SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
ஐ.பி.எல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி அணி வெற்ற 142 அணி ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது லக்னௌ. கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணி 5வது இடமும் லக்னௌ அணி 7வது இடமும் பிடித்திருந்தது.
லக்னௌவின் ஏகானா மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. லக்னௌ அணி சார்பில் மிட்சல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். எய்டன் மார்கரமிற்கு முன்பாக ரிஷன் பண்ட் களமிறங்கியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இருவரும் அதிரடியாக பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை தொடங்கினாலும் அந்த அதிரடி நிலைக்கவில்லை.
ரிஷப் பண்ட 9 ரன்களில் துர்திருஷ்டவசமாக ரன் அவுட் ஆக அதன் பின்னர் களமிறங்கிய எய்டன் மார்கரம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டர் அக்சர் படேல் பவுலிங்கில் மாற்றம் செய்து பந்துவீச வந்தார். அக்சர் பந்துவீச்சில் எய்டன் மார்கரம் 11 ரன்களின் ஆட்டமிழந்தார்.
பவர்பிளே முடிவில் லக்னௌ அணி 48 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவதாக களமிறங்கிய் ஆயுஷ் பதோனி 0 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்டரான நிகோலஸ் பூரனும் 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து லுங்கி நிகிடியின் அற்புதமான ஸ்லோயர் பந்தில் போல்டானார்.

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
ஒருபுறம் நிலைத்து ஆடிவந்த மிட்சல் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். பவுண்டரிகள் அவ்வப்போது கிடைத்துவந்தாலும் நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன்ரேட் பெரிதளவில் உயரவில்லை. முகுல் சௌத்ரி 14 ரன்களில் ஆட்டமிழக்க ஷாபாஸ் அகமது இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கினார்.
அப்துல் சமாதும் ஷாபாஸ் அகமதும் நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற நிலையில் சமாத் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களி 29 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

16 ஓவர் முடிவில் 121 ரன்கள் எடுத்திருந்த லக்னௌ அணி கடைசி 5 ஓவர்களி படிப்படியாக விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டெல்லி அணி சார்பில் லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதன் 2 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டையும் எடுத்தனர். லக்னௌ அணி சார்பில் அதிகபட்சமாக அப்துல் சமாத் மற்றும் மிட்சல் மார்ஷ் முறையே 36 மற்றும் 35 ரன்கள் எடுத்தனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



