SOURCE :- BBC NEWS

5,000 எறும்புகள் ரூ.6.5 லட்சம்: நூதன முறையில் எறும்புகளை கடத்தி இவர்கள் என்ன செய்கிறார்கள்?
3 மணி நேரங்களுக்கு முன்னர்
கென்யாவில் ஆயிரக்கணக்கான எறும்புகளை கடத்திய நான்கு கடத்தல்காரர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது அந்த நாட்டு நீதிமன்றம்.
ஆப்பிரிக்க ஹார்வெஸ்டர் எறும்புகள் என்று அழைக்கப்படும் எறும்புகளின் ராணி எறும்புகள் கடத்தப்பட்டு, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது என்கின்றனர் கென்ய வனஉயிர் சேவை அதிகாரிகள்.
கென்யா வனஉயிர் சேவையினர் (KWS) அந்த ஆயிரக்கணக்கான ராணி எறும்புகளை கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர். இவை 2 மாதங்கள் வரை உயிருடன் இருக்கும் வகையில் ‘டெஸ்ட் ட்யூப்களில்’ அடைக்கப்பட்டிருந்தன.
ரூ. 6.5 லட்சம் மதிப்புள்ள 5000 எறும்புகளை கடத்தியதற்காக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது கென்யாவில் நடந்த மிகப்பெரிய உயிரி-கடத்தல் என்கின்றனர் அதிகாரிகள்.
மிகப்பெரிய உயிர்களை மட்டுமே இதுவரை பாதுகாத்த ‘KWS’ அரிய வகை பூச்சியினங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என்கிறது. இப்போது இந்த எறும்புகள் என்னவாகும் என்று தெரியவில்லை.
முழு விவரம் காணொளியில்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : THE HINDU