Home தேசிய national tamil இரானுக்கு மேலும் 10 நாள் கால அவகாசம் – பாகிஸ்தான் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

இரானுக்கு மேலும் 10 நாள் கால அவகாசம் – பாகிஸ்தான் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

7
0

SOURCE :- BBC NEWS

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப், கச்சா எண்ணெய் விலை

பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரான் விவகாரத்தில் ஒரு புதிய ‘கால அவகாசத்தை’ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை இரவு அறிவித்தார். “இரானின் எரிசக்தி நிலையங்கள் மீது அடுத்த 10 நாட்களுக்கு எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக திங்களன்று, இது தொடர்பாக அவர் ஐந்து நாட்கள் கொண்ட ஒரு ‘காலக்கெடுவை’ அறிவித்திருந்தார்; அந்தக் காலக்கெடு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

“இரான் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அதன் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் 10 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளோம். இந்த அவகாசம் ஏப்ரல் 6, 2026 அன்று இரவு 8 மணி வரை அமலில் இருக்கும்,” என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அவர் கூறினார். “போலிச் செய்தி ஊடகங்களின் (Fake News Media) கூற்றுகளுக்கு மாறாக, எங்களது பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன,” என்று டிரம்ப் எழுதியிருந்தார்.

முன்னதாக திங்களன்றும், இரானுடனான தனது பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் பயணித்து வருவதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

இரான் இந்தக் கூற்றை மறுத்ததுடன், பேச்சுவார்த்தைகள் தங்கள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே நடைபெறும் என்றும் கூறியது.

இரானின் ‘பரிசு’

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப், கச்சா எண்ணெய் விலை

பட மூலாதாரம், Gallo Images/Orbital Horizon/Copernicus Sentinel Data 2025

முன்னதாக வியாழக்கிழமை இரவு (இந்திய நேரப்படி), வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ​​இரானிடமிருந்து தங்களுக்குக் கிடைத்த ஒரு ‘பரிசு’ குறித்து டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.

“இரானில் உள்ள சரியான நபர்களுடன் நாங்கள் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். அவர்கள் எங்களுக்கு ஒரு பரிசை அளித்தனர். ‘உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில், 8 பெரிய கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல நாங்கள் அனுமதிக்கிறோம்’ என்று இரான் எங்களிடம் கூறியது,” என்று அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கொடிகளைப் பறக்கவிட்ட 8 கப்பல்கள் உண்மையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றன என்ற தகவல் தனக்குப் பின்னர் கிடைத்ததாக டிரம்ப் கூறினார்.

மேலும் இரண்டு கப்பல்களைச் செல்ல அனுமதிக்கப் போவதாக இரான் பின்னர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். முன்னதாக புதன்கிழமை, நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதி அளித்து வருவதாக இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியிருந்தார்.

“சீனா, ரஷ்யா, இந்தியா, இராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல நாங்கள் அனுமதி வழங்குகிறோம்,” என்று அராக்சி தெரிவித்தார்.

அராக்சியின் இந்தக் கூற்று குறித்த தகவலை, மும்பையில் உள்ள இரானியத் துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒரு சாத்தியமான இடமாகப் பாகிஸ்தானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதை இங்கு நினைவுகூரலாம்.

“மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் முழு ஆதரவை அளிக்கிறது,” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை மாலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஷாபாஸ் ஷெரீப்பின் இந்த அறிக்கையை ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிர்ந்திருந்தார். இதிலிருந்து, பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும் தயாராக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

எண்ணெய் விலையில் லேசான சரிவு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், ஹோர்முஸ் நீரிணை, டிரம்ப், கச்சா எண்ணெய் விலை

பட மூலாதாரம், Agoes Rudianto/Anadolu via Getty Images

பிபிசி நியூயார்க் பிசினஸ் செய்தியாளர் நடாலி ஷெர்மனின் கூற்றுப்படி, இரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பது குறித்த டிரம்பின் சமூக ஊடகப் பதிவிற்குப் பிறகு எண்ணெய் விலைகள் சரிந்தன.

அமெரிக்கப் பங்குச் சந்தை மூடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் 6 வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் கூறினார்.

போர் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக் கூடிய பற்றாக்குறை குறித்த கவலைகளால் வியாழக்கிழமை எண்ணெய் விலைகள் உயர்ந்திருந்தன, ஆனால் டிரம்பின் சமூக ஊடகப் பதிவிற்குப் பிறகு விலைகள் மீண்டும் சரிந்தன.

பிரென்ட் கச்சா எண்ணெயின் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய் சுமார் $108-ல் முடிவடைந்தன, ஆனால் டிரம்பின் அறிவிப்பிற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சுமார் $1 சரிந்தன.

தொழில்நுட்ப நிறுவனங்களின் பெரும் பங்கைக் கொண்ட நாஸ்டாக் குறியீடு, சுமார் 2.4% சரிந்தது. இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணம், அமெரிக்காவில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு தீர்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகளில் ஏற்பட்ட கடுமையான சரிவு ஆகும்.

சமூக ஊடக அடிமைத்தனம் தொடர்பான ஒரு வழக்கில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஜூரி மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனங்களை குற்றவாளிகளாக அறிவித்து, மனுதாரருக்கு ரூ. 56.5 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டது.

அமெரிக்க சந்தைகள் அக்டோபரில் இருந்த சமீபத்திய உச்சத்திலிருந்து 11% சரிந்துள்ள. அவை அதிகாரப்பூர்வமாக சரிவு நிலைக்குள் நுழைந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வியாழக்கிழமை வர்த்தக அமர்வில் எஸ்&பி 500 குறியீடு 1.7% சரிந்தது, அதே நேரத்தில் டௌ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியிடு 1% சரிவுடன் முடிவடைந்தது.

SOURCE : THE HINDU