Home தேசிய national tamil குவைத்தில் 3 அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்க யார் காரணம்? என்ன நடந்தது?

குவைத்தில் 3 அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்க யார் காரணம்? என்ன நடந்தது?

4
0

SOURCE :- BBC NEWS

எஃப்15 போர் விமானம், அமெரிக்கா, குவைத்

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

குவைத்தில் விழுந்து நொறுங்கிய மூன்று அமெரிக்க போர் விமானங்கள் குறித்த புதிய தகவலை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், தனது மூன்று எஃப்-15 போர் விமானங்கள் குவைத்தில் ‘தவறுதலாக’ சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க விமானப்படையின் போர் விமானங்கள் குவைத் வான் பாதுகாப்புப் படையினரால் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. “குவைத் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது, குவைத் வான் பாதுகாப்புப் படைகளின் முயற்சிகளுக்கும், நடைபெற்று வரும் நடவடிக்கையில் அவர்களின் ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.”

“ஏதேனும் புதிய தகவல்கள் தெரியவரும்போது, அவை பகிரப்படும்” என அறிக்கை தெரிவிக்கிறது.

குவைத், அமெரிக்க போர் விமானங்கள், இரான், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, பல அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அந்த விமானங்களில் இருந்த அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருந்தது.

‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஒரு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர், அதன் கீழ் விமானிகள் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்கள் அனைவரின் உடல் நிலையும் சீராக உள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்கப் படைகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும், கூட்டு தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

குவைத், அமெரிக்க போர் விமானங்கள், இரான், இஸ்ரேல்

இதற்கிடையில், இணையத்தில் வைரலான ஒரு வீடியோ அமெரிக்காவின் எஃப்15 போர் விமானம் விழுந்து நொறுங்குவதைக் காட்டுகிறது.

குவைத் தலைநகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜஹ்ரா நகரில் இந்த போர் விமானம் விழுந்து நொறுங்கியதாக அல் ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

குவைத் நகருக்கு அருகில் வானத்திலிருந்து அமெரிக்க போர் விமானம் ஒன்று தரையில் விழுவதைக் காட்டும் வீடியோ காட்சிகளை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ அல்-ஜஹ்ரா பகுதியின் எல்லையில் இருந்து எடுக்கப்பட்டது.

நேரில் பார்த்தவர்கள் கண்டது என்ன?

பிபிசி செய்தியாளர் பார்பரா பிளாட்-அஷர், கத்தாரிலிருந்து அளித்துள்ள அறிக்கையின்படி, ‘குவைத் நாட்டின் இராக் எல்லைக்கு அருகே பல அமெரிக்க போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியதாக குவைத் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்’.

இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்தும் வான்வழித் தாக்குதலின் மூன்றாவது நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதற்கிடையில், அண்டை அரபு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், குவைத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு சில நொடிகள் முன்னதாக, விமானி ஒருவர் இருக்கையிலிருந்து வெளியேறி பாராசூட் மூலம் பாதுகாப்பாகத் தரையிறங்குவதைக் காட்டியது.

வளைகுடா நாடுகள் இப்போது இந்தப் போரின் முன்னணி களமாக மாறியுள்ளன. தோஹா, துபாய் மற்றும் குவைத்தில் மீண்டும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூதரகக் கட்டடம் மீது குறி வைக்கப்பட்டதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இருப்பினும் அந்தப் பகுதியிலிருந்து கரும்புகை எழும்புவதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

குவைத், அமெரிக்க போர் விமானங்கள், இரான், இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

விழுந்து நொறுங்கிய விமானங்கள் எத்தகையவை?

கிறிஸ் பார்ட்ரிட்ஜ், பிபிசி

வீடியோ காட்சிகளில் காணப்படும் விமானம் எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் (Strike Eagle) அல்லது அதன் மாறுபட்ட வகையாகத் தெரிகிறது.

ஒரு பெரிய தொழில்நுட்பக் கோளாறைச் சந்தித்த பிறகு விமானம் ஒரு தட்டையான சுழற்சியில் செல்வதை வீடியோ காட்டுகிறது. இந்தக் கோளாறு எவ்வாறு ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை.

குவைத், இரானால் அதிகளவில் குறி வைக்கப்பட்டு வரும் நேரத்தில், பல அமெரிக்க போர் விமானங்கள் குவைத்தில் விழுந்து நொறுங்கியதாகவும், அவசர சூழல்களில் விமானிகள் வெளியேறியதாகவும் குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எஃப்-15இ ஸ்டிரைக் ஈகிள் என்பது வானிலிருந்து வான் மற்றும் வானிலிருந்து தரை இலக்குகள் என இரண்டையும் தாக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பல்நோக்கு போர் விமானமாகும். இந்த மோதலில் அவை என்ன பங்கு வகிக்கும் என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இரானிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை நடுவழியில் தாக்கி அழிப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் அவை ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இத்தகைய பணிகளில், அவை விமானத்திலுள்ள வெப்பத்தை உணர்ந்து தாக்கும் ஏவுகணைகள் (heat-seeking missiles), நீண்ட தூர ஏவுகணைகள் அல்லது நெருக்கமாக இருக்கும் போது ‘துப்பாக்கிகளை’ பயன்படுத்தலாம். லேசர் வழிகாட்டுதல் கொண்ட ராக்கெட் போன்ற பிற ஆயுதங்களும் அவர்களிடம் உள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU