Home தேசிய national tamil சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆட்டோ ஓட்டும் நைஜீரிய பெண்கள்

சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆட்டோ ஓட்டும் நைஜீரிய பெண்கள்

10
0

SOURCE :- BBC NEWS

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக கட்டுப்பாடுகளை உடைத்து ஆட்டோ ஓட்டும் நைஜீரிய பெண்கள்

23 நிமிடங்களுக்கு முன்னர்

நைஜீரியாவில் கேகே மருவா என அழைக்கப்படும் இந்த ஆட்டோக்கள் அங்கு மலிவான மற்றும் பிரபலமான போக்குவரத்து ஆதாரமாக உள்ளது. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இந்த வேலையில், பொருளாதார நெருக்கடியால் பெண்களும் இப்போது ஆட்டோ ஓட்டுகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் இறந்த பின் யெமிசி ஆட்டோ ஓட்டத் தொடங்கினார். இப்போது மற்ற பெண்களும் ஆட்டோ ஓட்டுவதை ஊக்குவிக்கும் சங்கத்தை வழிநடத்துகிறார்.

நைஜீரியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள். ஆனால், ஆண்களைவிட (4.3%) பெண்களிடையே (6.2%) வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது.

யெமிசியின் குழுவில் தற்போது சுமார் 100 பெண்கள் உள்ளனர்.

இந்த பெண்கள் கடன் பெற்று இந்த ஆட்டோக்களை வாங்குகின்றனர். பயணிகளும் இந்த மாற்றத்தால் உற்சாகம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU