Home தேசிய national tamil காணொளி: பாடல் பாடி, நடனமாடி துக்கத்தை வெளிப்படுத்தும் இரானியர்கள்

காணொளி: பாடல் பாடி, நடனமாடி துக்கத்தை வெளிப்படுத்தும் இரானியர்கள்

6
0

SOURCE :- BBC NEWS

காணொளி: பாடல் பாடி, நடனமாடி துக்கத்தை வெளிப்படுத்தும் இரானியர்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இரானின் சமீபத்திய போராட்டங்களின்போது கொல்லப்பட்ட இளைஞர்களின் இறுதிச் சடங்கில் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

குடும்பத்தினர் நடனமாடி, முழக்கங்களை எழுப்பி, கூக்குரலிட்டு அழுது அவர்களின் துக்கத்தை வெளிப்படுத்துவதை இவை காட்டுகின்றன.

மறைந்தவர்களை இசை மற்றும் நடனம் மூலம் கௌரவிக்கும் இரானின் நீண்ட கால பாரம்பரியத்தின் அங்கம் இவை.

வழக்கமாக திருமணத்துக்கு முன்பாக உயிரிழக்கும் இளைஞர்களுக்கு இத்தகைய இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதுண்டு.

சமீப நாட்களில், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் ஆபத்து இருந்தும் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தின் நீதி பெறுவதற்கான உறுதிபாட்டை இத்தகைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

இணைய சேவை முடக்கம் மற்றும் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி சேகரிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பாதிப்பின் முழு அளவை தெரிந்துகொள்வது கடினமாக உள்ளது.

தடைகளைக் கடந்தும் தாங்கள் தளராமல் இருப்பதாக இரானுக்குள் இருக்கும் சில இளம் போராட்டக்காரர்கள் பிபிசியிடம் தெரிவிக்கின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU