் முன்பு வரை இரான் மீதான தாக்குதல் பற்றி பேசி வந்த டிரம்ப், தனது முடிவை திடீரென மாற்றினார்.
பட மூலாதாரம், Reuters
சில மணி நேரத்தில் மாறிய டிரம்பின் அறிவிப்பு
சாரா ஸ்மித், பிபிசி
இரான் உடனான போர்நிறுத்தத்தை காலவரையின்று நீட்டிப்பதாக டிரம்ப் அறிவித்திருப்பது அதற்கு சில மணி நேரம் முன்பு அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
சமீபத்தில் சி.என்.பி.சி தொலைக்காட்சி அளித்த பேட்டியில், “குண்டுவீச்சு நடக்கும் என நான் எதிர்பார்க்கிறேன். ராணுவம் செல்ல தயாராக இருக்கிறது.” எனத் தெரிவித்திருந்தார். அதோடு இரானுக்கு உள்ளே இருக்கும் ஒவ்வொரு பாலம் மற்றும் மின் நிலையங்களையும் அழிக்கும் தனது அச்சுறுத்தலை மீண்டும் கூறினார்.
முந்தைய போர்நிறுத்தம் காலாவதி ஆவதற்கு முன்பாக மோதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் அரசின் கோரிக்கைக்கு இணங்க அதைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் காலம் முழுவதும் தீவிரமான தாக்குதல் நடத்துவதாக இரானை அச்சுறுத்தி வந்த டிரம்ப், தற்போது உண்மையாகவே இரானை மீண்டும் தாக்க விரும்பவில்லை போலத் தெரிகிறது.
பட மூலாதாரம், Getty Images
நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கும் டிரம்ப்
பெர்னட் டெபுஸ்மென் ஜூனியர், பிபிசி
போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்த டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோசியல் பதிவு பல விஷயங்களைக் காட்டுகிறது.
பேச்சுவார்த்தைக்கான சாத்தியங்கள் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தின் தற்போதைய எண்ணவோட்டம் பற்றிய தெளிவான பார்வையைக் காட்டுகிறது.
இந்தப் பதிவு இரண்டு விஷயங்களைக் காட்டுகிறது. முதலாவதாக அவரது பார்வையில் இரானின் முன்மொழிவு என்னவென்பதில் தெளிவில்லை. இரண்டாவது இரான் அரசில் தற்போது யார் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதாகும்.
இரானின் தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்றும் உள்ளகத் தொடர்புகளும் விவாதங்களும் குழப்பமானவையாகவே இருக்கின்றன என்றும் டிரம்ப் அவ்வப்போது கூறிவருவதன் தொடர்ச்சியாகவே அது இருக்கிறது.
மீண்டும் முழு வீச்சிலான மோதல்களுக்கு திரும்புவது பற்றி டிரம்பின் அறிவிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது அரசியல் ரீதியாக டிரம்புக்கும் பொருளாதார ரீதியாக எண்ணெய் விலைக்கும் சிக்கலான ஒன்றாக அமையும்.
குறிப்பாக அவர் எந்தக் காலவரம்பும் நிர்ணயிக்கவில்லை. மேலும் உடனடியாக தீர்வை எட்ட வேண்டும் என்பதாக கால நெருக்கடியையும் அவர் தவிர்த்துவிட்டார். இது கோட்பாட்டளவில் அவருக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
இருப்பினும் இரானிய துறைமுகங்களின் முற்றுகை தொடர்கிறது. இதனை ஒரு போர்ச் செயலாக இரான் பார்ப்பதால் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைக்கு இது தடையாக இருக்கலாம்.
இரான் சூழலை மிகவும் தீவிரமாக்க முடிவு செய்யலாம் அல்லது பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் ‘பனிப்போர்’ போன்ற சூழலைத் தொடரலாம்.
பட மூலாதாரம், Getty Images
1990-க்குப் பிறகு வளைகுடா கண்டிராத மிக மோசமான நெருக்கடி
ஃப்ராங்க் கார்ட்னர், பிபிசி
இரான் – அமெரிக்கா மோதல் தற்போது முடங்கிப் போன நிலையில் ஆபத்தாக இருக்கிறது.
இது ஆபத்தானது, ஏனெனில் இரு தரப்பும் ஒருவரையொருவர் நம்பவில்லை. மேலும் டிரம்ப் ஒரு திடீர் தாக்குதல் நடத்துவதற்கு நேரம் பெறுவதற்காக இழுத்தடிக்கிறார் என நம்பும் இரான் தயாராகவே உள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வர இரான் மறுக்கும் அதே வேளையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை அமலில் இருக்கிறது. போர்நிறுத்தம் காலவரையின்று நீட்டிக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய சூழ்நிலை அனைவருக்கும் திருப்தியில்லாத ஒன்றாகவே உள்ளது.
ஒரு சில தரப்பை தவிர அனைவருக்கும் ஹோர்மூஸ் நீரிணை ஆபத்தான ஒன்றாகவே உள்ளது. நீரிணையைக் கடந்து வந்த கப்பல்கள் மீது இரானின் துப்பாக்கி பொருத்தப்பட்ட படகுகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தச் சூழலில் இரானிய துரைமுகங்களை நோக்கி பயணித்த 20 கப்பல்களை திருப்பியனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் முடிவு இரானுக்கும் உலகளாவிய பொருளாதாரத்திற்கும் ஆழமான சேதங்களை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.
இந்த முட்டுக்கட்டை எவ்வளவு காலம் நீடிக்கிறதோ உலகளாவிய பொருளாதாரத்தின் மீதான தாக்கம் அவ்வளவு மோசமானதாக இருக்கும். இரானின் மின் நிலையங்களைத் தாக்குவதாகவும் அமெரிக்கா எச்சரிப்பதாலும் அண்டைய அரபு நாடுகள் மீது இரான் பதிலடி தாக்குதல் நடத்துவதாலும் வளைகுடாவில் ஒரு முழு அளவிலான போரை உருவாக்கும் பொறிக்கான ஆபத்தும் அதிகமாகவே உள்ளது.
1990-இல் குவைத்தில் இராக் படையெடுத்ததில் இருந்து வளைகுடா கண்டிராத மிகவும் மோசமான நெருக்கடியாக இது உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



