Home தேசிய national tamil லக்னோ பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ் – 254 ரன்கள் குவித்தது

லக்னோ பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப் கிங்ஸ் – 254 ரன்கள் குவித்தது

19
0

SOURCE :- BBC NEWS

லக்னோ பந்துவீச்சை சிதறடித்த பஞ்சாப். 254 ரன்கள் குவித்தது

பட மூலாதாரம், ANI

19 ஏப்ரல் 2026, 13:45 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 29வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் நியூ சண்டிகரில் மோதுகின்றன.

5 போட்டிகளில் விளையாடியிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 புள்ளிகள் பெற்று நல்ல நிலையில் இருக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு போட்டியில் கூடத் தோற்கவில்லை.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இதுவரை விளையாடியிருக்கும் 5 போட்டிகளில் 2 வெற்றியும், 3 தோல்விகளும் சந்தித்திருக்கிறது.

டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 254/7 என்று தங்கள் இன்னிங்ஸை முடித்தது. அந்த அணிக்காக கானலி 93 ரன்களும், பிரியான்ஷ் ஆர்யா 87 ரன்களும் விளாசினர்.

அதிரடி காட்டிய பிரியான்ஷ் – கானலி

93 ரன்கள் 4 பவுண்டரிகளும், 9 சிக்ஸர்களும் விளாசினார்

பட மூலாதாரம், ANI

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் அவுட்டானார். மொஹம்மது ஷமி வீசிய பந்தில் டக் அவுட் ஆகி அவர் வெளியேறினார். ஆனால், அதன்பிறகு களமிறங்கிய கூப்பர் கானலி, பிரியான்ஷ் ஆர்யாவுடன் இணைந்து ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்.

ஆரம்பத்தில் கானலி நிதானமாக ஆட, பிரியான்ஷ் ஆர்யா வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். மோசின் கான் வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் தன் வேகத்தை இன்னும் பன்மடங்கு அதிகப்படுத்தினார் பிரியான்ஷ். அந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட, பவர்பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்தது கிங்ஸ்.

அதன்பிறகு கானலியும் அதிரடியில் இணைந்தார். அவர்கள் இருவரையும் லக்னோ பௌலர்களால் அவுட்டாக்கவும் முடியவில்லை. அவர்களின் வேகத்தையும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் அரைசதம் அடிக்க, கானலி 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 13.2 ஓவர்களில் 182 ரன்கள் சேர்த்தது. 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த கானலி, பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பிரியான்ஷ் ஆர்யா விக்கெட்டைக் கைப்பற்றினார் எம்.சித்தார்த். 37 பந்துகளை சந்தித்த பிரியான்ஷ் 93 ரன்கள் விளாசினார்.

அதன்பிறகு வந்த வீரர்கள் அதிரடி காட்டினாலும் சீக்கிரம் வெளியேறினார்கள். ஸ்டாய்னிஸ் மற்றும் சில நேரம் நிலைத்து நின்று விளையாடி 29 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்தது பஞ்சாப் கிங்ஸ்.

லக்னோ அணி தரப்பில் பிரின்ஸ் யாதவ் மற்றும் தமிழ்நாடு ஸ்பின்னர் எம்.சித்தார்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

டாஸில் என்ன நடந்தது?

டாஸ் வென்ற ரிஷப் பன்ட், “நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். அவர்கள் ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்கள் இந்தத் தொடரில் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்துள்ளனர், அதே சமயம் அது நாங்கள் சுதந்திரமாக விளையாடுவதற்கும் வழிவகை செய்கிறது. 200 ரன்களை விட 220 ரன்களை நோக்கி விளையாடுவது சிறந்தது. ராத்தி அணியில் இல்லை, அவருக்குப் பதிலாக சித்தார்த் உள்ளே வருகிறார்.” என்று கூறினார்.

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ், “நாங்கள் டாஸ் தோற்றதைப் பற்றி கவலைப்படவில்லை. இது எங்களுக்கு ஒரு சிறந்த சவால். முதல் இன்னிங்ஸில் எப்படி விளையாட வேண்டும் என்பதைப் பற்றி இது எங்களுக்கு ஒரு யோசனையைத் தரும். அவ்வப்போது உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்; இது நமக்கும் நமக்குமான போட்டி, எதிரணியைப் பற்றியது அல்ல. நாம் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாம் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறோம், ஆனால் இன்னும் நாம் அடையாத ஒரு தருணம் உள்ளது. ஒரு முழுமையான வெற்றியைப் பெறும் போட்டியாக இது அமையும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

டாஸ் வென்ற ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்

பட மூலாதாரம், Surjeet Yadav/MB Media/Getty Images

பிளேயிங் லெவனில் யார்?

பஞ்சாப் கிங்ஸ்

இந்தப் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கானலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், நேஹல் வதேரா, சஷாங்க் சிங், மார்கோ யான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல், ஜேவியர் பார்ட்லட்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: வைஷாக் விஜயகுமார், ஹர்ப்ரீத் பிரார், சுயான்ஷ் ஷெட்கே, விஷ்ணு வினோத், யஷ் தாக்கூர்

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

இந்தப் போட்டிக்கான லக்னோ அணியில் திக்வேஷ் ராத்திக்கு பதிலாக தமிழ்நாடு ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த் சேர்க்கப்பட்டார்.

பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, முகுல் சவுத்ரி, மொஹம்மது ஷமி, பிரின்ஸ் யாதவ், எம்.சித்தார்த், மோசின் கான், ஆவேஷ் கான்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: அப்துல் சமத், ஹிம்மத் சிங், மேத்யூ பிரிட்ஸ்கி, மயாங்க் யாதவ், திக்வேஷ் ராத்தி.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU