Home தேசிய national tamil காணொளி: சுயச்சார்பு விவசாயம் மூலம் ஊரையே மாற்றிய தலித் பெண்

காணொளி: சுயச்சார்பு விவசாயம் மூலம் ஊரையே மாற்றிய தலித் பெண்

2
0

SOURCE :- BBC NEWS

காணொளி: சுயச்சார்பு விவசாயம் மூலம் ஊரையே மாற்றிய தலித் பெண்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்திலுள்ள கத்வாடா கிராமத்தைச் சேர்ந்த தலித் விவசாயியான துவாரகா வாக்மாரே, தரிசாகக் கிடந்த மேய்ச்சல் நிலத்தில் புதியதொரு விவசாயப் பரிசோதனையைத் தொடங்கியுள்ளார்.

அவரது குடும்பத்தினர் வேலை தேடித் தொடர்ந்து இடம்பெயர்ந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று, ஆடு வளர்ப்புத் தொழிலும், அந்த மேய்ச்சல் நிலத்தில் அவர் தொடங்கியுள்ள விவசாயமும், அவரது குடும்பம் அந்தக் கிராமத்திலேயே நிரந்தரமாகக் குடியேற வழிவகுத்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, ‘ஜாகர் பிரதிஷ்டான்’, ‘மகிளா கிசான் மஞ்ச்’, ‘SOPPECOM’ போன்ற அமைப்புகளின் துணையுடன், அவர் சுயச்சார்பு விவசாய முறையைப் பின்பற்றி வருகிறார். இந்த அமைப்புகள் கிராமப்புற பெண்களுக்கு சூழலியல் சார்ந்த விவசாய முறைகள் குறித்த பயிற்சிகளை வழங்கி வருகின்றன.

விரிவாக காணொளியில்…

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU