Home தேசிய national tamil தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?

தினசரி ஒரு வைட்டமின் மாத்திரை எடுத்தால் மருத்துவரிடம் செல்லும் அவசியமே வராதா?

2
0

SOURCE :- BBC NEWS

வைட்டமின் மாத்திரைகள், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

59 நிமிடங்களுக்கு முன்னர்

வைட்டமின் மாத்திரைகள் உற்பத்தி செய்யும் தொழில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கள் உடல்நலனின் ஒரு முக்கிய அங்கமாக வைட்டமின் மாத்திரைகளை பலரும் கருதுகின்றனர்.

லண்டனை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் சந்தை ஆய்வு நிறுவனமான மின்டெல், மூன்றில் இரண்டு பங்கு நுகர்வோர் வைட்டமின்கள், தாதுக்கள் அல்லது மற்ற சப்ளிமென்டுகளை (மாத்திரை, மருந்து, பவுடர், கம்மி, ஜெல் வடிவிலானவை) உட்கொள்வதாகக் கூறுகிறது.

இவர்களுள் பெரும்பாலானோர் எவ்வித வைட்டமின் பற்றாக்குறையையும் சரிசெய்ய இவற்றை எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு பதிலாக, தங்கள் உடல்நலனை இந்த வைட்டமின் மாத்திரைகள் மேம்படுத்தும் என அவர்கள் நம்புகின்றனர்.

சந்தைகளில் இத்தகைய ஏராளமான வைட்டமின் சப்ளிமென்டுகள் கிடைக்கின்றன, இவை வெவ்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையாக உள்ளன. அதாவது பல வைட்டமின்கள் (மல்டிவைட்டமின்) அடங்கியவையாக உள்ளன. அவற்றில் எந்த வைட்டமின் உங்களுக்குப் பயனளிக்கும் என அறிவது கடினம்.

ஆரோக்கியமாக இருக்க 13 அடிப்படையான வைட்டமின்கள் தேவை. ஆனால், அவற்றை சப்ளிமென்ட் வடிவில் தான் எடுக்க வேண்டுமா?

வைட்டமின் மாத்திரைகளை தினமும் எடுக்க வேண்டுமா?

வைட்டமின் மாத்திரைகள், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

இருவிதமான வைட்டமின்கள் உள்ளன, ஒன்று கொழுப்பில் கரையக்கூடியது, மற்றொன்று நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்.

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கே) உங்கள் உடலில் சேமிக்கப்படும், இதனால் தினமும் மாத்திரைகளை எடுக்காமலேயே அதை சரியான அளவில் வைத்திருக்க முடியும்.

இந்த வைட்டமின் மாத்திரைகளை எடுக்கும்போது அதன் அளவு அதிகரித்து பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு, எனவே அதை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

நீரில் கரையும் வைட்டமின்கள் (வைட்டமின்கள் சி மற்றும் பி, ஃபோலிக் அமிலம் போன்றவை) உடலில் சேமிக்கப்படாது, எனவே சரியான அளவில் இந்த வைட்டமின்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், இந்த வைட்டமின்களை அதிகமாக எடுத்துக்கொண்டால், தேவையானதைவிட மிகுதியான அளவு சிறுநீரில் வெளியேறும். கல்லீரல் வைட்டமின் பி-ஐ சேமித்து வைக்கும்.

மல்டிவைட்டமின் மாத்திரைகளில் கால்சியம், துத்தநாகம், இரும்பு போன்ற தாதுக்களும் உள்ளன. இதை அதிகமாக எடுக்க வேண்டிய தேவை எழுந்தால் மட்டுமே, இந்த தாதுக்கள் போதுமான அளவில் உங்கள் உணவிலிருந்தே கிடைக்கும்.

வலுவான எலும்புகளுக்கு கால்சியம் மிக அவசியம், தினமும் 700 மிகி கால்சியம் தேவை.

நோயெதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான அமைப்புகளுக்கு துத்தநாகம் முக்கியம். ஆண்களுக்கு தினமும் 9.5 மி.கிராமும் பெண்களுக்கு 7 மி.கிராமும் ஜிங்க் தேவை.

உணவிலிருந்து ஆற்றலை வெளியேற்றவும் ரத்தத்துக்கு ஆக்சிஜனை கடத்தவும் இரும்புச்சத்து தேவை. 19-50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 14.8 மி.கிராமும் ஆண்களுக்கு 8.7 மி.கிராம் இரும்புச்சத்தும் தினமும் தேவை.

மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம் யார் பயனடைவார்கள்?

வைட்டமின் மாத்திரைகள், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டனின் அரசு சுகாதார முகமையான என்.ஹெச்.எஸ், இலையுதிர்க் காலம் மற்றும் குளிர் காலத்தில் பிரிட்டனில் உள்ளவர்கள் வைட்டமின் டி சப்ளிமென்ட்-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது.

ஆரோக்கியமான மற்றும் வலுவான பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளுக்கு முக்கியமான கால்சியத்தை உறிஞ்சுவதில் வைட்டமின் டி உதவுகிறது.

பாஸ்ஃபேட் மற்றும் மக்னீசியத்தை உறிஞ்சவும் இது உதவுகிறது.

பசியின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வயதானவர்கள் சிறப்பு மல்டிவைட்டமின்களை எடுத்துக்கொள்வதன் மூலம் பயனடையலாம். இதுதொடர்பாக மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியம்.

வீட்டிலேயே இருப்பவர்கள் அல்லது வயதானவர்கள் வைட்டமின் டி சப்ளிமென்ட் மற்றும் கால்சியத்தை ஆண்டு முழுக்க எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாழ்வியல் மாற்றம் அல்லது உடல் எடையைக் குறைப்பதற்காகவோ, நீங்கள் உணவு கட்டுப்பாடு அல்லது சில உணவுகளை தவிர்த்து வந்தால், குறிப்பிட்ட உணவிலிருந்து கிடைக்கும் சத்துகளை பெறுவதற்காக அதற்கான சப்ளிமென்டுகளை எடுத்துக்கொண்டால் நீங்கள் பலனடையலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

குறைவான கலோரிகளை கொண்ட உணவு கட்டுப்பாட்டை நீங்கள் பின்பற்றினால், மல்டிவைட்டமின்கள் உங்களுக்கு பயனளிக்கலாம். சப்ளிமென்டுகள் தேவைப்படும் சில உணவு கட்டுப்பாட்டு முறைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

நீங்கள் பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பவராக இருந்தால், கால்சியம் சப்ளிமென்டுகள் அல்லது கால்சியம் மாத்திரைகள் உங்களுக்கு பலனளிக்கலாம்.

பால் பொருட்களையும் தவிர்க்கக் கூடிய சைவம் சாப்பிடும் (Vegan) இருப்பவர்களுக்கு வைட்டமின் பி12 மற்றும் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து உண்டு, எனவே அவர்கள் அதற்கான சப்ளிமென்டுகளை எடுக்கலாம்.

மாதவிடாயின் போது மிகவும் பலவீனமாக உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படலாம்.

பிரிட்டன் தேசிய உணவு கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்து கணக்கெடுப்பின்படி, 35-49 வயதுக்குட்பட்ட 4.8% பெண்கள் இரும்புச்சத்து பற்றாக்குறை காரணமாக ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர், 12.5% பெண்கள் இரும்புச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்னர் நிச்சயம் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

குழந்தைகளின் நரம்புக் குழாய்களில் குறைபாடுகள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க ஃபோலிக் அமிலம் சப்ளிமென்டுகளை கர்ப்ப காலத்தின் முதல் 12 வாரங்கள் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

வைட்டமின் சி மாத்திரைகள் – உயிர் காப்பானா அல்லது நேர விரயமா?

வைட்டமின் மாத்திரைகள், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றை தடுக்க பலரும் வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். அது ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகவும் இருப்பதால் சிறந்த உணவாக கருதப்படுகிறது.

எனினும், தொற்று, உடல்நலக் குறைவு அல்லது சளி போன்றவற்றின் ஆரம்ப அறிகுறிகளை அது தடுக்கும் என்பதற்கு குறைவான ஆதாரங்களே உள்ளன.

அதிகப்படியான வைட்டமின் சி உடலில் சேமிக்கப்பட முடியாது என்பதால், அதை அதிகமாக நீங்கள் உட்கொள்ளும்போது சிறுநீர் வாயிலாக வெளியேறிவிடும்.

பொதுவாக, பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் சி இருக்கும்.

ஒரு ஆரஞ்சு பழத்தில் 70 மி.கி. வைட்டமின் சி உள்ளது, எனவே வைட்டமின் சி பற்றாக்குறை பெரும்பாலும் ஏற்படாது.

உடலுக்கு எவ்வளவு வைட்டமின்கள் தேவை?

வைட்டமின் மாத்திரைகள், உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் தேவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உங்கள் வயது, உடலுழைப்பு, பாலினம் மற்றும் மற்ற விஷயங்களை பொறுத்து மாறுபடும்.

ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவுப் பழக்கத்தின் மூலம் வைட்டமின் டி தவிர அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் கிடைத்துவிடும் என பெரும்பாலான நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனினும், பிரிட்டன் தேசிய உணவுப்பழக்கம் மற்றும் ஊட்டச்சத்து கணக்கெடுப்பின்படி, சிலரால் நிலையான உணவுப்பழக்கத்தைக் கடைபிடிக்க முடியவில்லை என்றும், எனவே சப்ளிமென்டுகளை எடுப்பதாகவும் கூறுகிறது. ஆனால் அதற்கு பதிலாக தங்களின் உணவுப்பழக்கத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமாக இருக்க ஐந்துவிதமான காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU