Home தேசிய national tamil கடிகாரத்தால் சூழ்ந்த ஸ்டைலான ரஜினிகாந்த்… தலைவர் 171 டைம் ட்ரால் படமா? : ஃபர்ஸ்ட் லுக்...

கடிகாரத்தால் சூழ்ந்த ஸ்டைலான ரஜினிகாந்த்… தலைவர் 171 டைம் ட்ரால் படமா? : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்

1
0

SOURCE :- INDIAN EXPRESS

வேட்டையன் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171-வது படத்தில் நடிக்க உள்ள நிலையில், இந்த படத்திற்கான ஃபர்ஸ்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

ஜெயிலர் படத்தின் மூலம் பெரிய வெற்றி கண்ட நடிகர் ரஜினிகாந்த் அடுத்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மஞ்சுவாரியார், பகத் பாசில், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே வேட்டையன் படத்திற்கு பின் நடிகர் ரஜினிகாந்த், தனது 171-வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டர் வெளியாவதற்கு முன்பு இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் திடீரென போஸ்டர் வெளியானது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் டெனிம் சட்டை அணிந்த ஒரே வண்ணமுடைய படம் இடம்பெற்றுள்ளது. அவரின் கைகள் கடிகாரங்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த கடிகாரங்கள் அனைத்தும் கலரில் உள்ள நிலையில், ரஜினிக்கு பின் ஒரு பெரிய கடிகாரம் உள்ளது. இந்த போஸ்டரில் ஆங்காங்கே கடிகாரங்கள் அதிகம் நிரம்பியுள்ளதால் இந்த படம் ஒரு டைம் ட்ராவல் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதேபோல் தலைவர் 171 இல் உள்ள கைக்கடிகாரங்கள் விக்ரம் படத்தில் வரும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்துடன் திரைப்படத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று ரசிகர்களின் டிகோடிங் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் தனது படங்களின் மூலம், தமிழ் சினிமாவில் உலகையே கட்டிக்காக்கும் போஸ்டர் பாயானக மாறியிருப்பதால், இதுபோன்ற விவாதங்கள் அதிகரித்து வருவது தொடர்ந்து வருகிறது.

மேலும் இந்த போஸ்டருடன், படத்தின் தலைப்பு ஏப்ரல் 22 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் 171– படத்தின் மற்ற நடிகர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சமீபத்திய ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் ரவிச்சந்தர், இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ட்ண்ட் கலைஞர்களாக அன்பு-அறிவு பணியாற்ற உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS