Home தேசிய national tamil புதிய போப்பாக தேர்வாகியுள்ள ராபர்ட் ஃப்ரெவொஸ்ட் யார்? முதன் முதலாக என்ன பேசினார்?

புதிய போப்பாக தேர்வாகியுள்ள ராபர்ட் ஃப்ரெவொஸ்ட் யார்? முதன் முதலாக என்ன பேசினார்?

2
0

SOURCE :- BBC NEWS

புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராபர்ட் ஃப்ரெவொஸ்ட் - யார் இவர்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பால் கிர்பி
  • பதவி, ஆசிரியர், ஐரோப்பா டிஜிட்டல் சேவை
  • 9 மே 2025

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

புனித பீட்டர்ஸ் பேராலய மாடத்தின் முன்பு, அடுத்த போப் யார் என்று அறிவிப்பதற்கு முன்பாகவே, அங்கு கூடியிருந்த மக்கள் ‘விவா இல் பாபா’ (நீடூழி வாழ்க போப்) என்ற முழக்கங்களை எழுப்பினார்கள்.

புனித பீட்டர்ஸ் பேராலயத்தின் அரியாசனத்தை அலங்கரிக்க உள்ள 267வது போப் ஆண்டவராக ராபர்ட் ப்ரெவோஸ்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். 69 வயதான அவர் இனி பதினான்காம் லியோவாக அறியப்படுவார்.

அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் போப் இவர். இருப்பினும்கூட லத்தீன் அமெரிக்காவில் இருந்து வந்த கார்டினலாக அவர் அறியப்படுகிறார். பாதிரியார் ஆவதற்கு முன்பு தனது வாழ்நாளின் பெரும் பகுதியை அவர் பெரு நாட்டில் திருப்பணி செய்வதற்காகக் கழித்ததால் அவர் அவ்வாறு அறியப்படுகிறார்.

புதிய போப், ராபர்ட் ப்ரெவோஸ்ட், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், EPA

அமெரிக்காவின் சிகாகோவில், ஸ்பானிய மற்றும் ஃப்ரான்கோ – இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு மகனாக 1955ஆம் பிறந்தார். இவர் பாதிரியார்களுக்கு உதவி புரியும் சிறுவனாக (Altar boy) சேவை செய்தவர். பிறகு அவர் 1982ஆம் ஆண்டு மதபோதகராகப் பொறுப்பேற்றார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் அவர் பெருவுக்கு குடி பெயர்ந்தார். இருப்பினும் அடிக்கடி அமெரிக்காவுக்கு வந்து தன்னுடைய சொந்த நகரில் திருப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.

பெரு நாட்டின் குடியுரிமையைப் பெற்ற அவர், அங்குள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

வடமேற்கு பெருவில் அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் மதபோதகராகவும், அங்குள்ள ஜுரில்லோவில் செயல்பட்டு வந்த இறைப்பள்ளியில் (seminary) ஆசிரியராகவும் பணியாற்றினார்.

புதிய போப், ராபர்ட் ப்ரிவோஸ்ட், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

ஃபிரான்சிஸ் குறித்துப் பேசிய புதிய போப் 14ஆம் லியோ

போப் ஆண்டவராகப் பொறுப்பேற்ற பிறகு 14ஆம் லியோ முதலில் பேசிய வார்த்தைகள் அவருக்கு முன்பு போப் ஆண்டவராகப் பொறுப்பு வகித்த ஃபிரான்சிஸ் குறித்துதான்.

“நம்மை ஆசீர்வதித்த, பலவீனமான ஆனால் துணிச்சல்மிக்க போப் ஃபிரான்சிஸின் குரலை நாம் தற்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

“ஒற்றுமையாக, கடவுளின் கரங்களைப் பற்றிக் கொண்டு நாம் முன்னேறிச் செல்வோம்,” என்று பேராலயத்தின் முன்பாகக் கூடியிருந்த மக்களிடம் தெரிவித்தார்.

அப்போது புனித அகஸ்டினியன் ஆணையில் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கும் பொறுப்பு குறித்தும் பேசினார். 30 வயதில், அகஸ்டினியன் திருப்பணியின் ஒரு பகுதியாக அவர் பெருவுக்கு சென்றார்.

ஃபிரான்சிஸ் போப் ஆண்டவராகப் பொறுப்பேற்ற ஓர் ஆண்டில் ராபர்ட் ப்ரெவோஸ்டை சிக்லயோவின் பாதிரியாராக நியமித்தார். லத்தீன் அமெரிக்காவில் பாதிரியார்களைத் தேர்வு செய்து, கண்காணிக்கும், நிர்வாகக் குழுவின் சிறந்த தலைமையாக அவர் செயல்பட்டதால் இதர கார்டினல்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார் ராபர்ட் ப்ரெவோஸ்ட்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் பேராயராக நியமிக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களிலேயே ஃபிரான்சிஸ் அவரை கார்டினலாக நியமித்தார்.

இவர் சமீபத்தில் கார்டினலாக தேர்வு செய்யப்பட்டாலும்கூட, போப்பை நியமிக்கும் ‘கான்க்ளேவ்’ நிகழ்வில் பங்கேற்ற 80% கார்டினல்கள் ஃபிரான்சிஸால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், ராபர்ட் ப்ரெவோஸ்டை தேர்வு செய்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

போப் லியோவின் பார்வை என்ன?

புதிய போப், ராபர்ட் ப்ரிவோஸ்ட், முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

கத்தோலிக்க திருச்சபையில் ஃபிரான்சிஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியை ஆதரிக்கும் ஒரு நபராக அவர் காணப்படுவார். குடியேறிகள், ஏழைகள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ப்ரெவோஸ்டின் பார்வை ஃபிரான்சிஸின் கண்ணோட்டத்தோடு பொருந்தும் என்று நம்பப்படுகிறது.

ஒரு கார்டினலாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் கருத்துகளுக்கு பதிலடி தர அவர் ஒரு போதும் தயங்கியதில்லை.

அமெரிக்கர் ஒருவரை எல் சல்வடோருக்கு நாடு கடத்திய டிரம்பின் நிர்வாகத்தை விமர்சனம் செய்து ப்ரெவோஸ்ட் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். மேலும், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு ஜே.டி.வான்ஸ் அளித்திருந்த நேர்காணலை விமர்சனம் செய்து வெளியிடப்பட்ட செய்தி ஒன்றையும் அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

“ஜே.டி.வான்ஸ் தவறு: மற்றவர்கள் மீதான நம்முடைய அன்பை இயேசு மதிப்பிட அழைக்கவில்லை,” என்று நேஷனல் காத்தலிக்க ரிப்போர்ட்டர் இணையத்தில் வெளியான செய்தியின் தலைப்பை மீண்டும் குறிப்பிட்டு அந்தக் கட்டுரையைப் பதிவிட்டிருந்தார்.

ப்ரெவோஸ்ட் ஓர் அமெரிக்கர் என்றாலும்கூட, கத்தோலிக்க திருச்சபையின் உள்ளே இருக்கும் பிரிவுகள் குறித்து நன்கு அறிந்திருப்பினும்கூட, லத்தீன் அமெரிக்க பின்புலம், அர்ஜென்டினாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட போப் ஃபிரான்சிஸின் தொடர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

ப்ரெவோஸ்டை போப் ஃபிரான்சிஸுக்கு பிறகு லத்தீன் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்டவராகவும், முதல் அகஸ்தினியன் போப்பாகவும் வாடிகன் குறிப்பிடுகிறது.

பெருவில் அவர் பணியாற்றிய காலகட்டத்தில், பேசுபொருளான பாலியல் தொந்தரவு தொடர்பான சச்சரவுகளில் இருந்து இவர் தப்பிக்கவில்லை. இருப்பினும் அவருடைய திருச்சபை மாவட்டம், இந்த விவகாரத்தை மறைக்க ப்ரெவோஸ் எந்த வகையிலும் முயலவில்லை என்று கூறி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவிட்டது.

கான்க்ளேவ் நடைபெறுவதற்கு முன்பு, வாடிகனின் செய்தித் தொடர்பாளர் மாட்டியோ ப்ரூனி, “திருச்சபையை நிர்வாகிக்கும் தலைமைப் பண்போடு, விரக்தி நிறைந்த உலகுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வரத் தெரிந்த தீர்க்கதரிசியான ஒரு போப்,” தேவையாக இருக்கிறார் என்று கூறினார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU