SOURCE :- BBC NEWS

இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தில் ஏவுகணை வீசியது யார்?
4 மணி நேரங்களுக்கு முன்னர்
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று, ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தின் பிரதான முனையத்திற்கு அருகில் விழுந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
டெல் அவிவின் புறநகரில் உள்ள விமான நிலையத்திற்கு அருகில் ஏவுகணை விழுந்தது. ஆன்லைனில் வெளியிடப்பட்ட சரிபார்க்கப்படாத காட்சிகள், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள், கரும்புகையில் இருந்து தப்பிக்க தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதைக் காட்டுகிறது.
இந்த ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்ததாகவும், தப்பிச் செல்லும்போது மேலும் இருவர் காயமடைந்ததாகவும் அவசர சேவைகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
“எங்களைத் தாக்குபவர்களை ஏழு மடங்கு அதிக பலத்துடன் தாக்குவோம்” என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய விமான நிலையம் “இனி விமானப் பயணத்திற்கு பாதுகாப்பானது அல்ல” என ஹூத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா வெளியிட்ட தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU