Home Latest news tamil சமீபத்திய செய்தி கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

1
0

SOURCE :- BBC NEWS

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

10 நிமிடங்களுக்கு முன்னர்

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில், இந்த ஆண்டு தரிசனத்திற்காகச் சென்ற 9 பேர் மரணித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம் என்ன?

‘‘சபரிமலை போல் அல்லாமல் பாதை மிகக் கடினம் என்பதால், அவசர காலத்தில் நம்மை ‘டோலி’ மூலம் சுமந்து மலையடிவாரம் கொண்டு வருவது மிகக் கடினம். உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாதவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,” என்கிறார், வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று டோலியில் மீட்கப்பட்டு உயிர் பிழைத்துள்ள ரவி.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யாரையும் தொடர்பு கொள்ளக்கூட முடியாது, அங்கேயே மரணிக்க வேண்டிய நிலைதான் நீடிக்கிறது என்கிறார் வெள்ளியங்கிரிக்கு வந்த 55 வயதான முனியப்பன்.

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

வெள்ளியங்கிரி மலையின் அமைப்பு எத்தகையது?

உண்மையில் வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினமானது? மலையின் அமைப்பு எத்தகையது?

கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலமான வெள்ளியங்கிரி மலை, தென்கைலாயம் எனவும் அழைக்கப்படுகிறது. கோவை நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் தமிழக – கேரள எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இந்த மலை அமைந்துள்ளது.

ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரியின் அடிவாரத்தில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு தரிசித்துவிட்டு கடல் மட்டத்தில் இருந்து 5,800 அடி உயரத்தில், 6.5 கி.மீ. தொலைவில் உள்ள ஏழாவது மலைக்குச் சென்று பக்தர்கள் சிவனை வழிபட்டுத் திரும்புகின்றனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாத வரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை முதல் நாள் மற்றும் சித்திரா பெளர்ணமி ஆகிய முக்கிய நாட்களிலும், செவ்வாய், வெள்ளி மற்றும் வார விடுமுறை நாட்களிலும் அதிகப்படியான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

பத்து வயது முதல் 60 வயது வரையிலுள்ள ஆண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளிக்கின்றனர்.

மலையேறி இறந்தவர்கள் யார்?

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி துவங்கி மே 7ஆம் தேதி வரை வெள்ளியங்கிரி மலையேறிய 9 பேர் மரணித்துள்ளனர்.

இறந்தவர்களில் சிலரின் மரணத்திற்கு, மாரடைப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சி (Heat Stroke) காரணம் என்று அவர்களின் உடல்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்?

அடுத்தடுத்து 9 பேர் இறந்துள்ளதால், உண்மையில் வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? அங்குள்ள வசதிகள் குறித்து அறிய பிபிசி தமிழ் குழு வெள்ளியங்கிரி மலையில் கள ஆய்வு மேற்கொண்டது.

பிபிசி குழு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் அடிவாரத்தை அடைந்தபோது அங்கு பல இடங்களில், ‘மலை ஏறுவதற்குரிய உடல் தகுதி உள்ளவர்கள் மட்டுமே மலை ஏறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது,’ என்ற அறிவிப்புகளுடன், அவசர உதவிக்கான எண்களும் ஒட்டப்பட்டு இருந்தன.

நுழைவுப் பகுதியிலேயே மலை ஏறுபவர்களுக்கு மூங்கில் குச்சி வழங்கி அங்கு, ‘வெள்ளியங்கிரி மலை ஏறுவது கடினம் என்பதை நான் அறிவேன், முழு உடல் தகுதியுடன்தான் மலை ஏறுகிறேன். எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நானே பொறுப்பாவேன்,’ என பக்தர்களிடம் கோவில் நிர்வாகத்தினர் சுய உறுதிமொழிக் கடிதத்தில் கையெழுத்து பெறுகின்றனர்.

ஆனால், நாம் பார்த்தவரை பலர் இந்தக் கடிதத்தை கொடுக்காமலே மலை ஏறுவதைக் காண முடிந்தது.

கோவில் சன்னிதானத்திற்கு முன் பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்தது. முகாமை நாம் பார்வையிட்டபோது, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருந்தனர். மலை ஏற்றத்திற்கு முன் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து அனுப்பினர்.

அடிப்படை வசதிகள் மிகக் குறைவு

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

நாமும் பக்தர்களுடன் இணைந்து மலை ஏறினோம். ஏழு மலைகளில், ஒன்று மற்றும் இரண்டாவது மலையில் மட்டுமே கற்களைக் கொண்ட கரடுமுரடான படிக்கட்டுகள் இருந்தன. மற்ற மலைகளில் பாறைகளில் படிக்கட்டுகளும், பல இடங்களில் படிக்கட்டுகள் இல்லாமல் மிகவும் கடினமான பாதையாகவும் இருந்தது.

சில இடங்களில் மட்டுமே மொபைல் சிக்னல் கிடைத்ததுடன், நான்காவது மலையில் தனியார் அமைப்பு சார்பில் ஒரு மருத்துவ முகாம் இருந்தது. ஏழு மலைகளிலும் பக்தர்கள் ஓய்வெடுக்க ஒரு வசதியும் இல்லை.

வழியில் ‘வாக்கி டாக்கி’ வசதியுடன் வனத்துறை பணியாளர்களைக் காண முடியவில்லை, சில மலைகளில் மட்டுமே வனத்துறையினர் பணியில் இருந்தனர்.

மலையேறிய பக்தர்களிடம் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்கள் பல குற்றச்சாட்டுகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

‘தொலைதொடர்பு வசதி இல்லை’

பிபிசி தமிழிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த பிரேம்குமார் (27), ‘‘நான் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றுகிறேன். முதல் முறையாக வெள்ளியங்கிரி வந்துள்ளேன். செங்குத்தாக இருப்பதால் இங்கு மலை ஏறுவது மிகக் கடினமாக உள்ளது. படிக்கட்டுகள் மிகவும் சிதிலமடநை்து மோசமான நிலையில் உள்ளதுடன், ஓய்வெடுக்க ஒரு இடம்கூட இல்லை,’’ என்றார்.

சில இடங்களில் மட்டுமே மொபைல் போன் சிக்னல் கிடைக்கிறது, பாறையில் இருந்து நீர் வழியும் பகுதியில் குடிநீர் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளார்களே தவிர, அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை என்கிறார் பிரேம்குமார்.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யாரையும் தொடர்பு கொள்ளக்கூட முடியாது, அங்கேயே மரணிக்க வேண்டிய நிலைதான் நீடிக்கிறது, என்கிறார் ஐந்தாவது ஆண்டாக தரிசனத்திற்கு வந்துள்ள ஈரோட்டைச் சேர்ந்த முனியப்பன் (55).

மலையேறும் வழியில் செல்போன் சிக்னல் கிடைக்காது, வனத்துறையினரும் இல்லாததால் அவசர நேரத்தில் பக்தர்கள், மலையில் கடைகள் அமைத்துள்ள பழங்குடியின மக்களிடம்தான் உதவி கேட்க முடியும் என்கிறார் முனியப்பன்.

மேலும், ‘‘பழங்குடியினர் தங்கள் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துவர மலை அடிவாரத்திற்குச் செல்லும்போது செல்போன் ‘சிக்னல்’ கிடைக்கும் பகுதியில் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்து, ‘டோலி’ ஏற்பாடு செய்வார்கள். அவர்கள் மேலே வந்த பிறகுதான் பாதிக்கப்பட்டவரை மீட்டுச் செல்வார்கள். இதற்குப் பல மணிநேரம் ஆகும்,’’ என்கிறார் முனியப்பன்.

‘டோலியில் வந்து உயிர் பிழைத்தேன்’

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

‘டோலி’யில் கடும் சிரமத்துடன் பயணித்து உயிர் பிழைத்துள்ள ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த ரவி (52) தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

நம்மிடம் பேசிய ரவி, ‘‘மூன்றாவது முறையாக 2022ஆம் ஆண்டு வெள்ளியங்கிரி சென்று தரிசனம் செய்தேன். மலை ஏறிவிட்டுத் திரும்பியபோது, நான்காவது மலை அருகே என்னால் நடக்க முடியவில்லை, உடல்நிலை மிக மோசமானது. மலைப்பகுதியில் ஓய்வெடுக்கக்கூட இடம் இல்லாத நிலையில், வெட்டவெளியில் அங்கேயே சில மணிநேரம் ஓய்வெடுத்தேன்,’’ என்றார் அவர்.

பொருட்கள் எடுத்துச்செல்லும் பழங்குடியினரிடம் தகவல் தெரிவித்தபோது, கீழே இருந்து 1.5 மணிநேரம் பயணித்து ‘டோலி’ சுமப்பவர்கள் அவரை அடைந்ததாகவும், அதன்பின் மூன்று மணிநேரத்திற்கு மேல் ‘டோலி’யில் பயணித்துதான் கீழே வந்து உயிர் பிழைத்ததாகவும், தனது அனுபவத்தை விவரிக்கிறார்.

‘‘சபரிமலை போல் அல்லாமல் இந்தப் பாதை மிககவும் கடினமாக இருக்கும். அவசரக் காலத்தில் நம்மை ‘டோலி’ மூலம் சுமந்து மலையடிவாரத்திற்குக் கொண்டு வருவது மிகக்கடினம் என்பதால், உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாதவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,’ என்கிறார் ரவி.

ரவியின் அனுபவத்தைக் கேட்டபோது, அவசரக் காலங்களில் ஒருவர் மலையடிவாரத்தை அடையவே பல மணிநேரம் ஆகும் என்பதையும், இந்தக் காரணத்தால் சமீபத்தில் மரணித்த 9 பேருக்கும் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.

‘ஏழு மணிநேரம் பயணிக்க வேண்டும்‘

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

உடல் பருமன் மற்றும் இதயக் கோளாறு உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என்கிறார், பத்து ஆண்டுகளாக மலை ஏறிவரும் ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் (30).

‘‘தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இங்கு வந்துள்ளேன். இந்த ஆண்டு தற்போது மூன்றாவது முறையாக நண்பர்களுடன் மலை ஏறுகிறேன். முதல் முறையாக மலை ஏறும்போது அச்சமாகவும் கடினமாகவும் இருந்தது. பின் மெதுவாக நான் மலை ஏறி முடித்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. பழக்கமாகிவிட்டதால் தற்போது எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் மலை ஏற முடியும்,’’ என்கிறார் அவர்.

ஆரோக்கியமான ஒருவர் ஓய்வெடுத்து நடந்தாலே 6 மணிநேரம் பயணித்துதான் ஏழாவது மலையை அடைய முடியும் எனவும், மீண்டும் 6 – 7 மணிநேரத்தில் இறங்க முடியும், மற்றவர்களுக்கு இன்னும் நேரம் அதிகமாகும் என்கிறார் சுரேஷ்.

எனது அனுபவத்தில் சொல்கிறேன், மிகவும் உடல் பருமன் உள்ளவர்கள், 50 வயதைக் கடந்தவர்கள் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது எனத் தனது அனுபவத்தில் இருந்து கிடைத்த அறிவுரையை சுரேஷ் பகிர்ந்துள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய கோவையைச் சேர்ந்த மரகதம் (53), ‘‘இரண்டாவது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு வந்துள்ளேன். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கடும் வெயில் நிலவுவதால் மலை ஏறுவது மிகக் கடினமாக உள்ளது. நான்காவது மலையில் மட்டுமே மருத்துவ முகாம் உள்ளது, அவசர நேரங்களில் முதலுதவிகூட கிடைப்பது சிரமம். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மலையிலும் ஒரு மருத்துவ முகாமும், ஓய்வெடுக்க ஏற்பாடும் செய்ய வேண்டும்,’’ என்கிறார் அவர்.

கோவில் நிர்வாகத்தின் விளக்கம் என்ன?

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

பக்தர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

பிபிசி தமிழிடம் பேசிய கோவிலின் செயல் அலுவலர் கோபால கிருஷ்ணன், ‘‘மலையடிவாரம் முதல் ஏழாவது மலை வரையிலுள்ள படிக்கட்டுகள் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. படிக்கட்டுகளைச் சீரமைப்பது, ஓய்வெடுக்க தற்காலிக ‘ஷெட்’ அமைப்பது போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம், நிதி கிடைத்தால் வசதிகள் மேம்படுத்தப்படும்,” என்றார்.

“தனியார் நிறுவனத்தை வைத்து டவர் நிறுவி ‘வாக்கி டாக்கி’ சோதனை முயற்சியாகப் பயன்படுத்தினோம். ஆனால், சிக்னல் கிடைக்கவில்லை என்பதால் ‘வாக்கி டாக்கி’ வசதி பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் அதிக தொலைவுக்கு சிகனல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளோம். அரசிடமும் ‘வாக்கி டாக்கி’ அமைப்பதற்கு உதவுமாறு கேட்டுள்ளோம்,’’ என்றார் கோபாலகிருஷ்ணன்.

மேலும் தொடர்ந்த கோபால கிருஷ்ணன், ‘‘ஒவ்வொரு மலையிலும் வனத்துறை பணியாளர்கள் உள்ளார்கள், நான்காவது மலை அருகே வனத்துறையின் முகாமும் உள்ளது, கோவில் பணியாளர்களும் நான்காவது மலையில் உள்ளனர். அவசரக் காலங்களில் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்,’’ என்றார்.

அமைச்சரின் விளக்கம் என்ன?

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

கடந்த ஆண்டு வெள்ளியங்கிரி மலை ஏறி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

நம்மிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ‘‘ஆண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளியங்கிரி செல்கிறார்கள், மற்ற நேரங்களில் மலை முழுவதிலும் யானை போன்ற காட்டுயிர்கள் உள்ளன. அங்கு நிரந்தரமான ஓய்வெடுக்கும் அறை கட்டுவது சிரமம், இருந்தாலும் தற்காலிகமாக ‘ஷெட்’ அமைப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.

அங்குள்ள பிரச்னைகளைச் சரிசெய்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, அவசரக்கால உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்வது ஆகியவை குறித்து ஆலோசித்து வருகிறோம், விரைவில் சரிசெய்யப்படும்,’’ என்றார்.

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறுவது எவ்வளவு கடினம்? உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்? பிபிசி கள ஆய்வு

யாரெல்லாம் மலைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்?

பெரும்பாலும் பயிற்சியின்றி மலை ஏறும்போதுதான் தசைகள் அழுத்தத்திற்கு உட்பட்டு இளம் வயதினருக்கு ரத்த நாளங்கள் வெடித்து மாரடைப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார் சென்னை மருத்துவக்கல்லூரியின் இதயவியல் துறை பேராசிரியர் மனோகர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “சற்று வயதானவர்களாக இருந்தால் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பால் மரணிப்பார்கள். அதேபோல், அதீத வெயில் நிலவுவதால், வெப்ப அதிர்ச்சி ஏற்பட்டு மூச்சுத் திணறலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணிப்பதும் நடக்கும்,’’ என்கிறார்.

ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளவர்களும், அதிக வேலை செய்யாமல் போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பவர்கள், இதய நோய் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் மனோகர்.

மலை ஏறும்போது உடல்நிலை சரியில்லாமல் போவது தெரிந்தாலே மலை ஏறுவதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். அப்படிச் செய்தாலே உயிர் பிழைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

இதை விளக்கிய மனோகர், ‘‘சிலர் சமவெளிப் பகுதியில் தங்கிப் பழகியதால் அவர்கள் உயரமாகச் செல்லும்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறலை எதிர்கொள்வார்கள். அப்படி ஏற்படும் பட்சத்தில் உடனடியாகக் கீழே இறங்கி வந்தால் உயிர் பிழைக்க முடியும். மலை ஏறும் முன்பு மூன்று மாதங்களாவது கட்டாயம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது,’’ என்றார்.

SOURCE : BBC