SOURCE :- BBC NEWS

காணொளி: பழுப்பு நிறத்தில் விளையும் பருத்தி அறிமுகம்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
நாக்பூரில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகள் பழுப்பு நிற பருத்தி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர், அது தற்போது பயிரிடப்பட்டும் வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிலத்தில் இந்த பழுப்பு நிற பருத்தி வளர்க்கப்படுகிறது.
இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் சில விவசாயிகளுக்கும் இந்த விதைகள் வழங்கப்படுகின்றன, ஏனெனில் இதற்கு அதிக அளவில் ரசாயனம் தெளிக்க வேண்டிய தேவையில்லை. வார்தாவில் உள்ள காதி தொழிற்சாலையிலும் இந்த பருத்தி குறிப்பிட்ட அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
முழு விவரம் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



