Home தேசிய national tamil இந்தியாவில் குடிநீர் மற்றும் பீர் விலை உயர இரான் போர் ஏன் காரணமாகக் கூடும்?

இந்தியாவில் குடிநீர் மற்றும் பீர் விலை உயர இரான் போர் ஏன் காரணமாகக் கூடும்?

13
0

SOURCE :- BBC NEWS

இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

4 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

ஆனால், இரானுடனான போர் இந்தியாவின் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாட்டில் குடிநீர் துறையை ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெறுவதில் பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர்.

கடந்த மாதம், சந்தையில் முன்னணியில் இருக்கும் ‘பிஸ்லெரி’ நிறுவனம் தனது விலையை 11% உயர்த்தியது. இதன் மூலம் 12 ஒரு லிட்டர் பாட்டில்கள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 24 ரூபாய் ($0.26) அதிகரித்துள்ளது.

பெய்லி மற்றும் கிளியர் பிரீமியம் வாட்டர் போன்ற பிராண்டுகளும் விலையை உயர்த்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘டேட்டா ஃபார் இந்தியா’ ஆய்வின்படி, நகர்ப்புறங்களில் சுமார் 15% குடும்பங்களும், கிராமப்புறங்களில் 6% குடும்பங்களும் தங்களின் குடிநீர் தேவைக்காக பாட்டில் தண்ணீரை நம்பியுள்ளனர்.

பாட்டில் தண்ணீரைச் சார்ந்திருப்பது செலவுமிக்கது, குறிப்பாகக் கிராமப்புற மக்களுக்கு செலவுமிக்கது.

இருப்பினும், நீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர் மாசு மற்றும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாகக் கோடையில், சுத்தமான குடிநீர் கிடைப்பது ஒரு சவாலாகவே உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t

நீண்டகாலப் போர் நீடித்தால், அத்தியாவசியப் பொருளான குடிநீர் பல இந்தியர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று பிராண்டுகளும் பாட்டில் உற்பத்தியாளர்களும் எச்சரிக்கின்றனர்.

உலகின் 20% எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) பொதுவாக ‘ஹோர்மூஸ் நீரிணை’ வழியாகவே செல்கிறது, இது தற்போது ஈரானால் கிட்டத்தட்ட முடக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை, எரிபொருள் விலையை விண்ணைத் தொட வைத்துள்ளது.

தன்னுடைய உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் இந்தியா, இந்த அழுத்தத்தை உணர்கிறது.

மகாராஷ்டிரா பாட்டில் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விஜய்சின்ஹ் துப்பல் தெரிவிக்கையில், “பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கப்படும் குடிநீர் விலை உயர முக்கியக் காரணம் கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு தான்” என்கிறார்.

பிரெண்ட் கச்சா எண்ணெயின் (Brent crude oil) விலை இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு பேரலுக்கு119 டாலரை தொட்டது, இது ஈரான் போர் தொடங்கிய காலத்திலிருந்து பதிவான உச்சபட்ச விலைக்கு நெருக்கமானதாகும்.

கச்சா எண்ணெய் ‘பாலிஎதிலீன் டெரெப்தாலேட்’ ரெசின் துகள்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது – இந்தத் துகள்கள் சூடுபடுத்தப்பட்டு அச்சுக்கள் வழியாகச் செலுத்தப்பட்டு ‘PET பிரீஃபார்ம்கள்’ உருவாக்கப்படுகின்றன.

பிளாஸ்டிக் சோதனைக்குழாய்கள் போலத் தோற்றமளிக்கும் இந்த பிரீஃபார்ம்கள், பிராண்டுகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் விற்கப்பட்டு, பின்னர் அவை தேவையான வடிவம் மற்றும் அளவிலான பாட்டில்களாக மாற்றப்படுகின்றன.

கச்சா எண்ணெய் 'பாலிஎதிலீன் டெரெப்தாலேட்'  ரெசின் துகள்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது - இந்தத் துகள்கள் சூடுபடுத்தப்பட்டு அச்சுக்கள் வழியாகச் செலுத்தப்பட்டு 'PET பிரீஃபார்ம்கள்' உருவாக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

“பிரீஃபார்ம்களின் விலை ஒரு கிலோவிற்கு 115 ரூபாயிலிருந்து சுமார் 180 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் அவற்றின் விநியோகத்திலும் தட்டுப்பாடு நிலவுகிறது,” என்று கூறும் துப்பல், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 20% பாட்டில் உற்பத்தி ஆலைகள் தற்காலிகமாகச் செயல்பாட்டை நிறுத்திவிட்டதாகக் கூடுதல் தகவலைத் தந்துள்ளார்.

சில நிறுவனங்கள் விலையை உயர்த்தியிருந்தாலும், பல பிராண்டுகள் மற்றும் விற்பனையாளர்கள் இதுவரை அந்த கூடுதல் சுமையைத் தாங்களே ஏற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களைப் பாதுகாத்து வருவதாக துப்பல் கூறுகிறார்.

இதனால், 20 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பாட்டில் அல்லது 60-70 ரூபாய்க்கு விற்கப்படும் ஐந்து லிட்டர் கேன்களின் விலை பெரும்பாலும் மாறாமல் உள்ளது.

“ஆனால் கூடுதல் செலவுகளை நிறுவனங்களே ஏற்பது நீண்ட காலத்திற்குச் சாத்தியமில்லை. நிலைமை மோசமடைந்தால், வாடிக்கையாளர்கள் அந்த பாதிப்பை உணர நேரிடும்,” என்கிறார் அவர்.

இந்தியாவின் உச்சக்கட்ட கோடை மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாட்டில் குடிநீர் மற்றும் குளிர்பானங்களுக்கான தேவை அதிகரிக்கும் சூழலில், இந்த விநியோகத் தட்டுப்பாடு மிகவும் மோசமான நேரத்தில் வந்துள்ளதாக அவர் வருந்துகிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய PET பிரீஃபார்ம் விநியோகஸ்தர்களில் ஒருவரான ‘செம்கோ பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ்’ இயக்குநர் வைபவ் சாரோகி கூறுகையில், “பிரீஃபார்ம் விலையேற்றம் குடிநீர் துறையை மட்டுமல்லாது ஒட்டுமொத்த பேக்கேஜிங் துறையையும் பாதிக்கும்” என்கிறார்.

இந்தியாவின் PET பேக்கேஜிங் சந்தை 2024-ல் 1.5 பில்லியன் டாலராக இருந்தது, இது 2033-ல் 2.2 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவகங்களிலும் PET பேக்கேஜிங் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

கண்ணாடி பாட்டில் உற்பத்தியாளர்களும் இந்தப் போரின் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. ஹைனெகன் மற்றும் கார்ல்ஸ்பெர்க் போன்ற உலகளாவிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ‘இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம்’, கண்ணாடி பாட்டில்களின் விலை சுமார் 20% உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.

மேலும், பீர் விலையை 12-15% உயர்த்த அனுமதிக்குமாறு மாநில அரசாங்கங்களை அந்தச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. (இந்தியாவில் மதுபான விலையை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விதமாகக் கட்டுப்படுத்துகின்றன).

மருந்து நிறுவனங்கள் மற்றும் மதுபான ஆலைகளால் அதிகம் பயன்படுத்தப்படும் ‘ஆம்பர்’ கண்ணாடி பாட்டில்களைத் தயாரிக்கும் ‘விட்ரம் கிளாஸ்’ சிஇஓ வித்தோப் ஷெட் கூறுகையில், “இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கமே இந்த விலை உயர்வுக்குக் காரணம்” என்கிறார்.

மணல், சோடா ஆஷ், சுண்ணாம்பு மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடிகளை உருக்கி பாட்டில்களாக மாற்றும் உலைகளை இயக்க கண்ணாடி உற்பத்தியாளர்களுக்கு இயற்கை எரிவாயு தேவைப்படுகிறது.

கண்ணாடி பாட்டில் உற்பத்தியாளர்களும் இந்தப் போரின் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. ஹைனெகன் மற்றும் கார்ல்ஸ்பெர்க் போன்ற உலகளாவிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 'இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம்', கண்ணாடி பாட்டில்களின் விலை சுமார் 20% உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் போர் தொடங்கியதிலிருந்து இந்தியா தனது இயற்கை எரிவாயு விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது, உள்நாட்டுப் பயன்பாடு மற்றும் சில வணிகத் தொழில்களுக்கே முன்னுரிமை அளிக்கிறது.

இயற்கை எரிவாயு விநியோகம் 20% குறைக்கப்பட்டுள்ளதால், உலைகளை இயக்குவது கடினமாக இருப்பதாக ஷெட் கூறுகிறார்.

விட்ரம் கிளாஸ் போன்ற சில நிறுவனங்கள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க எண்ணெயைப் பயன்படுத்துகின்றன, ஆனால் கச்சா எண்ணெயின் அதிக விலை உற்பத்திச் செலவை எகிற வைக்கிறது.

நாட்டின் எரிசக்தி விநியோகம் சீராக இருப்பதாக இந்திய அரசு தெரிவித்தாலும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகப் போர் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் பல வணிக உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த எரிசக்தி நெருக்கடி இந்தியாவின் பீங்கான் மற்றும் உரத் துறைகளையும் பாதித்துள்ளது. அதே நேரத்தில் விமானத் துறையும் எரிபொருள் விலை உயர்வால் தத்தளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

“நிலைமை தீவிரமாகஉள்ளது. தண்ணீர் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள், அவற்றில் ஏற்படும் சிறிய விநியோகக் குறைவு கூட மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்,” என்று எச்சரிக்கிறார் ஷெட்.

பிரச்னைகளைப் பேசுவோம்
Get in touch

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

SOURCE : THE HINDU