Home தேசிய national tamil Tamil News Today Live: 100 நாள் வேலைதிட்ட நிலுவைத் தொகை- உடனே விடுவிக்க கோரி...

Tamil News Today Live: 100 நாள் வேலைதிட்ட நிலுவைத் தொகை- உடனே விடுவிக்க கோரி ஸ்டாலின் கடிதம்

1
0

SOURCE :- INDIAN EXPRESS

  • Mar 14, 2024 14:54 IST

    விளாத்திகுளம் அருகே பெண் வெட்டிக்கொலை

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிக்கொலை

    சொத்து பிரச்சினை, திருமணம் தாண்டிய உறவை கைவிடாததால் சொந்த அண்ணியை இளைஞர் வெட்டிக் கொன்றதாக தகவல் 

  • Mar 14, 2024 14:35 IST

    ஜாபர் சாதிக் கூட்டாளியிடம் தீவிர விசாரணை

    ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதாவிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2018ம் ஆண்டே ரூ. 25 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஜாபர் சாதிக் கடத்தி உள்ளது அம்பலம்

    2013ம் ஆண்டே சதா சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என அதிகாரிகள் தகவல்

    2019ம் ஆண்டு ரூ.1.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் அம்பலம்

    Mar 14, 2024 14:29 IST

    செல்லூர் ராஜு பேட்டி

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதை பத்தோடு பதினொன்றாக பார்க்க வேண்டும். தேர்தலுக்காக மேடைகளில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழ்ந்துபேசும் அவர், முதலில் அண்ணாமலையிடம் அதனை பேச வேண்டும்.

    அண்ணாமலை ஏன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தவறாக பேசினார் என கேள்வி கேட்க வேண்டும்

    செல்லூர் ராஜு பேட்டி

    Mar 14, 2024 14:19 IST

    புதிய தேர்தல் ஆணையர் யார்?

    புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், பி.எஸ். சாந்து ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி

    Mar 14, 2024 14:19 IST

    புதிய தேர்தல் ஆணையர் யார்?

    புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், பி.எஸ். சாந்து ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி

    Mar 14, 2024 13:58 IST

    மு.க.ஸ்டாலின் கடிதம்

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    Mar 14, 2024 13:53 IST

    ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த உயர்மட்டக் குழு, வியாழன் அன்று மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு முதல் கட்டமாக தேர்தலை நடத்த பரிந்துரைத்தது

    மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை

    Mar 14, 2024 13:44 IST

    செல்லூர் ராஜூ பேட்டி

    தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிப்போடுவதை பார்த்தால் எங்கேயோ தவறு நடைபெறுகிறது

    செல்லூர் ராஜூ பேட்டி

    Mar 14, 2024 13:44 IST

    டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

    சில மாநிலங்கள் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை

    இலங்கையில் உள்ள தமிழர்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைக்கப்பட்டது

    இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை மட்டுமே நோக்கமாக வைத்து சி.ஏ.ஏ. சட்டம் அமலுக்கு வந்துள்ளது

    திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

    Mar 14, 2024 13:21 IST

    தேர்தல் அறிக்கை உரிய நேரத்தில் வரும்

    மக்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை உரிய நேரத்தில் வரும்

    துரைமுருகன்

    Mar 14, 2024 13:21 IST

    ஜெயக்குமார் பேட்டி

    அதிமுகவுக்கு தொடர்பில்லாதவர் ஓபிஎஸ். சின்னம் குறித்து அவர் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை

    அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் பேட்டி

    Mar 14, 2024 12:54 IST

    தி.மலையில் போலீசார் குவிப்பு 

    திருவண்ணாமலை, நாயுடு மங்கலத்தில் வன்னியர் சங்க சின்னமான அக்னி கலசம் அகற்றப்பட்ட விவகாரம்.

    திருவண்ணாமலையில் இருந்து 2, 4 சக்கர வாகனங்களில் வன்னியர் சங்கத்தினர் பேரணி. வன்னியர் சங்க பேரணியை முன்னிட்டு 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிப்பு 

    Mar 14, 2024 12:52 IST

    ஜாபர் சாதிக் குடோனில் சோதனை

    சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோனில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை

    ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா நேற்று கைது செய்யப்பட்டார்

    சதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பெருங்குடியில் உள்ள குடோனில் சோதனை

    2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்

    Mar 14, 2024 12:52 IST

    ஜாபர் சாதிக் குடோனில் சோதனை

    சென்னை பெருங்குடியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோனில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை

    ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா நேற்று கைது செய்யப்பட்டார்

    சதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பெருங்குடியில் உள்ள குடோனில் சோதனை

    2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்

    Mar 14, 2024 12:52 IST

    அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

    ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்த ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள்.

    ஓபிஎஸ் அணியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அதிமுகவில் இணைந்தனர். திமுக, மதிமுக நிர்வாகிகள் உள்பட 300 பேர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மேலும் மேலும் அதிமுகவை வலுப்படுத்தி வரும் ஈபிஎஸ்

    Mar 14, 2024 12:27 IST

    விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் ஆலோசனை

    விவசாயிகள் போராட்டம் – அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் ஆலோசனை

    குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் கூடியது. 

    ‘கிசான் மஸ்தூர் மகா பஞ்சாயத்’ பஞ்சாபில் இருந்து 800 பேருந்துகள், லாரிகள், ரயில்கள் மூலம் விவசாயிகள் டெல்லி வருகை

    ஆலோசனையில் 5 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்த டெல்லி காவல்துறை முன்னெச்சரிக்கை ஏற்பாடாக போக்குவரத்து மாற்றம் – ஏராளமான போலீசார் குவிப்பு

    Mar 14, 2024 12:11 IST

    கரும்பு விவசாயி சின்னத்தை முறைப்படி வாங்கியுள்ளோம்

    கரும்பு விவசாயி சின்னத்தை முறைப்படி வாங்கியுள்ளோம் – பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் மாநில தலைவர் யோகி ஆர்.கே.ஜெயக்குமார் பேட்டி 

    Mar 14, 2024 12:08 IST

    இ.பி.எஸ், அண்ணாமலை மீது ஸ்டாலின் வழக்கு

    போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல்

    முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை

    Mar 14, 2024 12:05 IST

    தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

    தி.மு.க போட்டியிட உள்ள 21 தொகுதிகள் மற்றும் காங்கிரஸ், மதிமுகவுக்கு ஒதுக்க உள்ள தொகுதிகள் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    Mar 14, 2024 12:02 IST

    ஒரே நாடு ஒரே தேர்தல்: அறிக்கை சமர்ப்பிப்பு

    ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான ஆய்வறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.

    ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய இக்குழு பரிந்துரை.

    Mar 14, 2024 11:50 IST

    அ.தி.மு.க தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு

    ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. சின்னம்  தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தவிடக் கோரி ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி  டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு 

    Mar 14, 2024 11:38 IST

    கோயில் இடிதாங்கியில் சிக்கிய பருந்து மீட்பு

    ராமநாதசுவாமி கோயிலின் இடிதாங்கியில் சிக்கிய பருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.

    ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலின் கோபுரங்களில் இடிதாங்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளது

     இந்நிலையில், ராஜகோபுரத்தின் மேல் உள்ள இடிதாங்கியில் பருந்து ஒன்று சிக்கிக்கொண்டது

    இதுகுறித்து, கோயில் நிர்வாகத்தினர் கொடுத்த தகவலின்பேரில், பருந்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்

    பருந்தை மீட்கும் வரை சக பருந்துகள் வானில் வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது

    Mar 14, 2024 11:14 IST

    புதுவையில் புதிய அமைச்சர் பதவியேற்பு

    புதுச்சேரியின் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு எம்.எல்.ஏ. திருமுருகன் பதவியேற்பு

    திருமுருகனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு

    மக்களவை தேர்தலுக்கு முன் காரைக்காலுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் நடவடிக்கை

    Mar 14, 2024 11:09 IST

    சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

    சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் பட்டுலாஸ் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை – திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை ராயப்பேட்டை பகுதியில் இருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்தில் மாற்றம் அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை – ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை. 

    Mar 14, 2024 11:08 IST

    வீட்டு வசதி வாரிய முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

    வீட்டு வசதி வாரிய முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு வீட்டு வசதி வாரிய வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலர் கணேசன் என்பவருக்கு முறையீடாக ஒதுக்கீடு செய்ததாக புகார்.

    Mar 14, 2024 10:02 IST

    மீண்டும் 49 ஆயிரம் ரூபாயை கடந்தது, ஒரு சவரன் தங்கத்தின் விலை

    மீண்டும் 49 ஆயிரம் ரூபாயை கடந்தது, ஒரு சவரன் தங்கத்தின் விலை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு ஒரு கிராம் தங்கம் 6,135 ரூபாய்க்கும், ஒரு சவரன் 49 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை.

    Mar 14, 2024 10:00 IST

    குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை

    “சிஏஏ சட்டம் – எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல். “குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை” “ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் வாக்குவங்கி அரசியலுக்காக பொய் பிரசாரம் செய்கின்றனர்” – மத்திய அமைச்சர் அமித்ஷா

    Mar 14, 2024 10:00 IST

    ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு : அறிக்கை இன்று குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட உள்ளது

    ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இன்று அளிக்க உள்ளது குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது

    Mar 14, 2024 08:57 IST

    சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

    சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தில் சோதனை தேசிய நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார், சாய் சுக்கிரன் நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள்

    Mar 14, 2024 08:30 IST

    நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்

    நாம் தமிழர் கட்சியிடமிருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.  2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவிப்பு!

    Mar 14, 2024 08:27 IST

    மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படலாம் என தகவல்

    காங்கிரஸ் மற்றும் மதிமுகவுக்கான தொகுதிகள் இன்று இறுதியாக வாய்ப்பு.மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது

    Mar 14, 2024 08:25 IST

    அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

    அம்பேத்கர் சிலைகளை தகர்க்கப் போவதாக தீவிரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்ததன் எதிரொலி தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கடலூர் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட அம்பேத்கர் சிலைகளுக்கு அருகே போலீசார் பாதுகாப்பு

    Mar 14, 2024 08:24 IST

    டெல்லி புறப்பட்டு சென்ற தமிழக ஆளுநர்

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.

    SOURCE : TAMIL INDIAN EXPRESS