SOURCE :- BBC NEWS

ஸ்கூட்டரில் கலக்கும் ஆமதாபாத் பாட்டிகள் – 80 வயதிலும் பிரியாத நட்பு
2 மணி நேரங்களுக்கு முன்னர்
குஜராத்தின் ஆமதாபாத்தைச் சேர்ந்த மந்தா ஷா, உஷா ஷா எப்போதும் ஒன்றாகவே ஸ்கூட்டரில் பயணிக்கிறார்கள்.
மக்கள் இவர்களை ஷோலே படத்தின் கதாபாத்திரங்களான ஜெய் மற்றும் விரு பெயரில் அழைப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.
”இவர்கள் நட்பை பாருங்கள் என்று மக்கள் சொல்வார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் நான் ஸ்கூட்டர் பாட்டி. நான் ரோட்டில் ஸ்கூட்டரில் செல்லும்போது, மற்ற வாகன ஓட்டிகள், பாட்டி ஸ்கூட்டரை மிக அழகாக ஓட்டுகிறார் என்று கூறுவார்கள். பேருந்து ஓட்டுநர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் என்னைப் பாராட்டி கை காட்டுவார்கள். சில சமயங்களில் மக்கள், ஸ்கூட்டர் ஓட்டுவதை நிறுத்து என்று சொல்வார்கள். இதுதான் என் வாழ்க்கை, பலம், ஆர்வம் என்று அவர்களிடம் கூறுவேன்.” என்கிறார் மந்தா ஷா .
மேலும் விவரங்கள் காணொளியில்…
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU