SOURCE :- BBC NEWS

22 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வருபவருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 27) சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
முன்னதாக, அவர் வெள்ளிக்கிழமை திமுகவில் இணையக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான அய்யப்பனும் திமுகவில் இணைந்தார்.
அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பாக, சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் – ஓ.பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



