Home தேசிய national tamil சாதி ‘பெருமை’ பேசுபவர்களை கண்காணிக்க சிசிடிவி பொருத்திய கிராமம்

சாதி ‘பெருமை’ பேசுபவர்களை கண்காணிக்க சிசிடிவி பொருத்திய கிராமம்

12
0

SOURCE :- BBC NEWS

அகில்யாநகர் மாவட்டத்தின் நெவாசா தாலுகாவில் உள்ள சௌந்தலா கிராமம் 'சாதியற்ற கிராமமாக' அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Kiran Sakale

“முன்பெல்லாம் இது ஒரு மாங், இது ஒரு மஹர், இது ஒரு மஹர்வாடா (தலித்துகளின் குடியிருப்பு) என்று சொல்ல முடியும். இனி அது நடக்காது. இனி நாங்கள் அனைவரும் ஒன்றாக நடப்போம்” என்கிறார் சௌந்தலா கிராமத்தைச் சேர்ந்த சரிகா போதக்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள அகில்யாநகர் மாவட்டத்தின் நெவாசா தாலுகாவில் உள்ள சௌந்தலா கிராமம் ‘சாதியற்ற கிராமமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஒரு சிறப்பு கிராம சபையில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரத்த தான முகாம் நடத்திய பிறகு, சாதி விடுதலைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“இந்தத் தீர்மானத்தில், பொது இடங்களில் சமூக பிரிவினையை உருவாக்கும் வகையிலோ அல்லது சாதியைக் குறிப்பிடும் வகையிலோ யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளோம். அரசியலமைப்பால் வழங்கப்பட்ட சமத்துவம் மற்றும் சகோதரத்துவக் கொள்கைகளை எவ்வாறு பின்பற்றவுள்ளோம் என்பது இந்தத் தீர்மானத்தின் மற்றொரு விஷயம்” என்று கிராம பஞ்சாயத்து தலைவர் சரத் அர்கடே கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “சமூக ஊடகங்களில், ஒவ்வொருவரும் தமது சாதியைப் பற்றி பெருமை பேசுவதை நாம் பார்க்கிறோம். பிற சாதியினரை எவ்வாறு சிறுமைப்படுத்துவது, அவர்கள் நமக்குக் கீழானவர்கள், நாம் அவர்களுக்கு மேலானவர்கள் என்பதை எப்படிக் காட்டுவது என்பதே இதன் நோக்கமாக இருக்கிறது. எனவே, சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகளை வெளியிடக் கூடாது என்று எங்கள் கிராம மக்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்” என்றும் விவரித்தார்.

‘சாதி அன்றாட வாழ்வில் தேவையில்லை’

சௌந்தலா கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 2,500.

இங்குள்ள மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது.

இங்குள்ள கிராம பஞ்சாயத்து சாதி ஒழிப்பு தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்தது ஏன்?

“எங்கள் அன்றாட வாழ்வில் சாதி எங்கும் குறிப்பிடப்படுவதில்லை, அதன் தேவையும் இருப்பதில்லை என்பதை நாங்கள் எப்போதும் உணர்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்பவர்கள். எனவே, நாளை எனக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டால், எனது அண்டை வீட்டாரின் சாதி அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் நான் அவரிடம் பணம் கேட்பேன். ஏனென்றால் கிராமத்தில் எங்களுக்குள் குடும்ப உறவுகள் உள்ளன” என்று பஞ்சாயத்து தலைவர் ஷரத் அர்கடே கூறுகிறார்.

கிராம மக்கள் இந்த முடிவின் மூலம் மனிதநேயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறார்கள்.

சௌந்தலா கிராமச் சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது சாதி ஒழிப்பு தீர்மானத்தை செயல்படுத்துவதை எளிதாக்கும் என்று பஞ்சாயத்துத் தலைவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Kiran Sakale

“இந்த முடிவு நல்ல முடிவுதான். ஏனென்றால், ஒருவர் பிறக்கும்போது, ​​எந்த சாதியில் பிறக்க வேண்டும், எந்த மதத்தில் பிறக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவருக்கு இருப்பதில்லை.

அவர் ஒரு மனிதனாகப் பிறந்து, மனிதனைப் போலவே நடந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை, மனிதனைப் போலவே நடத்த வேண்டும்” என்று அந்தக் கிராமத்தில் வசிக்கும் அமின் சயீத் கூறுகிறார்.

மேலும், “இந்தத் தீர்மானம் கிராமத்தில் சாதி மற்றும் மதப் பிரச்னையை முற்றிலுமாக ஒழிக்கும். இரண்டாவதாக, சாதி மற்றும் மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் உள்ளனர்.

சில இடங்களில் மதம் ஆபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை.” என்று கிராமவாசி பாபாசாகேப் போதக் தெரிவித்தார்.

ஷரத் அரகடே

பட மூலாதாரம், Kiran Sakale

‘சிவாஜி மகாராஜை அனைத்து சாதியினரும் பின்தொடர்ந்தனர்’

எது சாதி இல்லையோ அதுதான் சாதி என்று அழைக்கப்படுகிறது என்ற கருத்தை நாம் அடிக்கடி எல்லா இடங்களிலும் கேட்கிறோம்.

அவர்கள் உங்கள் குடும்பப் பெயரைக் கொண்டு உங்கள் சாதியைத் துல்லியமாகக் கண்டறியக் கூட முயற்சி செய்கிறார்கள். எனக்கும் பலமுறை இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருந்திருக்கலாம்.

ஆனால், சௌந்தலா கிராம பஞ்சாயத்து சாதி குறித்த இந்தப் பார்வையை மாற்ற பாடுபட்டுள்ளது. எதிர்கால சந்ததியினருக்கு இத்தகைய முடிவுகள் முக்கியம் என்று இங்குள்ள பெண்கள் கூறுகிறார்கள்.

சாதிப் பெருமிதம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த உதாரணங்கள் அடிக்கடி வெளிச்சத்திற்கு வருகின்றன. இதில் ஆணவக் கொலைகள் மற்றும் சமூகப் புறக்கணிப்பு போன்ற சம்பவங்களும் அடங்கும்.

பட மூலாதாரம், Kiran Sakale

“அடுத்த தலைமுறை இனி சாதியால் பிரிக்கப்படக்கூடாது. ஏனெனில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது, அவர்கள் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று நினைக்கிறார்கள். நீங்கள் அந்த ரீதியில் பார்த்தால், சிவாஜி மகாராஜை அனைத்து சாதியைச் சேர்ந்த மக்களும் பின்தொடர்ந்தார்கள். அவர் அப்படி இருந்தாரா இல்லையா?” என்கிறார் சரிகா போதக்.

சௌந்தலா கிராம சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது சாதி ஒழிப்பு தீர்மானத்தை செயல்படுத்துவதை எளிதாக்கும் என்று பஞ்சாயத்து தலைவர் கூறுகிறார்.

“கிராமத்தில் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அதேபோல் அந்த சிசிடிவி-க்களில் மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், யார் எதைக் குறிப்பிட்டார்கள், யார் என்ன சொன்னார்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

ஆனால், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய நாங்கள் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறோம்” என்று குறிப்பிடுகிறார் சரத் அர்கடே.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

‘மனித சாதி மட்டும்தான் உள்ளது’

சாதிப் பெருமிதம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்த உதாரணங்கள் அடிக்கடி வெளிச்சத்திற்கு வருகின்றன. இதில் ஆணவக் கொலைகள் மற்றும் சமூகப் புறக்கணிப்பு போன்ற சம்பவங்களும் அடங்கும்.

“ஒருவர் எதைப் பற்றிப் பெருமைப்பட வேண்டும்? நான் எவ்வளவு நல்லவன், என்னால் ஒருவருக்கு எந்தளவுக்கு உதவ முடியும்? நான் எவ்வளவு தாராள மனப்பான்மை கொண்டவன்? சமூகத்திற்கு எனது பங்களிப்பு என்ன? இதுதான் முக்கியம், இதைப் பற்றித்தான் நாம் பெருமைப்பட வேண்டும்” என்கிறார் பஞ்சாயத்துத் தலைவர் சரத் அர்கடே.

சாதி, மதம் மற்றும் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு நாம் மனிதர்களாக ஒன்றிணைய வேண்டும் என்று இங்குள்ள கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

நாம் சாதியிலிருந்து விடுபட்டால்தான் உண்மையான மாமனிதர்களை நாம் புரிந்துகொள்வோம் என்றும் கிராம மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU