Home தேசிய national tamil இந்தியா 256 ரன்கள் குவிப்பு – 2 விக்கெட்டை இழந்த ஜிம்பாப்வே

இந்தியா 256 ரன்கள் குவிப்பு – 2 விக்கெட்டை இழந்த ஜிம்பாப்வே

21
0

SOURCE :- BBC NEWS

இந்தியா 257 ரன்கள் இலக்கு - முதல் விக்கெட்டை இழந்த  ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Getty Images

26 பிப்ரவரி 2026, 13:19 GMT

புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டி-20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு 257 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

14 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்துள்ளது.

ஜிம்பாப்வே அணி ஆறு ஓவர்களுக்குப் பிறகு, விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் விரைவாக ரன்கள் எடுக்க வேண்டிய அழுத்தத்தில், ஜிம்பாப்வே அணி 7வது ஓவரின் இரண்டாவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது.

இரண்டு போட்டிகளுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய அக்சர் படேல், தடிவனாஷே மருமானியை அவுட்டாக்கினார். அவர் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் 41 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

10வது ஓவரின் மூன்றாவது பந்தில் டியான் மேயர்ஸை வீழ்த்தி வருண் சக்ரவர்த்தி ஜிம்பாப்வேக்கு இரண்டாவது விக்கெட்டைக் கொடுத்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா 256 ரன்கள் குவிப்பு - ஹார்டிக் பாண்ட்யா 23 பந்துகளில் அரைசதம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் ஆட்டம் எப்படி?

இந்தியா 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்த உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரைப் பெற்ற சாதனையையும் இந்தியா படைத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 55 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களும் குவித்தனர்.

ஹர்திக் பாண்ட்யா 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். திலக் வர்மா ஆட்டமிழக்காமல், 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா, அதிரடி தொடக்கத்தை வழங்கினர். இதனால் 3 ஓவர் முடிவில் இந்திய அணி 46 ரன்களை குவித்தது.

சஞ்சு சாம்சன் 2 சிக்ஸ் மற்றும் 1 போர் அடித்த நிலையில், 24 ரன்களுக்கு அவுட் ஆனார்.

சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இடையேயான முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் கூட்டணி இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கான சிறந்த தொடக்க கூட்டணியாகவும் அமைந்தது.

அடுத்து களம் இறங்கிய இஷான் கிஷன் உடன் கூட்டணி சேர்ந்து அபிஷேக் சர்மா தனது அதிரடியை தொடர்ந்தார்.

இதனால் பவர் ப்ளே (6 ஓவர்) முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்தது.

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

அபிஷேக் சர்மா 26 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். அபிஷேக் சர்மா அரைசதத்தில் மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அடங்கும்.

நல்ல ஃபார்மில் இருந்த இஷான் கிஷன் 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். இரண்டாவது விக்கெட்டுக்கு இஷான் கிஷானும் அபிஷேக் சர்மாவும் 42 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தனர்.

இதற்கிடையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக அபிஷேக் சர்மா அதிரடி - முதல் விக்கெட்டை இழந்த இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியில் 2 மாற்றம்

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராஸா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தப் போட்டிக்கு இந்திய அணி 2 மாற்றங்கள் செய்திருக்கிறது. அக்‌ஷர் பட்டேல் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாகக் களம் காண்கிறார்.

சஞ்சு சாம்சன் ரிங்கு சிங்குக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்.

சஞ்சு சாம்சன் கீப்பராக செயல்படுவார் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸின் போது தெரிவித்தார்.

“நான் டாஸ் வென்றிருந்தாலும் பேட்டிங் தான் தேர்வு செய்திருப்பேன்” என்றும் சூர்யகுமார் தெரிவித்தார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங் - அக்சர் படேல், சாம்சன் சேர்ப்பு

பட மூலாதாரம், Getty Images

அணியில் யார் யார்?

இந்தியா பிளேயிங் லெவன்

அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா

ஜிம்பாப்வே பிளேயிங் லெவன்

ததிவானஷே மருமானி, பிரதன் பென்னட், டியன் மேயர்ஸ், ரயன் பர்ல், சிகந்தர் ராஸா, டோனி முன்யோங்கா, டசிங்கா முசெகிவா, பிராட் எவன்ஸ், டினோடெண்டா மபோசா, பிளெஸிங் முசர்பானி, ரிச்சர்ட் நகரவா

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU