Home தேசிய national tamil டிரம்ப் கூறுவது போல் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? விக்ரம் மிஸ்ரி பதில்

டிரம்ப் கூறுவது போல் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? விக்ரம் மிஸ்ரி பதில்

18
0

SOURCE :- BBC NEWS

வெளியுறவு அமைச்சகம்

பட மூலாதாரம், ANI

45 நிமிடங்களுக்கு முன்னர்

இந்தியா தனது எண்ணெய் தேவைகளுக்கு ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கவில்லை என்றும், எதிர்காலத்திலும் அப்படிச் செய்யும் எண்ணம் இல்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

திங்களன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், விக்ரம் மிஸ்ரியிடம், ‘அமெரிக்கா கூறுவது போல், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா?’ என்று கேட்கப்பட்டது

”இந்தியாவின் எரிசக்தி தேவையின் சுமார் 80–85% இறக்குமதியையே சார்ந்துள்ளது. எரிசக்தி விலைகள் உயர்ந்து பணவீக்கம் ஏற்படக்கூடும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், இந்திய மக்களுக்கு போதிய அளவில், சரியான விலையில், பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆதாரங்களிலிருந்து எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முக்கிய இலக்காக உள்ளது.” என விக்ரம் மிஸ்ரி கூறினார்.

சமீப ஆண்டுகளில், உலகப் பொருளாதாரம் பல்வேறு நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளது என்றும் இவை உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் நிலைத்தன்மையை பெரிதும் பாதித்துள்ளன என்றும் அவர் கூறினார்

” இந்தியா எரிசக்தி தேவைக்கும் எந்த ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கவில்லை. எதிர்காலத்திலும் அப்படிச் செய்யும் எண்ணமும் இல்லை. இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குகிறது. சந்தை நிலை, விலை, கிடைக்கும் சூழல் போன்ற காரணங்களைப் பொறுத்து இது மாறக்கூடும்.

நிலைத்தன்மையை உறுதி செய்ய, பல்வேறு நாடுகளில் இருந்து எரிசக்தியைப் பெறுவதும், தேவைக்கு ஏற்ப அவற்றை மாற்றுவதுமே எங்களின் அணுகுமுறை. எனவே, இந்த துறையில் நாம் எவ்வளவு அதிகமாக பல்முனைப்படுத்துகிறோமோ, அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும்.” என்றார்

மேலும், எண்ணெய் வாங்கும் முடிவுகளை அரசு நேரடியாக எடுக்கவில்லை என்றும், அரசு மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களே சந்தை நிலை, செலவு, அபாயங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து இந்த முடிவுகளை எடுக்கின்றன என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா விதித்த நிபந்தனை என்ன?

யுக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் உதவுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இதனால் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்த அழுத்தம் கொடுத்து வந்தது.

கடந்த ஆண்டு இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரிகளை விதித்து. இதில் 25% வரி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட ”தண்டனை வரி” ஆகும்.

இந்த நிலையில் பிப்ரவரி 2 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

மேலும், இந்தியாவுக்கு எதிரான 50 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் அறிவித்தார். ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25% வரி முற்றிலும் நீக்கப்பட்டது.

வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு நிர்வாக உத்தரவில், “ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதியளித்துள்ளது. இந்தியா அமெரிக்காவிலிருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவதாகக் கூறியுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவுக்கு அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது

பட மூலாதாரம், Contributor/Getty Images

டொனால்ட் டிரம்ப் விடுத்த மற்றொரு நிர்வாக உத்தரவில், ரஷ்யாவிலிருந்து இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் வாங்கினால், அமெரிக்கா எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், நிர்வாக உத்தரவு 14329-ன் பிரிவு 7-ன் கீழ், ரஷ்ய எண்ணெயை நேரடியாக அல்லது மறைமுகமாக இந்தியா மீண்டும் இறக்குமதி செய்கிறதா என்பதை வர்த்தகம், வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் நிதி செயலர்கள், மற்றொரு மூத்த அதிகாரியுடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

ரஷ்ய கச்சா எண்ணெய் பற்றி அமைச்சர் கூறியது என்ன?

முன்னதாக அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவரங்களை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கிக் கொண்டிருந்த போது, ​​ரஷ்ய கச்சா எண்ணெய்க் கொள்முதல் தொடர்பான அமெரிக்காவின் நிபந்தனை குறித்து பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

“நான் பலமுறை கூறியுள்ளேன், இந்தக் கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலளிக்கும்,” என்று அவர் கூறினார்.

இந்த சூழலில் வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம் அமைந்துள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU