Home தேசிய national tamil இந்திய மக்களை வகைப்படுத்த பிரிட்டிஷாருக்கு புகைப்படங்கள் உதவியது எப்படி?

இந்திய மக்களை வகைப்படுத்த பிரிட்டிஷாருக்கு புகைப்படங்கள் உதவியது எப்படி?

8
0

SOURCE :- BBC NEWS

பெண் நடனக் கலைஞர்கள் அல்லது நாச் பெண்கள், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம். பம்பாயில் (தற்போது மும்பை) முதன்முதலில் ஸ்டுடியோ அமைத்த ஐரோப்பிய புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான எட்வர்ட் டௌரின்ஸ் இந்தப் புகைப் படத்தை எடுத்தார். இவர் மேற்கத்திய பார்வையாளர்களுக்காக நகரத்தைக் காட்சிப்படுத்தும் புகைப்படங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

பட மூலாதாரம், DAG

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தியாவை அறிந்துகொள்வதற்கும் வகைப்படுத்துவதற்கும் பிரிட்டிஷ் பேரரசின் மிகவும் செல்வாக்கு மிக்க கருவிகளில் ஒன்றாகப் புகைப்படக்கலை மாறியது.

‘டைப்காஸ்டிங்: புகைப்படங்களில் இந்திய மக்கள், 1855-1920’ என்று அழைக்கப்படும் ஒரு புதிய கண்காட்சி – டெல்லியைத் தளமாகக் கொண்ட கலைக்கூடமான டிஏஜி-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது. சமூகங்களை வகைப்படுத்தவும், அடையாளங்களை நிலைநிறுத்தவும் மற்றும் இந்தியாவின் சிக்கலான சமூக வேறுபாடுகளை காலனித்துவ அரசாங்கத்திற்குப் புரியும் வகையில் மாற்றவும் கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்த சுமார் 200 அரிய புகைப்படங்களை இந்த கண்காட்சி ஒன்றிணைக்கிறது.

65 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் வடகிழக்கில் உள்ள லெப்சா மற்றும் பூட்டியா சமூகங்கள் முதல் வடமேற்கில் உள்ள அப்ரிடி வரை; நீலகிரியில் உள்ள தோடாக்கள் முதல் மேற்கு இந்தியாவில் உள்ள பார்சி மற்றும் குஜராத்தி மேல்தட்டு மக்கள் வரை ஒரு விரிவான மனித புவியியலை வரைபடமாக்குகிறது.

நடனப் பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள் என சமூக வரிசையின் கீழ்மட்டத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் மீதும் இது தனது பார்வையைத் திருப்புகிறது.

இந்த படங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்துவது மட்டுமல்ல; அவை பன்முகத்தன்மையைச் செதுக்கின, ஓடிக்கொண்டிருக்கிற, வாழ்ந்த உண்மைகளைத் தெளிவான மற்றும் அறியக்கூடிய “வகைகளாக” மாற்றின.

வரலாற்று ஆய்வாளர் சுதேஷ்ணா குஹாவால் தொகுக்கப்பட்ட இந்தக் கண்காட்சி, 1868 மற்றும் 1875-க்கு இடையில் வெளியிடப்பட்ட செல்வாக்கு மிக்க எட்டு தொகுதிகள் கொண்ட புகைப்பட ஆய்வான ‘தி பீப்பிள் ஆஃப் இந்தியா’ வின் படங்களை மையமாகக் கொண்டுள்ளது.

இந்த மையத்திலிருந்து தொடங்கி, அந்த காலத்தின் காட்சி மொழியை வரையறுக்க உதவிய சாமுவேல் பார்ன், லாலா தீன் தயாள், ஜான் பர்க் மற்றும் ஷெப்பர்ட் & ராபர்ட்சன் ஸ்டுடியோ போன்ற புகைப்படக் கலைஞர்களின் அல்புமென் மற்றும் சில்வர்-ஜெலட்டின் அச்சுப்படங்களையும் இது உள்ளடக்கியுள்ளது.

“ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தத் தொகுப்புகள் மானுடவியல் புகைப்படத்தின் வரலாற்றையும், பிரிட்டிஷ் நிர்வாகம் மற்றும் இந்திய மக்கள் மீது அது ஏற்படுத்திய தாக்கத்தையும் கூறுகின்றன. இது போன்ற அளவு மற்றும் ஆழம் கொண்ட ஒரு திட்டம் இதற்கு முன்பு இந்தியாவில் காணப்பட்டதில்லை,” என்கிறார் டிஏஜி-யின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ஆனந்த்.

கண்காட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே:

வரட்டி சுமந்து செல்லும் பெண்கள், பம்பாய், 1890, எட்வர்ட் டௌரின்ஸ் எடுத்தது. இங்கே, பெண்கள் வீட்டின் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களாகக் காட்டப்படுகிறார்கள் - பொதுவாக வீட்டிற்குள் செய்யப்படும் வீட்டு வேலைகள், ஆனால் கேமராவிற்காக வெளிப்புறத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், DAG

இந்தியப் பெண், பெலிக்ஸ் மோரின் எடுத்த புகைப்படம், 1890. இந்தக் கண்காட்சியில் உள்ள புகைப்படங்களில் பெண்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளனர். கவனமாக அமைக்கப்பட்ட இந்த காலனித்துவ கால உருவப்படம், அந்த காலத்தின் மானுடவியல் பார்வையையும் ஆரம்பகால புகைப்படத்தின் நேர்த்தியையும் படம்பிடிக்கிறது.

பட மூலாதாரம், DAG

பட மூலாதாரம், DAG

வீதி முடிதிருத்துபவர், அடையாளம் தெரியாத புகைப்படக் கலைஞர் எடுத்தது. இத்தகைய படங்கள் அடிக்கடி வீதி வணிகங்கள் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளைப் படம்பிடித்தன, சாதாரண உழைப்பை மானுடவியல் பொருள்களாக மாற்றின.

பட மூலாதாரம், DAG

பம்பாய் புகைப்பட சங்கத்தின் (Photographic Society of Bombay) நிறுவன உறுப்பினரான வில்லியம் ஜான்சன், 'பிராமணப் பெண்கள்' என்ற தலைப்பிலான இந்தப் புகைப்படத்தை 1857-ஆம் ஆண்டு 'தி இந்தியன் அமெச்சூர்ஸ் போட்டோகிராஃபிக் ஆல்பம்' -இல் வெளியிட்டார். அதனுடன் இணைக்கப்பட்ட உரையில், அந்த இரு பெண்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் இளமையானவர்கள் மற்றும் புத்திசாலிகள் என்று விவரித்திருந்தார். மேலும், அவர்கள் தங்களது தந்தையின் ஊக்கத்துடனும் கணவர்களின் ஆதரவுடனும் ஒரு மிஷன் பள்ளியில் ஆங்கிலம் கற்க பம்பாயில் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், DAG

ஒரு பார்சி குழுவினர், ஒருவேளை வில்லியம் ஜான்சன் எடுத்திருக்கலாம், ஒரு காலனித்துவ பங்களாவின் முன் அமர்ந்துள்ளனர் - காலனித்துவ கட்டடக்கலை உலகில் இருந்துகொண்டே, தங்களது உடை மற்றும் நடத்தை மூலம் தங்களது தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.

பட மூலாதாரம், DAG

இளம் பூட்டியாக்கள் குழு, 1890. இந்தத் தொகுப்பில் சிக்கிம், பூடான் மற்றும் திபெத்தைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்களும் உள்ளன - இவை பிரிட்டிஷ் ஆட்சிக்கு அப்பாற்பட்ட பகுதிகள். லெப்சாக்கள், பூட்டியாக்கள் மற்றும் திபெத்தியர்களை பெஞ்சமின் சிம்சன்  புகைப்படம் எடுத்தார்.

பட மூலாதாரம், DAG

மகாராஷ்டிராவின் பண்டைய பௌத்த குடைவரைக்கோயில்களில் இசைக்கலைஞர்கள், சார்லஸ் ஸ்காட் எடுத்த புகைப்படம், தேதி குறிப்பிடப்படவில்லை.

பட மூலாதாரம், DAG

சிங்கப்பூரில் ஓர் இந்தியக் குடும்பம், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. சில படங்கள் மலாய் தீபகற்பம், சிங்கப்பூர் மற்றும் வங்கதேசத்தின் சிட்டகாங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களையும் சித்தரிக்கின்றன.

பட மூலாதாரம், DAG

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU