Home தேசிய national tamil காணொளி: ‘புதிதாக 10% வரி’ – நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிரம்ப் பேசியது என்ன?

காணொளி: ‘புதிதாக 10% வரி’ – நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிரம்ப் பேசியது என்ன?

14
0

SOURCE :- BBC NEWS

காணொளி: ‘புதிதாக 10% வரி’ – நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிரம்ப் பேசியது என்ன?

7 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்தச் சூழலில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “வரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. நாட்டுக்காக சரியான முடிவெடுக்கத் தைரியம் காட்டாத சில நீதிபதிகள் குறித்து நான் மிகவும் வெட்கப்படுகிறேன். ஆனால் தாமஸ், அலிடோ, கவனா ஆகிய நீதிபதிகளுக்கு நான் நன்றி தெரிவித்து வாழ்த்துகிறேன்.”

“பல ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றி வந்த நாடுகள் இப்போது மகிழ்கின்றன. மகிழ்ச்சியில் அவர்கள் வீதியில் நடனமாடுகிறார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்காது என்பதை நான் உறுதியாக சொல்கிறேன்.”

“உச்ச நீதிமன்றம் அனைத்து வரிகளையும் ரத்து செய்யவில்லை. சர்வதேச நெருக்கடி பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வரி முறையையே அவர்கள் ரத்து செய்தனர். அடிப்படையில், இது கட்டணம் பெறப் பயன்படுகிறது. இந்தச் சட்டத்தை நான் பல வழிகளில் பயன்படுத்த முடியும். ஆனால் அதன் மூலம் நான் யார் மீதும் கட்டணம் விதிக்க முடியாது.”

“அதனால், உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பிரிவு 232 தேசிய பாதுகாப்பு வரிகளும், பிரிவு 301 கீழ் உள்ள தற்போதைய வரிகளும் முழுமையாக அப்படியே தொடரும். ஏற்கனவே வசூலிக்கப்படும் சாதாரண வரிகளுக்கு மேலாக பிரிவு 122 கீழ் 10% உலகளாவிய வரி விதிக்கும் உத்தரவை இன்று நான் கையெழுத்திடுவேன்.”

“இது சற்று சிக்கலான செயல்முறை. சிறிது கூடுதல் நேரம் எடுக்கும். ஆனால் இறுதியில் இது எங்களுக்கு அதிக வருவாயை தரும். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU