Home தேசிய national tamil Tamil News Today Live: ஏப்ரல் 4ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

Tamil News Today Live: ஏப்ரல் 4ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

1
0

SOURCE :- INDIAN EXPRESS

  • Mar 28, 2024 14:59 IST

    தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு

    காரைக்கால் ஒட்டு மொத்த மீனவ கிராமங்களும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு படகோட்டி முருகானந்தத்திற்கு இலங்கை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு

  • Mar 28, 2024 14:59 IST

    ஏப்ரல் 4ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

    ஏப்ரல் 4ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 29வது கூட்டத்திற்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அழைப்பு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு.

    Mar 28, 2024 14:32 IST

    மக்களவை தொகுதி – வேட்புமனு ஏற்பு

    தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் வேட்புமனு ஏற்பு.

    Mar 28, 2024 14:32 IST

    மக்களவை தொகுதி – வேட்புமனு ஏற்பு

    சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவனின் வேட்புமனு ஏற்பு.

    Mar 28, 2024 13:42 IST

    மக்களவை தொகுதி – வேட்பு மனுக்கள் ஏற்பு

    நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன், திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்புமனுக்கள் ஏற்பு.

    Mar 28, 2024 13:40 IST

    கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி

    அமலாக்கத்துறையின் காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரி தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

    Mar 28, 2024 13:31 IST

    மக்களவை தொகுதி – வேட்பு மனுக்கள் ஏற்பு

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அவருக்கு எதிராக மனு தாக்கல் செய்த 5 பன்னீர் செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்பு. 

    Mar 28, 2024 13:30 IST

    மக்களவை தொகுதி – வேட்பு மனுக்கள் ஏற்பு

    தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு ஏற்பு ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவின் வேட்பு மனு ஏற்பு.

    Mar 28, 2024 13:27 IST

    செந்தில் பாலாஜி மனு- அமலாக்கத்துறைக்கு உத்தரவு

    அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு அமலாக்கத்துறை பதிலளிக்க, சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜி மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய மனு புதிய மனு மீதான விசாரணை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு. 

    Mar 28, 2024 13:25 IST

    விருதுநகர் தொகுதி – வேட்பு மனுக்கள் ஏற்பு

    விருதுநகர் மக்களவை தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் ராதிகா சரத்குமார், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் வேட்பு மனுக்கள் ஏற்பு. 

    Mar 28, 2024 12:46 IST

    டிடிவி தினகரனின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு

    தேனி தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு

    Mar 28, 2024 12:45 IST

    ஆ.ராசா வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

    நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசா, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோரது வேட்புமனுக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

    Mar 28, 2024 12:45 IST

    தமிழச்சி தங்கபாண்டியனின் வேட்புமனு ஏற்பு

    தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனின் வேட்புமனு ஏற்பு

    Mar 28, 2024 12:44 IST

    தேர்தலின் போது பணத்துடன் பயணம்? நினைவில் கொள்ள வேண்டிய தேர்தல் கமிஷன் விதிகள் இதோ

    லோக்சபா தேர்தல் மார்ச் 16ம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, நாடு முழுவதும் மாதிரி நடத்தை விதிகள் (MCC) அமலில் உள்ளன. வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்த பயன்படுத்தக்கூடிய பணம், மதுபானம், நகைகள் மற்றும் பிற இலவசப் பொருட்களைக் கொண்டு செல்வது குறித்து சட்ட அமலாக்க அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.

    தேர்தலின் போது பணத்துடன் பயணம்? நினைவில் கொள்ள வேண்டிய தேர்தல் கமிஷன் விதிகள் இதோ

    Mar 28, 2024 12:33 IST

    நெல்லை வேட்பு மனுவை வாபஸ் பெற்ற ராமசுப்பு

    நெல்லை மக்களவை தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவை வாபஸ் பெற்றார், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு

    எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்பு மனு தாக்கல் செய்தேன்

    காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக நான் செயல்பட மாட்டேன்

    – ராமசுப்பு நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை எதிர்த்து நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இன்று வாபஸ்

    Mar 28, 2024 12:32 IST

    வினோஜ் பி செல்வம் வேட்பு மனு ஏற்பு – திமுக எதிர்ப்பு

    மத்திய சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு

    வினோஜ் பி செல்வத்தின் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என குற்றச்சாட்டு

    மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தல் 

    Mar 28, 2024 12:29 IST

    வேட்புமனுக்கள் ஏற்பு

    விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களான தேமுதிகவின் விஜய பிரபாகர், காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், நாதகவின் கெளசிக் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்பு

    Mar 28, 2024 12:28 IST

    கனிமொழியின் வேட்புமனு ஏற்பு

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனு ஏற்பு

    Mar 28, 2024 12:27 IST

    அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு

    கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்பு

    Mar 28, 2024 12:27 IST

    செந்தில் பாலாஜி மனு

    அமலாக்கத்துறை வழக்கில் இருந்து  விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி மனு.

    அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு!

    இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களைக் கேட்டு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

    வழக்கு விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்குத் தள்ளிவைப்பு

    Mar 28, 2024 12:25 IST

    வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைப்பு

    வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வேட்புமனு  பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைப்பு

    Mar 28, 2024 12:25 IST

    ராதிகா சரத்குமாரின் வேட்புமனு ஏற்பு

    விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமாரின் வேட்புமனு ஏற்பு

    விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களான தேமுதிகவின் விஜய பிரபாகர், காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், நாதகவின் கெளசிக் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்பு

    Mar 28, 2024 12:10 IST

    மனுக்கள் ஏற்பு

    சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களான விசிகவின் திருமாவளவன், அதிமுகவின் சந்திரகாசன், பாஜகவின் கார்த்தியாயினி, நாதகவின் ஜான்சிராணி ஆகியோரின் மனுக்கள் ஏற்பு

    Mar 28, 2024 12:03 IST

    எல்.முருகனின் வேட்புமனு ஏற்பு

    நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகனின் வேட்புமனு ஏற்பு

    Mar 28, 2024 12:03 IST

    எம்.பி. கணேசமூர்த்தியின் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்

    மதிமுக பொருளாளரும், ஈரோடு எம்.பி.யுமான கணேசமூர்த்தியின்  மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது;

    மதிமுக கட்சி ஆரம்பித்த காலத்திருந்தே வைகோ உடன் இணை பிரியாமல் போர்ப்படைத் தளபதியாக இருந்தவர் கணேசமூர்த்தி;

    ஈரோடு மாநகரின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்;

    அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மதிமுக செயல்வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தியின் மறைவுக்கு செல்வப்பெருந்தகை இரங்கல்

    Mar 28, 2024 12:00 IST

    நயினார் நாகேந்திரனின் வேட்பு மனு ஏற்பு

    நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனு ஏற்பு

    Mar 28, 2024 11:59 IST

    வேட்பு மனு நிறுத்திவைப்பு

    சேலம் மக்களைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.எம். செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்திவைப்பு

    Mar 28, 2024 11:33 IST

    கண்டிப்பாக பானை சின்னம்தான்

    விடுதலை சிறுத்தைகளுக்கு கண்டிப்பாக பானை சின்னம்தான். இதில் எந்த குழப்பமும் வேண்டாம்

    உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பரப்புரையில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

    Mar 28, 2024 11:32 IST

    வேட்புமனுக்கள் ஏற்பு

    மதுரையில் சி.பி.எம்., அதிமுக, பாஜக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

    நாமக்கல்லில் கொ.ம.தே.க., அதிமுக, பாஜக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

    Mar 28, 2024 11:32 IST

    வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது

    மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின், வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது

    அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை

    Mar 28, 2024 11:32 IST

    கொளத்தூரில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

    மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து விடும் என்பதை உணர்ந்து அவதூறாக பேசுகிறார் ஜெயக்குமார்;

    தேர்தல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு திமுக தொடர்ந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்

    கொளத்தூரில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

    Mar 28, 2024 11:12 IST

    எம்.பி. கணேசமூர்த்தி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    ஈரோடு எம்.பி.யும், மதிமுக  மூத்த தலைவருமான கணேசமூர்த்தி உயிரிழந்த செய்திகேட்டு துயருற்றேன்;

    அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்

    ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

    Mar 28, 2024 11:11 IST

    விசிக முறையீடு மனு இன்று பிற்பகல் விசாரணை

    பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு – உச்ச நீதிமன்றத்தில் விசிக முறையீடு செய்த நிலையில், இன்று பிற்பகல் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது

    இரு தொகுதிகளில் ஒரு கட்சி வேட்பாளரை நிறுத்தினால் அக்கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே விதி – மனு

    Mar 28, 2024 10:59 IST

    ஜூலை 13-ம் தேதி குரூப்-1 தேர்வு

    ஜூலை 13ஆம் தேதி குரூப்-1 தேர்வு

    90 பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப்-1 தேர்வு

    இன்று முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

    Mar 28, 2024 09:36 IST

    100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்வு

    100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியத்தை மாநில வாரியாக உயர்த்தியது ஒன்றிய அரசு. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ₹294-ல் இருந்து 319ஆக உயர்த்தப்பட்டள்ளது. 

    Mar 28, 2024 09:24 IST

    வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

    தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

    தமிழ்நாடு, புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை. 40 தொகுதிகளில் தனித்தனியாக நியமிக்கப்பட்ட பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில்  மனுக்கள் மீது பரிசீலனை. 

    Mar 28, 2024 09:01 IST

    கணேச மூர்த்தியின் உடல் இன்று நல்லடக்கம்

    மதிமுக எம்.பி. கணேச மூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு. மாலை 5 மணியளவில் சொந்த ஊரான குமாரவலசு பகுதியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 

    Mar 28, 2024 09:00 IST

    தேர்தலில் போட்டியிட பணம் இல்லை: நிர்மலா சீதாராமன்

    தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தம்மிடம் பணம் இல்லாததால், மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

    மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி அல்லது ஆந்திராவில் இருந்து நிர்மலா சீதாராமன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவினர் வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

    இது குறித்து, பல்வேறு யூகங்கள் கிளம்பிய நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது, நிர்மலா சீதாராமன் மவுனம் கலைந்துள்ளார். அதில் பேசிய அவர், “பாஜக தலைமை எனக்கு தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது…  எதில் போட்டியிடுவது என 10 நாட்களுக்கும் மேலாக யோசித்தேன்… இறுதியில், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்பதால், நான் போட்டியிடவில்லை என்று தலைமையிடம் தெரிவித்து விட்டேன்….” என்று கூறியுள்ளார்.

    Mar 28, 2024 08:55 IST

    ஓபிஎஸ், நவாஸ் கனி மீது வழக்குப் பதிவு

    ராமநாதபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப் பதிவு

    வேட்பு மனு தாக்கலின் போது போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக நடவடிக்கை

    தேர்தல் பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக வேட்பாளர் மீதும் வழக்குப்பதிவு

    SOURCE : TAMIL INDIAN EXPRESS