Home தேசிய national tamil Coimbatore, Madurai, Trichy News Live: நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகளை அகற்றும்...

Coimbatore, Madurai, Trichy News Live: நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம்

1
0

SOURCE :- INDIAN EXPRESS

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Advertisment

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ101.23-க்கும், டீசல் விலை ரூ92.81-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Dec 22, 2024 10:47 IST

    மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம்

    நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவ கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் தலைமையில் 30 பேர் கொண்ட கேரள குழு நெல்லைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் 6 குழுக்களாக பிரிந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

  • Dec 22, 2024 10:38 IST

    இளைஞரிடம் பெப்பர் ஸ்ப்ரே அடித்து ரூ. 30 லட்சம் வழிப்பறி

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இளைஞரிடம் பெப்பர் ஸ்ப்ரே அடித்து ரூ. 30 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இருசக்கர வாகனத்தில் சென்ற அரவிந்தன் என்ற இளைஞரிடம் இருந்து வழிப்பறி செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Dec 22, 2024 10:02 IST

    விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

    சென்னை, பள்ளிக்கரணையில் மதுபோதையில்  இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர்கள், சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐ.டி பொறியாளர்களான விஷ்ணு மற்றும் கோகுல் இருவரும் பார்ட்டியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது.

    Dec 22, 2024 09:36 IST

    ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

    புதுக்கோட்டையில், பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட பெண், ஆண் குழந்தையை பெற்று எடுத்தார். பிரசவம் பார்த்து தாய் மற்றும் குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனை அழைத்துச் சென்ற மருத்துவ உதவியாளர் ரங்கராஜன், ஓட்டுநர் கண்ணன் ஆகியோருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    Dec 22, 2024 09:04 IST

    மருத்துவக் கழிவுகளை கேரளாவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

    நெல்லை மாவட்டத்தில்  கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரத்தில் இருந்து 8 லாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த விவகாரத்தில் நெல்லையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய லாரி உரிமையாளர், கேரளாவைச் சேர்ந்த தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் சூப்பர்வைசர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SOURCE : TAMIL INDIAN EXPRESS