SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Getty Images
புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத், நாட்டின் புதிய தலைமை “முந்தைய தலைமையை விட புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்” என்றார்.
ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படைகளைச் சென்று சந்தித்து வந்ததாகக் கூறும் அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த இடம் என்பதைக் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்தார்.
“இந்தப் பயணம் பெருமைக்குரியது” எனக் குறிப்பிட்ட அவர் அமெரிக்காவின் சிறந்தததைப் பார்த்ததாகவும் தெரிவித்தார்.
இந்தப் போரில் ஈடுபட்டுள்ள படை வீரர்களின் மனநிலை இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போரின்போது இருந்ததற்கு நேர் எதிராக உள்ளதாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது “ராணுவ நடவடிக்கைகள் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த முறை உந்துதல், கவனம் மற்றும் வேலையை முடிக்க வேண்டும் என்கிற ‘அவசரமும்’ தெரிகிறது.” என்றார்.

அமெரிக்காவின் ராணுவ வலிமை அதிகரித்து வருவதாகக் கூறும் அவர் இரானின் ராணுவ வலிமை சரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.
“கடந்த 24 மணி நேரத்தில் தான் இரான் குறைந்த அளவிலான ஏவுகணைகளைச் செலுத்தியது. இரான் ராணுவம் சேதப்படுத்தப்பட்டதால் வீரர்கள் விலகிச் செல்வது ராணுவ தலைவர்களிடத்தில் ஏமாற்றம் ஆகியவை ஏற்பட்டுள்ளது,” என ஹெக்செத் கூறினார்.
டிரம்புடன் ஒரு ஒப்பந்தத்திற்கு அவர்கள் (இரான்) ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அமெரிக்க ராணுவம் “மேலும் கூடுதல் தீவிரத்துடன்” தொடரும் என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
அவரைத் தொடர்ந்து பேசிய அமெரிக்க ராணுவ கூட்டு படைகளின் தலைவர் டேன் கெயின் ராணுவத்தின் நடவடிக்கைகளை விவரித்தார்.
” கடந்த 30 நாட்களில் 11,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டது,” எனத் தெரிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த ஹெக்செத், “முன்னர் இருந்ததைவிட தற்போது அதிக அளவிலான கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியே செல்கிறது.” என்றார்.
பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே பொதுவெளியில் முரண்பாடு நிலவுவது மற்றும் ராணுவ உத்தியில் அதன் தாக்கம் பற்றிய கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
“பேச்சுவார்த்தை நிஜமாகவும், துடிப்புடனும், வலுவாகவும் நடைபெற்று வருகிறது,” என்றார் ஹெக்செத்.

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
இலக்குகளை அடைய எவ்வளவு காலம் எடுக்கும் என்கிற கேள்விக்குப் பதிலளித்த ஹெக்செத், “நீங்கள் என்ன செய்ய அல்லது என்ன செய்யாமல் இருக்க தயாராக இருக்கிறீர்கள் என்பதை உங்களின் எதிரிகளிடம் சொல்லாதீர்கள். மேலும் நீங்கள் எப்போது நிறுத்த விரும்புகிறீர்கள் என்பதையும் உங்களின் எதிரியிடம் சொல்லாதீர்கள்.” எனக் கூறினார்.
‘உங்கள் எண்ணெயை பெற்றுக் கொள்ளுங்கள்’ – டிரம்ப்
“ஹோர்மூஸ் நீரிணையைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகளால் தங்களின் விமானங்களுக்கு எரிபொருள் பெற முடியாத பிரிட்டன் போன்ற நாடுகள், தைரியத்தை தாமதமாகவேனும் வரவழைத்து ஹோர்மூஸ் நீரிணைக்குச் சென்று அதனை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்,” என தனது ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், “நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களின் உதவிக்கு வராததைப் போல அமெரிக்கா இனி உங்களின் உதவிக்கு வராது.” எனத் தெரிவித்துள்ளார்.
“இரான் அடிப்படையில் அழிக்கப்பட்டுவிட்டது. கடினமான கட்டம் முடிந்துவிட்டது,” எனத் தெரிவித்த அவர், ”சென்று உங்கள் எண்ணெயை பெற்றுக் கொள்ளுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மற்றுமொரு பதிவில் பிரான்ஸ் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், “இஸ்ரேலுக்கு ராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானங்களை தங்களின் வான்பரப்பு வழியே செல்ல பிரான்ஸ் அனுமதிக்கவில்லை. இரான் விவகாரத்தில் பிரான்ஸ் உதவவே இல்லை. அது தற்போது வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுவிட்டது.” என்றார்.
அந்தப் பதிவின் முடிவில், “அமெரிக்கா இதை நினைவில் கொள்ளும்” என்றும் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பெருகி வரும் அமெரிக்காவின் அதிருப்தி
பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர், பிபிசி
பீட் ஹெக்செத் மற்றும் ஜெனரல் டேன் கெயின் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, இரானில் நடந்து வரும் போரின் போக்கை உலகம் புரிந்துகொள்ள உதவும் புதிய தகவல்கள் எதையும் பெரும்பாலும் வழங்கவில்லை.
இருப்பினும், ஒரு விஷயம் தனித்து நிற்கிறது. டொனால்ட் டிரம்ப் அரசு, தனது கூட்டாளிகளின் ஈடுபாடு இல்லாமையைக் கண்டு பொறுமையிழந்து வருகிறது.
குறிப்பாக ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது தொடர்பாக இந்த அதிருப்தி நிலவுகிறது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், அந்த கூட்டாளிகள் “தைரியத்தை தாமதமாகவேனும் வரவழைத்துக்கொள்ள” வேண்டும் என்றும், அந்த நீரிணையை “கட்டுப்பாட்டில் எடுக்க” வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.
பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ஒரு தொலைபேசி பேட்டியில், தனது கருத்தை மேலும் விவரித்து கூட்டாளிகள் “தங்கள் வேலையைத் தாங்களே செய்ய வேண்டும்” என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா “வெற்றிக்கான சூழலை உருவாக்கிவிட்டது” என்றும், ஹோர்மூஸ் நீரிணை என்பது “அமெரிக்காவின் பிரச்னை மட்டும் அல்ல” என்றும் வாதிட்டு ஹெக்செத் அந்த அதிருப்தியை இரட்டிப்பாக்கினார்.
”இந்தத் தோல்வியாகக் கருதப்படும் செயல், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க கூட்டாளிகளுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று பாதுகாப்புச் செயலர் பின்னர் குறிப்பிட்டார்.
“நிறைய விஷயங்கள் அம்பலமாகியுள்ளன,” என்று அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பிலோ அல்லது டொனால்ட் டிரம்ப்பின் முந்தைய பதிவிலோ ஓர் உண்மை பற்றி பேசப்படவில்லை. இரானில் அமெரிக்க -இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு வரை, ஹோர்மூஸ் நீரிணை வணிகத்திற்காகத் திறந்தே இருந்தது என்பதுதான் அது. இதை வெளிநாட்டு தலைவர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



