Home தேசிய national tamil ஆஸ்திரேலியாவில் ஆண்டனி அல்பனீசி அலை – தேர்தலில் அபார வெற்றி

ஆஸ்திரேலியாவில் ஆண்டனி அல்பனீசி அலை – தேர்தலில் அபார வெற்றி

5
0

SOURCE :- BBC NEWS

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

4 மே 2025, 02:37 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆஸ்திரேலியாவின் பொதுத்தேர்தலில், பாரிய பெரும்பான்மையுடன் தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஆண்டனி அல்பனீசி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில், அடுத்தடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் முதல் பிரதமராக ஆண்டனி அல்பனீசி உள்ளார்.

“பிரதமராக பணியாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பெருமை. இந்த பூமியின் சிறந்த நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான வாய்ப்பளித்த ஆஸ்திரேலிய மக்களுக்கு நன்றி”, என்று தனது வெற்றி உரையில் ஆண்டனி அல்பனீசி கூறினார்.

அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை இன்னும் முடியடையவில்லை, ஆனாலும் அல்பனீசி தலைமையிலான தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை பெற்றுள்ளது. அதே நேரத்தில் லிபரல்- தேசிய கூட்டணி நாடு முழுவதும் படுதோல்வி அடைந்துள்ளது.

ஏபிசி செய்திகளின் கணிப்புகளின்படி, தொழிலாளர் கட்சி 85 இடங்களிலும், லிபரல்-தேசிய கூட்டணி 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது வரை 65 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாக உலக பொருளாதார நெருக்கடி, மற்றும் அந்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்து வந்த அதிருப்திக்குப் பிறகு, இந்த பொதுத் தேர்தலில் அல்பனீசி வெற்றி பெற்றிருப்பது முக்கிய திருப்புமுனையாக உள்ளது.

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

சனிக்கிழமை (மே 3) அன்று, தனது வெற்றி உரையில் ஆண்டனி அல்பனீசி, தனது தேர்தல் பிரசாரத்தில் பேசப்பட்ட சில முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டார். அவற்றில் புலம்பெயர்வு, காலநிலை மாற்றம், எரிசக்தி ஆகியவை அடங்கும்.

அப்போது அவர் தேர்தல் வாக்குறுதிகளை மீண்டும் குறிப்பிட்டார்

“சுகாதாரப் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பேன், குறிப்பாக பொது மருத்துவரை பார்ப்பது குறைந்த செலவில் இருக்க ஏற்பாடுகள் செய்து தருவேன். ஆஸ்திரேலிய மக்கள் பலர் சொந்தமாக வீடு வாங்குவதை எளிதாக்குவேன். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இன்னும் தீவிரமாக வேலை செய்வேன்”, என்று அவர் உறுதியளித்தார்.

ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்த உறுதியளித்தார்.

“பூர்வகுடி ஆஸ்திரேலிய மக்களுக்கும் மற்ற ஆஸ்திரேலிய மக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும்போது நாம் ஒரு வலிமையான நாடாக இருக்க முடியும்”, என்று அவர் கூறினார்.

ஆல்பனீசியின் மிக முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்றாக “தி வாய்ஸ்” என்பது பூர்வகுடி மக்களின் கருத்துக்களை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அமைப்பு.

ஆனால், பல மாதங்களாக நடந்த கடுமையான மற்றும் பிளவுபடுத்தும் தேசிய விவாதத்திற்குப் பிறகு, அது அந்நாட்டின் மக்களால் பெருமளவில் நிராகரிக்கப்பட்டது. இது அவருக்கு ஏற்பட்ட குறிப்பிடத்தக்க பின்னடைவாகும்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஆல்பனீசிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறையத் தொடங்கியது. இதனால் அவர் இந்த தேர்தலில் தோல்வியடைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

எதிர்கட்சி கூட்டணியாக லிபரல் – தேசிய கூட்டணியின் தலைவரான பீட்டர் டட்டன் இந்த பொதுத் தேர்தலில், தான் போட்டியிட்ட தொகுதியியான டிக்சனில் தோல்வியடைந்தது எதிர்கட்சிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது.

“நான் இந்த நாட்டை நேசிக்கிறேன், அதற்காக கடுமையாகப் போராடியிருக்கிறேன்,” என்று பிரிஸ்பேனில் ஆதரவாளர்களிடம் பேசிய பீட்டர் டட்டன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

”நம்மை எதிர்த்து போட்டியிட்டவர்கள், இந்த தேர்தலில் நம்மை பற்றி குறிப்பிட்டது உண்மையல்ல. ஆனால், நாம் மீண்டும் தொடங்கி கட்டியெழுப்புவோம். நாங்கள் இதை செய்வோம்,ஏனெனில் எங்களின் கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகள் குறித்து எங்களுக்கு தெரியும்.நாங்கள் தொடந்து அதில் உறுதியாக இருப்போம்”என்று அவர் தெரிவித்தார்

பிரசாரத்தில், பீட்டர் டட்டன் செய்த சில தவறுகள் குழப்பத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, சில கொள்கைகளை மாற்றி மாற்றி சொன்னது, விலை வாசி போன்ற முக்கிய விஷயங்களை பேசும்போது தவறு செய்தது போன்றவற்றை குழப்பத்தை ஏற்படுத்தின. குறிப்பாக ஆஸ்திரேலியன் ஃபுட்பல் லீக் (AFL) போட்டி ஒன்றில் பந்தை கேமராமேனின் தலையில் அடித்தது போன்ற சம்பவங்கள் அவரது பிரசாரத்திற்கு பின்னடைவாக அமைந்தன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

SOURCE : THE HINDU