Home தேசிய national tamil வாழைப் பழத்தில் யம்மி கேக்: இப்படி வீட்டில் செய்து பாருங்க

வாழைப் பழத்தில் யம்மி கேக்: இப்படி வீட்டில் செய்து பாருங்க

1
0

SOURCE :- INDIAN EXPRESS

வாழைப் பழ கேக் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

மைதா மாவு-  கால் கிலோ
சக்கரைப் பவுடர்- கால் கிலோ
வெண்ணெய்- 200 கிராம்
வாழைப் பழம்-  8
முந்திரி, பாதாம், உலர் திராட்சை-1 கப்
பேக்கிங் பவுடர்- 1 ஸ்பூன்
சமையல் சோடா- 1/2 ஸ்பூன்
முட்டை- 4
வாழைப்பழ எசன்ஸ்- 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா- 1 ஸ்பூன்
மோர் – 1 கப்

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரையை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். வெண்ணெய் சர்க்கரை நன்றாக கலந்து மிருதுவான பிறகு அதில் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு மசித்த வாழைப்பழத்தை சேர்த்து பிசையவும். இதில் மோர், மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். 

திக்கான பதம் வந்ததும், அதனுடன் திராட்சை, முந்திரி, பாதாம் பருப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நன்கு பிசையவும்.பின்னர் கேக் ட்ரேயில், வெண்ணெய் தடவி, தயாரித்து வைத்துள்ள கலவையை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வைத்து,  மைக்ரோவேவ் ஓவனில் 180 டிகிரியில் பிரீ ஹீட்ல் வைத்து, அதில் கேக் டிரேயை வைத்து நாற்பது நிமிடம் வேக வைக்கவும். அவ்வளவு தான் பிறகு எடுத்தால் சுவையான வாழைப் பழ கேக் தயார். ஆறியபின் துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS