SOURCE :- BBC NEWS
பட மூலாதாரம், Handout
புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் வேன் ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
”கேரளா மாநிலம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 13 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வாகனம், வால்பாறையில் சுற்றுலா முடித்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது” என கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Handout
”இந்த வாகனம், 13வது கொண்டை ஊசி வளைவை கடக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அதன் விளைவாக, வாகனம் சாலையிலிருந்து வழுக்கி 9வது கொண்டை ஊசி வளைவு நோக்கி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 9 பேர் (7 பெண்கள், ஒரு ஆண், ஒரு சிறுவர்) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 4 பேர் கடுமையாக காயமடைந்தனர்.” என்கிறது காவல்துறை.
பட மூலாதாரம், Handout
படுகாயமடைந்தவர்களில் 3 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும் ஒருவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையில் இருப்பதாகவும், உயிரிழந்த 9 பேரின் உடல்கள் பொள்ளாச்சி மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Handout
இந்நிலையில் இந்த கோர விபத்து குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு பிறகு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம், ”கேரள மாநிலத்தில் இருந்து வால்பாறை சாலக்குடிக்கு சுற்றுலா வந்துள்ளனர். பொள்ளாச்சி நோக்கி வரும்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து குடும்பத்தாருக்கும், மலப்புரம் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
SOURCE : THE HINDU



