Home தேசிய national tamil எம்.ஜி.ஆர் – கருணாநிதி பிரிவை பேசுகிறதா? கண்ணதாசன் வைத்த ட்விஸ்ட் : எந்த பாடல் தெரியுமா?

எம்.ஜி.ஆர் – கருணாநிதி பிரிவை பேசுகிறதா? கண்ணதாசன் வைத்த ட்விஸ்ட் : எந்த பாடல் தெரியுமா?

1
0

SOURCE :- INDIAN EXPRESS

கண்ணதாசன் எழுதிய ‘’பரமசிவன் கழுதில் இருந்து பாம்பு கேட்டது’’ என்ற பாடல் இன்றும் மக்கள் மத்தியில் ரசிக்கக்கூடிய ஒரு பாடலாக இருந்து வரும் நிலையில், இந்த பாடலை கவியரசர் கண்ணதாசன், எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோரை பற்றியும் அவர்களிடம் தனது மோதலை பற்றியும் எழுதியிருப்பார்.

Advertisment

1973-ம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான படம் சூரியகாந்தி. முத்துராமன், ஜெயலலிதா, இணைந்து நடித்த இந்த படத்தில் சோ ராமசாமி, மனோரமா, சாவித்ரி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஜெயலலிதா – முத்துராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்ளும் நிலையில், முத்துராமனை விட ஜெயலலிதாவுக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துவிடும். இதனால் இருவருக்கும் இடையே சிறு உரசல்கள் விழுந்ததால், பேசிக்கொள்ளாமல் இருப்பார்கள். அப்போது இருவரும் தனித்தனியாக ஒரு கச்சேரியை பார்க்க வருவார்கள். அந்த கச்சேரியில் கண்ணதான் தோன்றி பாடுவார்.

இந்த பாடல் தான் ‘’பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா’’ என்ற பாடல். இந்த பாடலை பக்தி பாடல் என்றும் குடும்ப பாடல் என்றும் பலரும் கூறி வரும் நிலையில், தனது அரசியல் அனுபவத்தை வைத்து கண்ணதாசன் இந்த பாடலை எழுதியிருப்பார். 1967-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்தபோது அறிஞர் அண்ணா முதல்வர் ஆனார். 1969-ல் அவர் இறந்தபோது, கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்கிறார்.

அடுத்த சில வருடங்களில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு அவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கியுள்ளார். இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்தும், எம்.ஜி.ஆர் – கருணாநிதி ஆகியோருடன் தனது அரசியல் பயணம் குறித்து விவரிக்கும் விதமாக இந்த பாடல் அமைந்திருக்கும். இதில் ‘’உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்’’ என்ற வரிகள் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதை குறிக்கிறது.

அதேபோல் ‘’வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும், இந்த இரண்டில் ஒன்று சிறிது என்றால் எந்த வண்டி ஓடும்’’ என்ற வரிகள் எம்.ஜி.ஆர் கருணாநிதி பிரிவை குறிக்கும் வகையில் அமைத்திருப்பதாக ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS