Home தேசிய national tamil ‘இன்னும் மீள முடியவில்லை’ – பஹல்காமில் பலியான ராணுவ வீரரின் தந்தை

‘இன்னும் மீள முடியவில்லை’ – பஹல்காமில் பலியான ராணுவ வீரரின் தந்தை

10
0

SOURCE :- BBC NEWS

‘இன்னும் மீள முடியவில்லை’ – பஹல்காமில் பலியான ராணுவ வீரரின் தந்தை

4 மணி நேரங்களுக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதலில் பலியான லெப்டினன்ட் வினய் நர்வாலின் குடும்பத்தினர், அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். வினய் நர்வாலின் தந்தை ராஜேஷ் நர்வால், தனது மகனின் நினைவுகளைப் போற்றும் வகையில் வீட்டின் ஓர் அறையை ஒதுக்கி வைத்துள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் வினய் நர்வாலும் ஒருவர். நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி திருமணமானது. தாக்குதல் நடப்பதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் 19ஆம் தேதி அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் தனது மனைவியுடன் விடுமுறையைக் கழிக்கவே காஷ்மீருக்கு சென்றிருந்தார்.

வினய் பிறந்த நாளான 1998, மே 1ஆம் தேதியையும், அவன் தனது கண் முன்னாலேயே வளர்ந்து, நாட்டிற்குச் சேவை செய்ய முடிவெடுத்த விதத்தையும், தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்று ராஜேஷ் நர்வால் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU