Home தேசிய national tamil சுட்டெரிக்கும் கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 10 எளிய வழிகள்

சுட்டெரிக்கும் கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 10 எளிய வழிகள்

3
0

SOURCE :- BBC NEWS

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

வெப்பம் மிகுந்த கோடை மாதங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் வீட்டுக்கு உள்ளேயும் வெப்பம் அதிகமாக உள்ளது.

நீங்கள் மண்ணால் கட்டப்பட்ட ஒரு பழைய வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், வெப்பத்தை அவ்வளவாக உணர மாட்டீர்கள்.

ஆனால் நீங்கள் கான்கிரீட் வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், அதுவும் நகரத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் வசித்தால், வீடு அதிக சூடாகிவிடும்.

அத்தகைய சூழ்நிலையில், 15 நிமிடங்களில் வீடு குளிர்ச்சியடைய ஏசியை ஆன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக நமது நினைவுக்கு வரும். ஆனால் ஏசியும் அதன் பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது.

ஒன்று அது வளிமண்டலத்தில் வெப்பநிலையை அதிகரிக்கிறது, இரண்டாவது மின்சார கட்டணத்தையும் அதிகரிக்கிறது.

இதுபோன்ற நேரங்களில், இயற்கையான முறையில் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க சில வழிகள் உள்ளன.

வீடு கட்டும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. ஆனால் ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டில் நீங்கள் வாழ்ந்தாலும், சில எளிய முறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

1. வீட்டின் கூரையில் வெப்பத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்

எந்தவொரு கட்டடத்தின் கூரையும் மிகவும் வெப்பமாக இருக்கும். ஏனென்றால் பகலில் நீண்ட நேரம் நேரடியாக சூரிய ஒளியைப் பெறும் ஒரே பகுதி இதுதான்.

பெரும்பாலான கட்டடங்களில் சிமென்ட் கான்கிரீட்டால் ஆன கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், மொட்டை மாடிகள் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சுவதால், அங்கு வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த வெப்பத்தை குறைக்க சில பயனுள்ள வழிமுறைகள் உள்ளன.

வீட்டின் கூரையில் வெள்ளை வண்ணம் பூசுவது மிகவும் எளிய மற்றும் பயனுள்ள ஒரு தீர்வாகும்.

வெள்ளை நிறம் அதிகமான சூரிய ஒளியையும் வெப்பத்தையும் பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. இதனால், வீடு அதிகமாக சூடாகாமல் தடுப்பதற்கும், மாலை நேரத்தில் வீடு விரைவாக குளிர்வதற்கும் இது உதவுகிறது.

இது உண்மையில் எவ்வளவு பயனுள்ள முறையாக உள்ளது என்பதைக் கண்டறிய, நாக்பூர் நகராட்சியின் விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (VNIT) கட்டடக்கலைத் துறை, அந்நகரின் கிழக்குப் பகுதியில் ஒரு பரிசோதனையைத் தொடங்கியுள்ளது.

அங்குள்ள 30 வீடுகளின் கூரைகளில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 வீடுகளுக்கு வெள்ளை வண்ணம் பூசப்படவில்லை.

வெள்ளை வண்ணம் பூசப்பட்ட வீடுகளிலும், பூசப்படாத வீடுகளிலும் வெப்பநிலை எந்த அளவிற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளது என்பது பதிவு செய்யப்படும்.

விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் கட்டடக் கலைஞர் டாக்டர் ராஜ்ஸ்ரீ கோதல்கர் இது பற்றிய தகவல்களை வழங்குகிறார்.

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

“நாக்பூர் போன்ற பல நகரங்களில், கோடை காலத்தில் 24 மணி நேரமும் அடுப்பில் வாழ்வது போல் உள்ளது.

முன்பு, மதிய நேரங்களில் மட்டுமே வெப்பமாக இருந்தது, இரவில் வெப்பநிலை குறையும் போது குளிர்ச்சியாக இருந்தது.”

“ஆனால் இப்போது இரவு நேரங்களிலும் வெப்பம் அதிகமாக உள்ளது. சிமென்ட் வீடுகள் பகலில் உறிஞ்சும் வெப்பத்தை இரவில் காற்றில் வெளியிடுகின்றன. எனவே வீட்டை, குறிப்பாக கூரையை, வெள்ளை நிறத்தில் பூசுவது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது,” முனைவர் கோதல்கர்.

ஆனால் கொங்கன் போன்ற அதிக மழை பெய்யும் இடங்களில், மழைநீர் தேங்கி வீட்டிற்குள் ஊடுருவுவதைத் தடுக்க மொட்டை மாடியில் தடிமனான ஓலைக் கூரை அமைக்கப்படுகிறது.

சிமெண்டை விட உலோகம் சூரிய ஒளியை அதிகமாக பிரதிபலிக்கிறது. அதனால் உலோகங்களின் மேல் ஒளியை பிரதிபலிக்கும் வண்ணங்களை பூசுவதும் நன்மை பயக்கும்.

அதாவது சூரியக் கதிர்கள் அந்த வகையான வீடுகளின் கூரையில் நேரடியாக விழாது என்பதாலும், தகடுகளுக்கு கீழே காற்று சுழலும் என்பதாலும், அத்தகைய வண்ணங்கள் பூசப்பட்ட வீடுகளின் கூரை மற்ற வீடுகளை விட குளிர்ச்சியாக இருக்கும்.

அடிப்படையில், வீடு கட்டும் போது சூரிய ஒளி வீட்டின் கூரையில் எவ்வாறு விழுகிறது என்பதை கவனித்தால், பின்னாளில் பல விஷயங்களை எளிதாக நிர்வகிக்க முடியும்.

வீட்டின் கூரையில் களிமண் ஓடுகள் அல்லது கூரை ஓடுகளை பொருத்தலாம். கூரை சிமெண்டால் ஆனதாக இருந்தாலும், அதன் மீது களிமண் ஓடுகள் அல்லது கூரை ஓடுகள் அடுக்கப்பட்டிருந்தால், அந்த வீடு ஒப்பீட்டளவில் குளிர்ச்சியாக இருக்கிறது என்பது பலரின் அனுபவமாக உள்ளது.

கூரையில் மொசைக் ஓடுகள் பதிப்பது அல்லது உடைந்த ஓடுகளால் ஆன கூரை இருப்பது நன்மை பயக்கும். இதுபோன்ற ஓடுகள் ஒளியைப் பிரதிபலிப்பதால், கூரை வெப்பமடைவதில்லை என்று முனைவர் கோதல்கர் கூறுகிறார்.

ஒரு வீட்டிற்கு மேற்கூரை கட்டும்போது, ​​களிமண் அல்லது பானையைப் பயன்படுத்தி ஒரு குழி உருவாக்கப்படுகிறது.

அத்தகைய இடத்தில் உள்ள காற்று குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், வீடும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் வீடு வெளிப்புற வெப்பத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.

“ஆனால் இந்த இடைவெளி, வீட்டில் சேரும் வெப்பக் காற்றை நீக்க முடியாது. எனவே, கூரையின் கட்டமைப்பில் இதைப் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது,” என முனைவர் கோதல்கர் கூறுகிறார்.

2. உயரமான கோபுரங்கள் மற்றும் சுவர்கள் அமைக்கலாம்

குறைந்த அல்லது நடுத்தரமான உயரத்தில் உள்ள வீடுகளுக்கு கூரையில் செய்யப்படும் மாற்றங்கள் நன்மை அளிக்கும். ஏனெனில் அத்தகைய வீடுகளின் சுவரின் சில பகுதிகள் நிழலில் இருக்கும், மேலும் கூரைப் பகுதி மட்டுமே வெப்பமடைகிறது.

ஆனால் உயரமான கட்டிடங்கள் மற்றும் கோபுரங்களில், கூரையை விட சுவர்கள் அதிகமாக சூரிய ஒளியை உறிஞ்சும். ஏனெனில் இவை பெரும்பாலும் மண்ணால் ஆன செங்கற்களால் இல்லாமல், சிமென்ட் கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளன.

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

மெல்லிய சுவர்கள் வீட்டிற்குள் வெப்பத்தை விரைவாக கடத்துகின்றன. எனவே, தடிமனான சுவர்கள் அதிக நன்மை பயக்கும் என்கிறார் முனைவர் கோதல்கர்.

வீடு கட்டும்போது மட்டுமே வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உதவும் பொருளைக் கருத்தில் கொண்டு சுவர் எழுப்ப முடியும். களிமண் அல்லது மண்ணைப் பயன்படுத்தி சுவர்களில் காற்றுப் பைகளை உருவாக்கலாம் அல்லது சுவர்களின் உள்ளே இயற்கை கல் ஓடுகளைப் பயன்படுத்தலாம்.

3. திரைச்சீலைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ?

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

ஒரு வீட்டிற்கு சூரிய ஒளி அவசியம், ஆனால் கோடையில் அதிக சூரிய ஒளி வீட்டிற்குள் நுழையும் போது, ​​அது வீட்டிற்குள் வெப்பநிலையையும் அதிகரிக்கிறது.

வெப்பம் குறைவாக இருக்கும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீட்டின் ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைத்திருப்பதும், கோடை நாட்களில் அவற்றை மூடி வைப்பதும் அல்லது சூரிய ஒளியைத் தடுக்க தடிமனான திரைச்சீலைகளால் மூடுவதும் வீட்டின் வெப்பநிலையைக் குறைக்க உதவும்.

ஆனால் பகலில் வெப்பநிலை 40-45 டிகிரியை எட்டும் வறண்ட காலங்களில் இந்த முறை பயன் அளிக்காது.

எனவே, ஜன்னல்களை குளிர்ச்சியாக வைத்திருக்க நீங்கள் முயற்சி செய்யலாம்.

இதற்கு, சூரியனின் கதிர்கள் நேரடியாக ஜன்னலில் படாமல் இருக்க, சிறிய திரைச்சீலைகள் அல்லது பிரதிபலிப்பு கண்ணாடியைப் பயன்படுத்த நீங்கள் முயற்சிக்கலாம்.

அதிக சூரிய ஒளி விழும் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய ஜன்னல்களிலும் பச்சை நிற வலைகளை நிறுவலாம்.

4. காற்றோட்டத்தை கவனியுங்கள்

வீட்டில் காற்று எவ்வாறு சுழல்கிறது என்பது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

வீட்டிலுள்ள ஜன்னல்கள் காற்றின் திசையில் வடிவமைக்கப்பட்டால், காற்று தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும், மேலும் வெப்பம் சிறிது குறையும்.

வீடு கட்டும் போது ‘குறுக்கு காற்றோட்டத்தை’ எவ்வாறு பராமரிப்பது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

குறுக்கு காற்றோட்டம் என்பது ஜன்னல் அல்லது கதவு வழியாக வரும் காற்று மறுபுறம் வெளியேற அனுமதிக்கும் ஒரு நடவடிக்கை. இதன் மூலம் வீட்டிற்குள் காற்றோட்டம் உருவாகி, வெப்பநிலை அதிகமாக உயராமல் கட்டுப்படுத்தப்படுகிறது.

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இப்போது நகரத்தில், வீடுகள் நிலத்தின் படி கட்டப்படுகின்றன. எனவே, சில நேரங்களில் ஜன்னல்கள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன அல்லது வீடு எந்த திசையை நோக்கி கட்டப்படும் போன்ற விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

தட்டையான அமைப்புகளில் ஒரு வழியாக நுழைந்து, மறு வழியாக காற்று வெளியேறுவதை அனுமதிக்கும் ஜன்னல்கள் உருவாக்கப்படுவதில்லை. கோடை காலத்தில் ஜன்னல்கள் மூடப்பட்டிருக்கும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், மின்விசிறி உதவியுடன் வீட்டில் காற்றோட்டத்தை பராமரிக்கலாம்.

5. மின்விசிறியை சரியாக பயன்படுத்துவது எப்படி ?

பெரும்பாலும், சமையலறை அல்லது குளியலறையில் ஒரு சிறிய மின்விசிறியும், உள்ளிருக்கும் காற்றை வெளியேற்ற ஒரு சிறிய மின்விசிறியும் பொருத்தப்படும், இது உள்ளே இருக்கும் சூடான காற்றை வெளியேற்றும். அத்தகைய விசிறி வீட்டில் குறுக்கு காற்றோட்டத்தை உருவாக்குவதாகக் கருதலாம்.

வீட்டுக்குள் உள்ள கூரையில் மின்விசிறி இருந்தாலும், அது பெரும்பாலும் சூடாகவே இருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், மின்விசிறிகள் சுத்தமாக உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். தூசி நிறைந்த விசிறிகள் கனமாக இருந்தால், அவற்றால் காற்றை சரியாகச் சுழற்ற முடியாது.

சீலிங் ஃபேன் ( மேற்கூரையில் உள்ள மின்விசிறி) சுழலும் திசையும் முக்கியமானது. அது கடிகார திசையில் சுழன்றால், மேல் பகுதியில் இருக்கும் வெப்பமான காற்றை மட்டும் கீழே தள்ளும். எனவே, உங்களது மின்விசிறி எதிர்கடிகார திசையில் (counterclockwise) சுழலுகிறதா என்பதை சரிபாருங்கள் .

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்
கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

சில நேரங்களில், ஒரு பெரிய அறைக்குள், சீலிங் ஃபேனை விட டவர் ஃபேன் ( மேற்கூரையில் இல்லாமல் பக்கவாட்டில் நிற்க வைத்து பயன்படுத்தப்படும் மின்விசிறி) அதிக பயன் தரக்கூடும். ஏனெனில், அது தூரத்திலிருந்தே அறை முழுவதும் காற்றோட்டத்தை தரும்.

சீலிங் ஃபேனின் கீழே ஒரு வாளியில் ஐஸ் அல்லது குளிர்ந்த நீர் வைக்கும் போது, அந்த குளிர்ந்த காற்று வீட்டில் சுழல்வதற்கு உதவியாக இருக்கும். நீங்கள் டவர் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதன் முன் ஒரு ஐஸ் கிண்ணத்தை வைத்து விடுங்கள்.

நிச்சயமாக, இந்தத் தீர்வு மின்விசிறியின் அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிக நன்மை தரும்.

6. சமையலறை வெப்பநிலையை கண்காணியுங்கள்

கோடை காலத்தில், கீசர்கள் மற்றும் தண்ணீரை சூடாக்க உதவும் மின்னணு உபகரணம் போன்றவற்றின் பயன்பாடு குறைக்கப்படுவதால், குளியலறையில் வெப்பநிலை அதிகமாக உயராது.

ஆனால் பெரும்பாலான வீடுகளில் சமையலறைகளில் தான் அதிக வெப்பம் இடமாக இருக்கும்.

சமையலறை ஜன்னல்களின் திசையும், அங்கிருந்து காற்றை வெளியேற்றும் விசிறியும் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளன .

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

கோடையில், சமையலறையில் எதையும் சமைக்கும்போதோ, ​​தண்ணீரை சூடாக்கும்போதோ அல்லது நீரைக் வைக்கும்போதோ கூட, நீராவியின் காரணமாக வெப்பம் அதிகரிக்கும்.

எனவே, வெப்பத்தை வெளியேற்ற உதவும் மின்விசிறி, வீட்டுக்குள் சூடான காற்று சேர அனுமதிக்காததால், அதை தொடர்ந்து இயக்குவது அவசியம்.

இந்த மின்விசிறி சரியாக வேலை செய்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்து, அதை சுத்தமாக வைத்திருங்கள்.

வானிலை சற்று மிதமாக இருக்கும்போது குறைந்தபட்ச வெப்பத்தைப் பயன்படுத்தும் உணவுகளை சமைப்பது நன்மை பயக்கும்.

7. மின் உபகரணங்கள்

வீட்டில் உள்ள அனைத்து மின் சாதனங்களும், எளிய பல்புகள் முதல் மொபைல் போன்கள் வரை அதிகப்படியான வெப்பத்தை உருவாக்குகின்றன.

உங்கள் வீட்டிலுள்ள மின்விளக்கு உங்கள் வீட்டின் வெப்பநிலையை மட்டுமல்ல, உலகின் வெப்பநிலையையும் பாதிக்கும்.

இதனால்தான் அதிக வெப்பத்தை உறிஞ்சும் ஹாலஜன் பல்புகளை விட எல்ஈடி விளக்குகளைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

எல்ஈடி விளக்குகள் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன மற்றும் குறைந்த வெப்பத்தை உருவாக்குகின்றன.

அத்தகைய விளக்குகளை, தேவையில்லாத போது அணைத்து வைப்பது, வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது.

உங்கள் வீட்டில் உள்ள விளக்குகளின் மின் அழுத்தத்தையும் சரி பார்க்க வேண்டும்.

தேவையில்லாத போது மற்ற வீட்டு உபகரணங்களை அணைத்துவிட்டு, அவற்றின் மின் இணைப்பைத் துண்டிக்காமல் வைத்திருங்கள். வீட்டில் மின்சாரம் எவ்வளவு குறைவாக பயன்படுத்தப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக அது வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

8. மரச் சாமான்கள்

வீட்டிலுள்ள வெப்பநிலை, வீட்டிலுள்ள வீடு உபயோகப் பொருட்கள் எதனால் ஆனவை என்பதைப் பொறுத்தது.

குறிப்பாக நீங்கள் ஒரு மெத்தை அல்லது படுக்கை மற்றும் போர்வையில் தூங்கும்போது, ​​அவை எதனால் ஆனவை என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

கோடையில் பருத்தி துணி உடுத்துவது அதிக நன்மை பயக்கும். பாலியஸ்டர் போன்ற சில துணிகள், சுற்றுச்சூழலிலிருந்தும் நம் உடலிலிருந்தும் வெப்பத்தை உறிஞ்சுகின்றன. எனவே, மெத்தைகள், போர்வைகள், திரைச்சீலைகள் மற்றும் பாலியஸ்டர் போன்ற துணிகளால் செய்யப்பட்ட பிற பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கவும்.

இது முடியாவிட்டால், குறைந்தபட்சம் வெளிர் நிற துணிகளைப் பயன்படுத்துங்கள்.

நீங்கள் இரவில் தூங்கப் போகும் அறையின் காற்றோட்டத்தை கவனியுங்கள்.

ஏனென்றால் நாம் அந்த அறையில் ஒரு நாளைக்கு சுமார் எட்டு மணி நேரம் செலவிடுவோம்.

9. வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள்

உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள சூழலைப் பொறுத்தது.

கான்கிரீட் வெப்பத்தை உறிஞ்சுவதால், வீட்டைச் சுற்றியுள்ள பகுதி முழுவதுமாக கான்கிரீட்டால் ஆனதாக இருந்தால், வெப்பம் இன்னும் அதிகரிக்கும்.

சிமெண்டால் கட்டப்பட்ட வீடுகள் பரவலாக இருப்பதால், இந்த வகையான சூழ்நிலை குறிப்பாக நகரங்களில் பரவலாக உள்ளது. இது நகர்ப்புற வெப்ப தீவு என்றும் அழைக்கப்படுகிறது.

பெரும்பாலும், வீட்டைச் சுற்றி தூய்மையை பராமரிக்க மண்ணால் ஆன முற்றத்தை விட, கல் அல்லது சிமென்ட் நடைபாதைகள், சிமென்ட் ப்ளாக் வகைகள் போன்றவை அமைக்கப்படுகின்றன.

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

அதற்கு பதிலாக, மண் முற்றம் இருந்தால் அல்லது செங்கற்கள் மற்றும் களிமண் ஓடுகள் பயன்படுத்தப்பட்டால், காற்று சற்று குளிர்ச்சியாக இருக்கும்.

வீட்டைச் சுற்றி தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தாலோ அல்லது நீர் ஆதாரம் இருந்தாலோ அதுவும் நன்மை பயக்கும்.

உதாரணமாக, தோட்டத்தில் ஒரு நீரூற்று இருப்பது நல்லது.

இருப்பினும், தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் பெருகும் அபாயம் இருப்பதால், அத்தகைய நீர் தேங்கி நிற்காமல் கவனமாக இருங்கள். மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த முறையை செயல்படுத்த முடியாது.

10. மரம் நடுங்கள்

வீட்டைச் சுற்றிலும், கூரையிலும் கூட பசுமையான சூழல் இருந்தால், வீட்டின் உள்ளே வெப்பநிலை சற்று குறைவாக இருக்கும்.

அழகுக்காக வளர்க்கப்படும் மரங்களை விட பூர்வீக மரங்கள் வெப்பநிலையை சிறப்பாகக் கட்டுப்படுத்துகின்றன. நகர்புற வீடுகளில் ஜன்னல்களில் சிறிய மரங்கள் அல்லது கொடிகள் நடப்படுகின்றன.

கோடை, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

வீட்டுக்குள் வளர்க்கப்படும் தாவரங்கள் வீட்டில் சேரும் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி உள்ளே வெப்பநிலையைக் குறைக்க உதவுகின்றன.

ஆனால் வெறும் மரங்களை நடுவதால் மட்டும் பலன் கிடைக்காது.

இதுகுறித்து முனைவர் கோதல்கர் பேசுகையில், “ஒரு மரத்தால் எவ்வளவு வெப்பத்தைக் குறைக்க முடியும்? எனவே, நாம் அனைத்து நிலைகளிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனென்றால், இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்கும் நோக்கத்துடன் நம் வீட்டைக் கட்டினால், அந்த வீட்டை குளிர்விப்பதற்கும் சூடாக்குவதற்கும் ஆகும் செலவு எதிர்காலத்தில் மிகக் குறைவாக இருக்கும்” என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU