Home தேசிய national tamil சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபருக்கு ஆயுள் தண்டனை

1
0

SOURCE :- INDIAN EXPRESS

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் குற்றவாளிகள் மீது பதிவு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி, செப்டம்பர் 27 ஆம் தேதி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த நபர் தூங்கி கொண்டிருந்த சிறுமியின் அம்மாவை வாயை பொத்தியும் கை, கால்களை கட்டிபோட்டு, அவர் அணிந்திருந்த 1/4 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டும், பக்கத்து அறையில் இருந்த 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் பெறப்பட்டது. 

அதன்பேரில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெ.முகமது முஸ்தபா என்பவரை கைது செய்து, கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ (POCSO) சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, குற்றவாளி முகமது உசேன் மீது கடந்த 24.11.2022 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவட்சன் நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று 06.11.2024-ம் தேதி குற்றவாளிக்கு போக்சோ ச/பி 5/ 5(1), 5(h) r/w 6(1)- ன்படி ஆயுள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.5,000/- அபராதமும், 457 இ.த.ச. பிரிவின்படி 3 வருட சிறைத்தண்டனையும், ரூ.1,000/- அபராதமும், 342 இ.த.ச. பிரிவின்படி 1 வருட சிறைத்தண்டனையும், ரூ.1,000/- அபராதமும், 397 இ.த.ச. பிரிவின்படி 7 வருட சிறைத்தண்டனையும், ரூ.2,000/- அபராதமும், மற்றும் 506(ii) இ.த.ச. பிரிவின்படி 2 வருட சிறை தண்டனையும், ரூ.1,000/- அபராதமும், விதித்து தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5,00,000/- இழப்பீடுத்தொகை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சுமதி ஆஜராகி வழக்கு நடத்தி வாதாடினார்.

இவ்வழக்கில் உரிய காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் பாரட்டினார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

SOURCE : TAMIL INDIAN EXPRESS