Home தேசிய national tamil ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸுக்கு இலக்கு 221 ரன்கள்

ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸுக்கு இலக்கு 221 ரன்கள்

8
0

SOURCE :- BBC NEWS

ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

29 மார்ச் 2026, 13:55 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அஜிங்க்யா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி இருவரும் அரைசதம் அடித்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய கேகேஆர்

யார் கேகேஆர் ஓப்பனராக ஆடுவார்கள் என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் ஃபின் ஆலன் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் முதல் ஓவர் முதலே அதிரடியாக ஆடினார்கள்.

முதல் இரண்டு ஓவர்களில் மொத்தம் 14 ரன்கள் வந்திருந்த நிலையில் மூன்றாவது ஓவரிலேயே ஸ்பெல்லை மாற்றினார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அல்லா கசன்ஃபர் வீசிய அந்த ஓவரில் ஃபின் ஆலன் 2 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடிக்க 17 ரன்கள் கிடைத்தது. ஹர்திக் பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் ரஹானேவும் அதிரடியில் இணைய அந்த ஓவரில் 26 ரன்கள் வந்தது.

பும்ரா வீசிய ஐந்தாவது ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட, ஐந்து ஓவர்கள் முடிவிலேயே 68 ரன்கள் எடுக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியின் எந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பும் ஒரு போட்டியில் கூட 50 ரன்களைக் கடக்கவில்லை. ஆனால் இந்த சீசனில் முதல் போட்டியிலேயே அதை நிகழ்த்திக் காட்டியது ரஹானே – ஆலன் இணை.

ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

நைட் ரைடர்ஸுக்கு சவால் கொடுத்த ஷார்துல்

கேகேஆர் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில் ஷார்துல் தாக்கூர் ஆறாவது ஓவரை வீச வந்தார். இரண்டாவது ஓவரிலேயே ‘ஆஃப் கட்டர்’ பந்தை வீசி ஆலன் விக்கெட் வீழ்த்தினார் அவர். தான் வீசிய இரண்டாவது ஓவரில் கேமரூன் கிரீன் விக்கெட்டையும் கைப்பற்றினார். தொடர்ந்து ‘ஸ்லோயர் பால்கள்’ வீசிக்கொண்டிருந்த ஷார்துல், பௌன்சர் வீச, அதை அடிக்க நினைத்து டீப் கவர் திசையில் அவுட் ஆனார் ஷார்துல்.

தன்னுடைய மூன்றாவது விக்கெட்டாக கொல்கத்தா கேப்டன் ரஹானேவின் விக்கெட்டையும் கைப்பற்றினார் அவர். 12-வது மற்றும் 13-வது ஓவர்களில் பும்ரா மற்றும் போல்ட் இருவரும் ரன் ரேட்டை சற்று வெகுவாகக் குறைக்க, அது ஏற்படுத்திய நெருக்கடியால் பெரிய ஷாட் அடித்து ஆட்டமிழந்தார் ரஹானே. அவர் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ரஹானே கொல்கத்தா அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்திருந்தார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் இலகுவாக ஆடி பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்தார். பும்ரா இந்தப் போட்டியில் வீசிய முதல் பந்தையும் கூட பவுண்டரிக்கு விளாசியிருந்தார் அவர். இந்த இன்னிங்ஸில் அவர் 3 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடித்தார்.

ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

மும்பைக்கு இலக்கு 221

கடைசி கட்டத்தில் இளம் கொல்கத்தா நைட் ரைடரா பேட்டர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் இன்னிங்ஸை மெதுவாகத் தொடங்கியிருந்தாலும் போகப் போக அதிரடியை அதிகரித்தார். அல்லா கசன்ஃபார், ஷார்துல் தாக்கூர் ஆகியோர் ஓவர்களில் அதிரடியாக ஆடிய அவர், 29 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் சிக்கனமாகப் பந்துவீசி கொல்கத்தா அணியின் வேகத்தைக் குறைத்தார்கள். அதனால் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது.

கேப்டன்கள் டாஸில் சொன்னது என்ன?

டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா, “ஆடுகளம் நன்றாகத் தெரிகிறது. வழக்கத்தை விட அதிக புற்களுடன் பசுமையாக இருப்பதால், அது எப்படி செயல்படுகிறது என்று பார்க்க விரும்புகிறோம். இது எங்களது கோட்டை, ஒட்டுமொத்த கூட்டமும் எங்களுக்கு ஆதரவளிக்க இங்கே கூடியுள்ளது. எனவே நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி அவர்களை மகிழ்விக்க விரும்புகிறோம். பும்ராவும் விளையாடப் போகிறார்.” என்று கூறினார். ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், மிட்செல் சான்ட்னர் என பல கேப்டன்கள் தனக்குத் துணையாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, “நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். வான்கடே மைதானத்தில் இந்த அளவிற்கு புற்களை நான் பார்த்ததே இல்லை. போட்டிக்கு நாங்கள் நன்றாக தயாராகியிருக்கிறோம். கொல்கத்தாவிலும் மும்பையிலும் சில பயிற்சி முகாம்கள் நடைபெற்றன. மும்பை இந்தியன்ஸ் ஒரு சாம்பியன் அணி என்று எங்களுக்குத் தெரியும், அவர்களுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான அந்த அணியின் மோசமான வரலாற்றி பற்றிக் கேட்டபோது, “கடந்த காலத்தைப் பார்க்காமல், இந்த தருணத்தில் கவனம் செலுத்தி விளையாட விரும்புகிறோம்.” என்று ரஹானே கூறினார்.

ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பட மூலாதாரம், Getty Images

நேருக்கு நேர்

இதுவரை இவ்விரு அணிகளும் 35 போட்டிகளில் மோதியிருக்கின்றன. கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி அந்த 35 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 24-இல் வெற்றி பெற்றிருக்கிறது. கேகேஆர் 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. கொல்கத்தாவை விட இரு மடங்குக்கும் அதிகமான போட்டிகளை வென்றிருக்கிறது மும்பை.

அதுவே இந்த அணிகள் வான்கடேவில் மோதிய போட்டிகளின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அது இன்னும் பெரிய வித்தியாசத்தைக் காட்டுகிறது. ஸ்போர்ட்ஸ்டார் தரவுகளின்படி வான்கடேவில் இவ்விரு அணிகளும் மோதிய 12 போட்டிகளில் பத்தில் மும்பை இந்தியன்ஸே வென்றிருக்கிறது. இரண்டு போட்டிகளில் மட்டுமே நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

பிளேயிங் லெவன் & இம்பேக்ட் வீரர்கள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஃபின் ஆலன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேமரூன் கிரீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி (கீப்பர்), ரிங்கு சிங், ரமன்தீப் சிங், அனுகூல் ராய், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா, பிளெஸிங் முசர்பானி.

இம்பேக்ட் வீரர்கள்: மனிஷ் பாண்டே, தேஜஸ்வி சிங், ராவ்மன் பவல், சௌரப் தூபே, கார்த்திக் தியாகி.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, ரியான் ரிக்கில்டன் (கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், நமன் தீர், ஷர்துல் தாக்கூர், மயாங்க் மார்க்கண்டே, அல்லா கசன்ஃபர், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.

இம்பேக்ட் வீரர்கள்: சூர்யகுமார் யாதவ், கார்பின் பாஷ், ராபின் மின்ஸ், ராஜ் பவா, அஷ்வனி குமார்.

13 ஆண்டு சோகத்திற்கு மும்பை இந்தியன்ஸ் முடிவு கட்டுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை சீசனின் முதல் போட்டி என்றாலே அவர்களுக்கு சரியாகப் போகாது. 2013 முதல் 2026 வரை தொடர்ந்து 13 சீசன்களிலும் அந்தந்த சீசன்களின் முதல் போட்டிகளை அந்த அணி தோற்றிருக்கிறது.

2013 முதல் ஒவ்வொரு சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் ஆடிய முதல் ஆட்டத்தின் முடிவுகள்:

2013 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 2 ரன்களில் தோல்வி

2014 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 41 ரன்களில் தோல்வி

2015 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 7 விக்கெட்டுகளில் தோல்வி

2016 vs ரைஸிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் – 9 விக்கெட்டுகளில் தோல்வி

2017 vs ரைஸிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் – 7 விக்கெட்டுகளில் தோல்வி

2018 vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 1 விக்கெட்டில் தோல்வி

2019 vs டெல்லி கேபிட்டல்ஸ் – 37 ரன்களில் தோல்வி

2020 vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 5 விக்கெட்டுகளில் தோல்வி

2021 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 2 விக்கெட்டுகளில் தோல்வி

2022 vs டெல்லி கேபிட்டல்ஸ் – 4 விக்கெட்டுகளில் தோல்வி

2023 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 8 விக்கெட்டுகளில் தோல்வி

2024 vs குஜராத் டைட்டன்ஸ் – 6 ரன்களில் தோல்வி

2025 vs சென்னை சூப்பர் கிங்ஸ் – 4 விக்கெட்டுகளில் தோல்வி

SOURCE : THE HINDU