SOURCE :- BBC NEWS

விண்வெளியில் இருந்து இமயமலையை பார்த்த அனுபவம் பகிரும் சுனிதா வில்லியம்ஸ்
11 நிமிடங்களுக்கு முன்னர்
சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்தியாவை பார்த்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர், “இந்தியா அற்புதமானது! ஒவ்வொரு முறை நாங்கள் இமயமலையைக் கடக்கும் போதும், புட்ச் சில சிறந்த புகைப்படங்களை எடுத்தார். அதுவொரு அலை போன்ற அமைப்பாக உள்ளது. கண்டத்தட்டுகள் மோதியபோது ஏற்பட்ட தாக்கம் இந்தியா முழுவதும் பரவியது. இமயமலைப் பகுதி பல்வேறு அழகான நிறங்களைக் கொண்டுள்ளது,” என்று கூறினார்.
மேலும், “கிழக்கிலிருந்து குஜராத் மற்றும் மும்பைக்குச் செல்லும்போது, கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க குழுவாகச் செல்லும் படகுகளின் வெளிச்சம் இந்தியா வந்துவிட்டோம் என்பதை உணர்த்தியது. அதேநேரம், இந்தியா முழுவதும், பெரிய நகரங்களில் இருந்து சிறிய நகரங்களுக்குப் பரவிய ஒளிகளின் ஒரு வலையமைப்பைப் போலத் தோன்றியது.
இதை இரவிலும் பகலிலும் பார்க்கும்போது நம்ப முடியாத அளவுக்கு அழகாக இருந்தது. இதற்கு மிகப்பெரிய அழகைக் கூட்டுவது இமயமலைகளே. அவை முன்புறத்தில் இந்தியாவுக்குள் சென்றுகொண்டே இருக்கும் ஓர் அற்புதமான இயற்கை அமைப்பாகத் தோன்றுகின்றன,” என்றும் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
SOURCE : BBC