Home தேசிய national tamil ‘ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா ஏன் சுங்கம் வசூலிக்கக் கூடாது?” – டிரம்ப்

‘ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்கா ஏன் சுங்கம் வசூலிக்கக் கூடாது?” – டிரம்ப்

5
0

SOURCE :- BBC NEWS

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Tom Williams/CQ-Roll Call, Inc via Getty Images

போர் முடிவடைந்த பிறகு, ஹோர்மூஸ் நீரிணையில் சுங்கக் கட்டணத்தை இரானல்ல, அமெரிக்காவே வசூலிக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

உண்மையில், திங்களன்று செய்தியாளர்கள் அவரிடம், “இரான் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிரம்ப் பதிலளிக்கையில், “நாம் ஏன் சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது? அவர்கள் கட்டணம் வசூலிப்பதை விட, நாமே அதைச் செய்வதையே நான் விரும்புவேன். நாம் ஏன் கட்டணம் வசூலிக்கக் கூடாது? நாமே வெற்றியாளர்கள். நாம் வெற்றி பெற்றுவிட்டோம்,” என்று கூறினார்.

எனினும், இரானுடனான எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளிலும், ஹோர்மூஸ் நீரிணையைத் திறந்துவிடுவது கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“எனக்கு ஏற்புடையதாக இருக்கும் ஒரு ஒப்பந்தம் நமக்குத் தேவை; அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தடையற்ற எண்ணெய் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும்,” என்று டிரம்ப் கூறினார்.

ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து தாங்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்போவதாக இரான் முன்னதாக அறிவித்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

SOURCE : THE HINDU