Home தேசிய national tamil டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் முன் இந்தியாவின் பலவீனம் வெளிப்பட்டதா?

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை எதிர்கொள்ளும் முன் இந்தியாவின் பலவீனம் வெளிப்பட்டதா?

11
0

SOURCE :- BBC NEWS

வருண் சக்ரவர்த்தி

பட மூலாதாரம், Getty Images

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டி20 உலகக் கோப்பையின் 18வது போட்டியில் இந்திய அணி நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்தியா நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கை துரத்திய நமீபியா அணி 18.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

வருண் சக்ரவர்த்தி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நேற்றைய போட்டியில் இந்தியாவின் மிக வெற்றிகரமான பந்து வீச்சாளராக இருந்தார். ஹர்திக் மற்றும் அக்சர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.

இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்தார்.

ஹர்திக் பாண்ட்யா தனது 52 ரன்களுடன் இந்தியாவை இந்த ஸ்கோரை எட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

ஹர்திக் தனது ஆல்ரவுண்டர் பங்களிப்புக்காக ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நமீபியா டாஸ் வென்று முதலில் பந்து வீச தீர்மானித்தது.

முதல் போட்டியில் அமெரிக்காவை தோற்கடித்த போதிலும், இந்தியா ஆடும் லெவன் அணியில் இரண்டு மாற்றங்களைச் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா உடல்நலக்குறைவு காரணமாக இந்தப் போட்டியில் விளையாட முடியவில்லை. சஞ்சு சாம்சன் அவரது இடத்தில் திரும்பினார்.

முகமது சிராஜுக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ராவும் அணிக்குத் திரும்பினார்.

இஷான் கிஷனின் அபாரமான அரைசதம்

இஷான் கிஷன்

பட மூலாதாரம், Getty Images

சஞ்சு சாம்சன், இஷான் கிஷனுடன் சேர்ந்து இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தை அளிக்க முயன்றார். சஞ்சு 8 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்தார்.

இருப்பினும், இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில், பென் ஷிகோங்கோ சஞ்சுவை ஆட்டமிழக்கச் செய்து பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். இருப்பினும், இஷான் கிஷன், திலக் வர்மாவுடன் சேர்ந்து அதிரடியைத் தொடர்ந்தார், இந்தியாவின் ஸ்கோர் 4.3 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது.

ஆறாவது ஓவரில் இஷான் கிஷன் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் அடித்தார். கிஷன் 20 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.

முதல் பவர்பிளேக்குப் பிறகு, இந்தியாவின் ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எட்டியது. கிஷன் வேகமாக ரன்களை எடுத்தார், ஏழாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் இந்தியாவின் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்தது. இருப்பினும், எட்டாவது ஓவரின் முதல் பந்தில் ஒரு பெரிய ஷாட்டை அடிக்க முயன்றபோது கிஷன் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.

கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அவரது விக்கெட்டை ஜெரார்ட் எராஸ்மஸ் வீழ்த்தினார். பின்னர், முந்தைய போட்டியின் நாயகனான கேப்டன் சூர்யகுமார் யாதவும் நீண்ட நேரம் கிரீஸில் நீடிக்கத் தவறி, 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

பொறுப்பாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

பட மூலாதாரம், Getty Images

இதன் பின்னர் இந்தியாவின் ரன் ரேட் குறைந்தது. வேகத்தை அதிகரிக்க முயன்ற திலக் வர்மா 21 பந்துகளில் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தியா 11.5 ஓவர்களில் 124 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால் பின்னர் ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபேவுடன் சேர்ந்து ரன் ரேட்டை துரிதப்படுத்தினார். ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.

ஆனால் அவர் தனது அரைசதத்தை எட்டிய சிறிது நேரத்திலேயே பெவிலியன் திரும்பினார். பாண்ட்யாவின் 52 ரன்கள் எடுத்த இன்னிங்ஸில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அடங்கும்.

சிறிது நேரத்திலேயே, ஷிவம் துபே 16 பந்துகளில் 23 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

கடைசி இரண்டு ஓவர்களில் நமீபியா வலுவான ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இந்தியா 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியாக, இந்திய அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.

நமீபியா கேப்டன் ஜெரார்ட் எராஸ்மஸ் நான்கு ஓவர்களில் 20 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தானுக்கு “யோசனை” கிடைத்ததா?

18வது ஓவரின் தொடக்கத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 199 என்ற நிலையில் இருந்தது. ஆனால் நமீபியாவின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் வித்தியாசமான பந்து வீச்சு உத்திகளை பயன்படுத்தினார்.

சுழற்பந்து வீச்சில் வேறுபாடுகளை பயன்படுத்திய நிலையில், இந்தியா கடைசி இரு ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை முடித்தது. இது இந்திய அணிக்கு எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான ஸ்கோர் ஆகும்.

நமீபியா கேப்டன் எராஸ்மஸ் 20 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி வெற்றி பெற்ற போதும் வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இந்த போட்டி நல்ல சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்ட பாகிஸ்தான் அணிக்கு “சில யோசனைகளை” வழங்கியிருக்கலாம் என ஈஎஸ்பிஎன் இணையதளம் குறிப்பிடுகிறது.

பந்துவீச்சில் மீண்டு வந்த இந்திய அணி

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா குவித்த 209 ரன்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நமீபியா ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தது. நமீபிய தொடக்க வீரர்கள் 3.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்தனர்.

ஆனால், அர்ஷ்தீப் சிங் ஜான் ஃப்ரைலிங்கை பெரிய ஸ்கோர் எடுப்பதைத் தடுத்து, 22 ரன்களுக்கு அவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

லாரன் ஸ்டீன்காம்ப், ஜான் நிக்கோலுடன் சேர்ந்து, நமீபியாவின் இன்னிங்ஸை நிலைநிறுத்தி, பவர்பிளே முடிவில் அணியின் ஸ்கோரை 6 ஓவர்களில் 57 ரன்களாக உயர்த்தினார்.

ஆனால் எட்டாவது ஓவரில் பந்து வீச வந்த வருண் சக்ரவர்த்தி, போட்டியின் முதல் பந்திலேயே லாரனை வீழ்த்தினார். லாரன் 29 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்த ஓவரில், வருண் சக்ரவர்த்தி இரண்டு நமீபிய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் அக்சர் படேல் 11வது ஓவரில் மெய்டன் ஓவரை வீசி, மற்றொரு நமீபிய பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்தார்.

நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, நமீபிய பேட்டிங் வரிசை தடுமாறியது, 11 ஓவர்களுக்குள் அணியின் பாதி பேர் பெவிலியன் திரும்பினர். தனது அடுத்த ஓவரில், அக்சர் மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார், ஸ்கோர் 96 ரன்களில் இருந்தபோது, ​​ஆறு நமீபிய பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். இதன் பிறகு, இந்தியாவின் வெற்றி வெறும் சம்பிரதாயமாக இருந்தது.

ஹர்திக் பாண்ட்யா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி நமீபியாவை 116 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா தொடர்ச்சியாக பெறும் இரண்டாவது வெற்றி இது. இந்தியா இப்போது பிப்ரவரி 15 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU