Home தேசிய national tamil அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தையில் காத்திருக்கும் 5 சவால்கள்

அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தையில் காத்திருக்கும் 5 சவால்கள்

10
0

SOURCE :- BBC NEWS

இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை, பாகிஸ்தான், இஸ்லாமாபாத், இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம், Getty Images

பேச்சுவார்த்தைக்கான அரங்கம் தயார், பாதுகாப்பு பணியில் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், அணுகு சாலையை ஒட்டியுள்ள நடைபாதை கற்கள் மஞ்சள் மற்றும் கருப்பு நிற வண்ணம் பூசப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் காத்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்கா – இரான் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ள பாகிஸ்தான் நேர்மறையான குரலை வெளிப்படுத்தி வருகிறது. மற்றவர்களைப் போல அல்லாமல் இரு தரப்பின் நம்பிக்கையையும் தான் பெற்றிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது.

அமெரிக்க குழுவிற்கு தலைமை தாங்கும் துணை அதிபர் ஜேடி வான்ஸும் உற்சாகமாக இருக்கிறார்.

“இரானியர்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்தால் நாங்கள் நிச்சயமாக உதவிக்கரம் நீட்டத் தயாராக இருக்கிறோம்,” என அமெரிக்காவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு வான்ஸ் தெரிவித்திருந்தார்.

ஆனால் ஒரு எச்சரிக்கையையும் அவர் விடுத்தார். “அவர்கள் எங்களை ஏமாற்ற முயற்சித்தால், அப்போது பேச்சுவார்த்தை குழு மிகவும் இணக்கமாக இல்லை என்பதை அவர்கள் கண்டறிவார்கள்,” என்றார் அவர்.

மொத்தத்தில், மலையளவு தடைகள் எதிர்நோக்கி இருக்கின்றன என்பதை நிச்சயமாக தெரிவித்துக் கொள்ளலாம். அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தையில் காத்திருக்கும் 5 சவால்கள் என்ன?

பேச்சுவார்த்தை குழுவில் யாரெல்லாம் உள்ளனர்?

இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை, பாகிஸ்தான், இஸ்லாமாபாத், இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம், X/@IraninSA

அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவில் ஜேடி வான்ஸ் உடன் டிரம்பின் உறவினரான ஜாரெட் குஷ்னர் இடம்பெற்றுள்ளார். இவர் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். இவர்களுடன் அமெரிக்க அரசின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் இடம்பெற்றுள்ளார்.

இரான் பேச்சுவார்த்தைக் குழுவில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் கலிபாஃப்-உடன் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் இரான் மத்திய வங்கியின் ஆளுநர் அப்தோல்நேசர் ஹெம்மாட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை, பாகிஸ்தான், இஸ்லாமாபாத், இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம், Reuters

1. லெபனான்

இரானுக்கு லெபனானில் உள்ள கூட்டாளியான ஹெஸ்பொலாவுக்கு எதிரான இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கைகள், இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படுவதற்கு முன்பே சீர்குலைத்துவிடும் வேலையைச் செய்கிறது.

“இந்த நடவடிக்கைகள் தொடர்வது பேச்சுவார்த்தையை அர்த்தமற்றதாக்கிவிடும்,” என இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“எங்களின் விரல்கள் எப்போதும் தயாராகவே உள்ளன. எங்களின் லெபனான் சகோதரிகள் மற்றும் சகோதரர்களை இரான் எப்போதும் கைவிடாது.” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

லெபனான் என்று வருகையில் “எந்தப் போர்நிறுத்தமும் இல்லை” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆனால் பெய்ரூட்டில் தெற்கு புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் இடங்களை காலி செய்ய வேண்டும் என இஸ்ரேல் தொடர்ந்து கொடுத்து வரும் எச்சரிக்கைக்கு பின்னர் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

லெபனானில் இஸ்ரேல் எடுத்து வரும் நடவடிக்கைகள் “சற்றே முக்கியத்துவம் குறைவானதாக இருக்கும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் வாஷிங்டனில் நடைபெறும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் இது இரானை திருப்திபடுத்துமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2. ஹோர்மூஸ் நீரிணை

இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை, பாகிஸ்தான், இஸ்லாமாபாத், இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம், Reuters

பேச்சுவார்த்தைகளை ஆரம்பத்திலேயே முடக்கக்கூடிய மற்றுமொரு பிரச்னையாக முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையான ஹோர்மூஸ் நீரிணை உள்ளது.

இந்த நீரிணை வழியாக கப்பல்களை அனுமதிக்க முதலில் ஒப்புக்கொண்ட பிறகும் இரான் “மிக மோசமான வேலை செய்கிறது.” என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இரான் “மரியாதைக் குறைவாக நடக்கிறது” எனக் குற்றம் சாட்டும் டிரம்ப், “நாங்கள் செய்த ஒப்பந்தம் இதுவல்ல” என தனது ட்ரூத் சோசியல் பதிவில் தெரிவித்திருந்தார்.

சில கப்பல்களே ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ள நிலையில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கப்பல்களும் 20,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களும் வளைகுடாவிற்குள் சிக்கியுள்ளனர்.

இந்த முக்கியமான வழித்தடம் மீதான கட்டுப்பாட்டைச் சாதித்துள்ள இரான் அதனை முறைப்படுத்த முயல்கிறது. அதனை தனது நாட்டின் இறையாண்மை கொண்ட நீர்ப்பகுதி எனக் குறிப்பிடும் இரான் அதன் வழியாக எது செல்லலாம், எது செல்லக்கூடாது என்பதை தீர்மானிக்க புதிய விதிகளைக் கொண்டு வருவது பற்றியும் பேசி வருகிறது.

புதிய போக்குவரத்து பாதைகளை உருவாக்குவதாக வியாழன் அன்று இரான் அறிவித்துள்ளது.

கப்பல் நிறுவனங்கள் மத்தியில் உள்ள அச்சங்களைக் கவனமாக கையாளும் விதத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “முக்கியமான வழித்தடத்தில் கப்பல்களுக்கு எதிராக வைக்கப்பட்ட பல்வேறு வகையான கண்ணிவெடிகளைத் தவிர்க்க புதிய வழித்தடம் தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

சமீப வாரங்களில் சில கப்பல்கள் 2 மில்லியன் டாலர் வரை சுங்கக் கட்டணம் செலுத்தி அதனைக் கடந்து வந்ததாக செய்திகள் வெளியான நிலையில் “இரான் கப்பல்கள் மீது கட்டணம் விதிக்காமல் இருக்க வேண்டும்” என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

3. அணு சக்தி

மிகப்பெரிய மற்றும் நிச்சயமாக மிக நீண்ட விவாதத்திற்குரிய விஷயமாக அணு சக்தி உள்ளது.

ஆபரேஷன் எபிக் ஃபூரியைத் தொடங்கியதன் ஒரு பகுதி, இரான் “எப்போதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது” என்பது தான் என டிரம்ப் கூறியிருந்தார்.

தான் ஒருபோதும் அணுகுண்டு தயாரிக்க நினைக்கவில்லை என இரான் கூறிவருகிறது. ஆனால் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் இதனை சந்தேகத்துடனே பார்த்து வருகின்றன அதே வேளையில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடான இரான் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை தங்களுக்கு உள்ளது என்று கூறுகிறது.

“பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக, நடைமுறைக்கு உகந்ததாக உள்ளது.” என டிரம்ப் குறிப்பிட்டிருந்த இரானின் 10 அம்ச முன்மொழிவில் அதன் செறிவூட்டும் உரிமைகளுக்கான சர்வதேச அங்கிகாரம் பற்றிய கோரிக்கையும் உள்ளது.

டிரம்பின் சொந்த 15 அம்ச திட்டம் “இரானிய மண்ணில் அனைத்து யுரேனியம் செறிவூட்டலையும் இரான் நிறுத்த வேண்டும்” எனக் கோருகிறது. முன்னதாக, இது தொடர்பில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், “இரான் எப்போதும் ஆயுத ஆயுதமோ அல்லது அதனை உருவாக்கும் திறனையோ பெற்றிருக்காது.” எனத் தெரிவித்தார்.

2015-இல் இரானுடன் மேற்கொள்ளப்பட்ட ‘விரிவான கூட்டு செயல் திட்டத்தை’ (Joint Comprehensive Plan of Action) மேற்கொள்ள சர்வதேச பேச்சுவார்த்தையாளர்களுக்கு பல ஆண்டுகள் ஆயின. அதில் இந்த சிக்கலான விவகாரம் விரிவான, ஆழமான தகவல்களுடன் கையாளப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம் பற்றி விவாதிக்க இரு தரப்பும் தயாராக இருக்கிறதா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

4. இரானின் பிராந்தியக் கூட்டாளிகள்

லெபனானில் உள்ள ஹெஸ்பொலா, யேமனில் உள்ள ஹூத்திகள், காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் இராக்கில் உள்ள கிளர்ச்சிக்குழுக்கள் உள்ளிட்ட பிராந்தியக் கூட்டாளிகள் மற்றும் பினாமிகள் அடங்கிய இரானின் வலைப்பின்னல் அந்நாட்டிற்கு பிராந்திய செல்வாக்கை வழங்குகிறது. இதனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான நீண்டகால மோதல்களில் “முன்கள பதுகாப்பு” என இரான் அழைக்கும் அம்சத்தை பயன்படுத்த முடிகிறது.

அக்டோபர் 2023-இல் காஸா போர் தொடங்கியதில் இருந்து “எதிர்ப்பின் அச்சு” என இரான் அழைக்கும் இந்த வலைப்பின்னல் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிரிய முன்னாள் சர்வாதிகாரியான பஷர் அல்-அசாத்தின் ஆட்சி தற்போது இல்லை.

ஆனால் “தீமையின் அச்சு” என இஸ்ரேல் குறிப்பிடும் இந்த வலைப்பின்னல் தனது இருப்புக்கு அச்சுறுத்தலாகவும் முழுவதுமாக அழிக்கப்பட வேண்டும் என்றும் அந்நாடு தெரிவித்து வருகிறது.

இரானிய பொருளாதாரம் சவால்களைச் சந்தித்து வரும் வேளையில், பல இரானியர்கள் தங்களின் அரசாங்கம் வெளிநாட்டு சாகசங்களுக்கு செலவிடுவதைவிடவும் தங்களின் அன்றாட வாழ்க்கையை இலகுவாக்க அதிகமாக செலவிட வேண்டும் என விரும்புகின்றனர்.

ஆனால் தனது கூட்டாளிகளை கைவிட இரான் தயாராக இருக்கிறது என்பதற்கான சிறிய சமிக்ஞைகள் கூட இல்லை.

5. பொருளாதார தடைகளில் இருந்து நிவாரணம்

இரான் பல ஆண்டுகளாக கடுமையான சர்வதேச பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது. எந்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாகவும் அனைத்து அமெரிக்க மற்றும் சர்வதேச பொருளாதார தடைகள் நீக்கப்பட வேண்டும் என இரான் கோரிவருகிறது.

பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பான சுமார் 120 பில்லியன் டாலர் மதிப்புள்ள இரானின் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் வெள்ளிக்கிழமை அன்று கூறியிருந்தார்.

இது முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இரண்டு நடவடிக்கைகளில் ஒன்று என அவர் குறிப்பிட்டார் (லெபனானில் போர் நிறுத்தம் என்பது மற்றொன்று.)

ஆனால் இரண்டு வாரகால போர் நிறுத்தத்தை அறிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் அறிக்கையில் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிப்பது பற்றி எதுவும் இடம்பெறவில்லை. இந்தச் சூழலில் கலிபாஃப் எதைக் குறிப்பிடுகிறார் என்பதில் தெளிவில்லை.

பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு இவ்வளவு பெரிய சலுகைகளை வழங்க டிரம்ப் நிர்வாகம் தயாராக இருப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே தெரிவிகிறது.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் பிரச்னை உள்ளதா? கருத்துகள், அனுபவங்களை பகிர இங்கே கிளிக் செய்யவும்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU