Home தேசிய national tamil வெயிலுக்கு இதம் தரும் நொங்கை கடும் வெயிலில் விற்கும் பெண்ணின் ஒருநாள் போராட்டம்

வெயிலுக்கு இதம் தரும் நொங்கை கடும் வெயிலில் விற்கும் பெண்ணின் ஒருநாள் போராட்டம்

3
0

SOURCE :- BBC NEWS

வெயிலுக்கு இதம் தரும் நொங்கை கடும் வெயிலில் விற்கும் பெண்ணின் ஒருநாள் போராட்டம்

30 நிமிடங்களுக்கு முன்னர்

35 டிகிரி செல்சியஸ் கடும் வெப்பத்தை தினமும் எதிர்கொண்டு வருகிறார் சரண்யா. இவர் ஒரு நுங்கு வியாபாரி.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பகுதியில் சோழனூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா அதிகாலை 4 மணி முதலே நுங்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட தொடங்குவார்.

உத்திரமேரூரில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நுங்கு வியாபாரம் செய்து வருகிறார்.

ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே நுங்கு சீசன் உள்ளதால், வெப்ப அலையை எதிர்கொண்டு வியாபாரம் செய்து வரும் சரண்யா, இதனால் உடல்ரீதியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கூறுகிறார்.

நடப்பு ஆண்டில் அதிக வெப்ப அலை நாட்களை எதிர்கொள்ள வேண்டியது வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரை 733 பேர் இறந்துள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது.

தனது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக இந்த இரண்டு மாதங்களும் வெப்ப அலையுடன் போராடி வருகிறார் சரண்யா.

மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பதில் பனை நுங்கு பயன்படுவதால் அதை விற்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக கூறுகிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU